யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பிரம்பனன் கோயிலுக்கு இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோவுடன சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள சிவாலயத்தில் வழிபாடு மேற்கொண்டார்.
மூன்று நாள் பயணமாக நேற்று முன்தினம் (ஜூலை 6) இந்தோனேசியா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தின் கடைசி நாளான இன்று யோக்யகர்த்தா நகரில் உள்ள யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பிரம்பனன் கோயிலுக்கு இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோவுடன் சென்றார்.
இந்தோனேசியாவின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையிலான...
மும்பையில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களில் 1,100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இதனால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக, ஜூலை 6-ம் தேதி ஒரே நாளில் 523 மரங்கள் விழுந்துள்ளன. கோரேகான், குர்லா, மாதுங்கா மற்றும் தாதர் ஆகிய பகுதிகள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம்...
மேற்கு வங்கத்தில் 11 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபாஸ் மண்டலின் முகத்தைக் காணவோ, உடலை பெற்றுக்கொள்ளவோ விரும்பவில்லை என்று அவரது தாய் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவின் புறநகர் பகுதியான பருய்பூரைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஜூலை 4-ம் தேதி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். ஜூலை 5-ம் தேதி, பருய்பூரில் உள்ள ஒரு குளத்தில் சாக்குப்பையில் அடைக்கப்பட்ட...
மேற்கு வங்கத்தில் 11 வயது சிறுமி கூட்டு பாலியல் படுகொலை சம்பவம்: முக்கிய குற்றவாளி என்கவுன்ட்டரில் உயிரிழப்பு
admin - 0
மேற்கு வங்கத்தில் 11 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி போலீஸ் என்கவுன்ட்டரில் உயிரிழந்தார்.
மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பரூய்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாஸ் மோண்டல். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி தனிமையான ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். பிறகு ஆனந்த் சர்தார், திவாகர் சர்தார் என்ற இருவருடன்...
மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களின் மழை, வெள்ளம், நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து அம்மாநில முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மகாராஷ்டிராவில், குறிப்பாக மும்பையில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் செவ்வாய்க்கிழமை சற்று நிம்மதி கிடைத்த நிலையில், நேற்று மீண்டும்...
ஜார்க்கண்டில் வங்கி ஊழியரின் அலட்சியத்தால் முதியவர் உயிரிழப்பு: வங்கியின் முன்பு சடலத்துடன் பழங்குடியினர் ஆர்ப்பாட்டம்
admin - 0
ஜார்க்கண்ட் மாநிலம் கார்வா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரத்தன் லக்ரா. பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர் அங்குள்ள ஜார்க்கண்ட் கிராமீன் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தார். மேலும் அரசிடமிருந்து வரும் பென்ஷன் பணமும் அந்த வங்கிக் கணக்கிலேயே சேர்ந்து வந்தது.
இந்நிலையில் ரத்தன் லக்ராவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சிகிச்சை பெறுவதற்கு பணம் தேவைப்பட்ட நிலையில் ரத்தன் லக்ராவின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸில் அழைத்து வந்துள்ளனர்....
லிப்ட் கேட்டு லாரியில் ஏறி, டிரைவரிடமிருந்து ரூ.20 ஆயிரத்தை திருடிய போலீஸ் எஸ்.ஐ. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
உ.பி. மாநிலம் ஹமீர்பூரை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், அண்மையில் லாரி டிரைவர் ஒருவரிடம் லிப்ட் கேட்டு ஹமீர்பூருக்குச் சென்றுள்ளார். ஹமீர்பூரில் போலீஸ் எஸ்.ஐ இறங்கிய பின்னர் லாரியிலிருந்த தனது பணம் ரூ.20 ஆயிரம் மாயமானதை டிரைவர் அறிந்தார். இதனிடையே அந்த எஸ்.ஐ. தனது வாகனத்தில் ஏறிச் சென்றார்.
இதையடுத்து போலீஸ் எஸ்.ஐ. இந்தப் பணத்தைத்...
“உங்கள் அரசின் திட்டங்களை பின்பற்றுகிறேன்” – பிரதமர் மோடி முன்னிலையில் இந்தோனேசிய அதிபர் பேச்சு
admin - 0
பிரதமர் நரேந்திர மோடியின் பணிகளை தான் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், அவரது பல திட்டங்களை இந்தோனேசியாவில் செயல்படுத்தியுள்ளதாகவும் அந்நாட்டின் அதிபர் பிரபோவோ சுபியாண்டோ தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் பயணமாக இந்தோனேசியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோவை அதிபர் மாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து, அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, பிரதமர் நரேந்திர மோடிக்கு மதிய விருந்தளித்தார். பிரதமர் மோடி முன்னிலையில் விருந்து நிகழ்ச்சியில் பேசிய...
கேரள மாநிலம் வயநாட்டில் சுரங்கப்பாதை சாலை கட்டுமானப் பணி நடைபெறும் இடத்துக்கு அருகே ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த நிலச்சரிவுக்கு அங்கு நடைபெற்ற சுரங்கப்பாதை பணிகளே காரணம் என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோழிக்கோடு மற்றும் வயநாட்டை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் வயநாடு சுரங்கப்பாதை சாலை திட்டத்தின் (அனக்கம் பொயில் - கல்லாடி - மேப்பாடி) நுழைவாயில் அருகே,...
கடந்த 2008ம் ஆண்டு அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேரின் மரண தண்டனையை குஜராத் உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் ஹட்கேஷ்வர் உள்ளிட்ட 21 இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 56 பேர் கொல்லப்பட்டனர். 246-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஹர்கத் உல் ஹிகாத் அல் இஸ்லாமி என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த வழக்கை அகமதாபாத்...










