காமன் காஸ் அமைப்பு தாக்கல் செய்த பொது நல மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
காமன் காஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறும்போது, “தேர்தலின்போது கட்சிகள் பண பலத்தை பயன்படுத்துவது ஜனநாயகத்தை பாதிக்கிறது. தேர்தல் செலவின கட்டுப்பாடுகள் இருந்தாலும் அது வேட்பாளருக்கு மட்டுமே பொருந்துவதாக உள்ளது" என்று வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், பொதுநல மனு...
ஆஸ்திரியாவில் அந்நாட்டு பிரதமர் கார்ல் நெகம்மரைச் சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி, உக்ரைன் - ரஷ்யா விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து எடுத்துரைத்தார். அப்போது, 'இது போருக்கான நேரம் அல்ல' என்ற தனது முந்தைய கருத்தை மீண்டும் அவர் உறுதிப்படுத்தினார்.
ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு இரண்டு நாள் பயணமாக நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை) ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆஸ்திரியா பிரதமர் கார்ல் நெகம்மர், பிரதமர் மோடியை...
பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. பாஜக எம்எல்ஏக்கள் 7 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் பாஜகவை சேர்ந்த சஞ்சய் சரோகி, சுனில் குமார், ஜிபேஷ் மிஸ்ரா, மோதிலால் பிரசாத், கிருஷ்ண குமார் மந்தூ, ராஜுகுமார் சிங், விஜய் குமார் மண்டல் ஆகிய 7 எம்எல்ஏக்கள் நேற்று கேபினட்...
குஜராத் நகரசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட முஸ்லிம்களில் 63 சதவிகிதம் பேருக்கு வெற்றி கிடைத்துள்ளது. இதனால், ஆளும் கட்சி பாஜகவுக்கு முஸ்லிம்கள் ஆதரவு திரும்புவதாகக் கருதப்படுகிறது.
இந்தியாவில் கடந்த 1980 வரை முஸ்லிம்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்தனர். பிறகு பிராந்தியக் கட்சிகளுக்கு ஆதரவாக அவர்களது வாக்குகள் மாற தொடங்கின. குஜராத்தில் பிப்ரவரி 2002 மதக்கலவரத்துக்கு பின் பாஜகவுக்கு வுக்கு எதிராக முஸ்லிம்கள் வாக்களித்தனர்.
இந்நிலையில், கடந்த 2007 முதல்...
நிதிஷ் குமாரின் மகன் அரசியலில் இறங்குகிறாரா? – தொடர்ந்து வற்புறுத்தும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர்
admin - 0
ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவர் நிதிஷ்குமார் பிஹாரில் 9-வது முறையாக முதல்வராக உள்ளார். பாஜக தலைமையிலான என்டிஏ அல்லது ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மெகா கூட்டணி என அவருக்கு மாறி, மாறி ஆதரவு கிடைக்கிறது. தற்போது என்டிஏ சார்பில் அவர் முதல்வராக இருக்கிறார்.
நிதிஷ் குமாரின் ஒரே மகனான நிஷாந்த் குமார், மெர்சாவில் உள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினீயரிங் கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளார். தற்போது சொந்த ஊரில்...
மேகாலயாவில் தேனிலவு சென்ற இடத்தில் கணவன் கொலை: காதலனுடன் வாழ ஆசைப்பட்டு கூலிப்படை வைத்து கொன்ற மனைவி
admin - 0
மேகாலயாவில் தேனிலவு சென்ற இடத்தில் புது மாப்பிள்ளையை கூலிப்படை வைத்து கொன்றதாக இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவரது காதலன் உள்ளிட்ட மேலும் 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்சி (28). இவருக்கு சோனம் என்ற பெண்ணுடன் கடந்த மே 11-ம் தேதி திருமணம் ஆனது. இதையடுத்து புதுமணத் தம்பதி தங்கள் தேனிலவை கொண்டாட மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சிக்கு...
இயற்கையை பாதுகாப்பது இந்தியாவின் கலாச்சாரம்: உலக வன உயிரின தினத்தில் பிரதமர் மோடி பெருமிதம்
admin - 0
உலக வன உயிரின தினத்தையொட்டி குஜராத்தில் கிர் தேசிய பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று சிங்கங்களை பார்வையிட்டார். இயற்கையை பாதுகாப்பது இந்தியாவின் கலாச்சாரம் என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டு உள்ளார்.
கடந்த சனிக்கிழமை இரவு பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் ஜாம் நகருக்கு சென்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜாம்நகரில் அமைந்துள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் 3,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட வன்தாரா வனப்பகுதியை அவர் பார்வையிட்டார். இது யானைகள் சரணாலயமாக...
கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடந்த சென்னபட்டணா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் யோகேஷ்வரை ஆதரித்து அம்மாநில அமைச்சர் ஜமீர் அகமது கான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், மத்திய அமைச்சர் குமாரசாமியை ‘கருப்பன்' என விமர்சித்தார்.
இதற்கு பாஜகவினரும் மஜதவினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஜமீர் அகமது கான் மன்னிப்பு கோரினார். மேலும் குமாரசாமி தன்னை, ‘‘குள்ளன்'' என உருவக்கேலி செய்ததாக குற்றம்சாட்டினார். இதனால் காங்கிரஸார் குமாரசாமியை கடுமையாக விமர்சித்தனர்.
இதுகுறித்து...
பிஹாரில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற காவலர் தேர்வு வினாத்தாள் கசிவு பல மாநிலங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது.
கடந்த 2024-ம் ஆண்டு நீட் இளநிலை மருத்துவப் படிப்புக்கான கேள்வித் தாள் தேர்வுக்கு முன்பே வெளியாயின. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் ஏற்கெனவே நடைபெற்ற பல அரசுத் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இதே கும்பலுக்கு பிஹாரில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற காவலர் தேர்வு வினாத்தாள் மோசடியிலும் தொடர்பு...
கேரளா அங்கன்வாடி சத்துணவில் உப்புமாவுக்கு பதில் பிரியாணி, பொரிச்ச கோழி கேட்ட சிறுவன்: அமைச்சர் ஏற்பு
admin - 0
அங்கன்வாடி சத்துணவில் உப்புமாவுக்கு பதில் பிரியாணி, பொரிச்ச கோழி வேண்டும் என சிறுவன் விடுத்த வேண்டுகோளை கேரள அமைச்சர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த சிறுவன் சாங்கு. இவனுக்கு பிரியாணி மிகவும் பிடித்த உணவு. ஆனால் இவன் செல்லும் அங்கன்வாடியில் அடிக்கடி உப்புமா வழங்குகின்றனர். இது சிறுவனுக்கு பிடிக்கவில்லை. ‘‘அங்கன்வாடியில் உப்மாவுக்கு பதில் பிரியாணியும், பொரிச்ச கோழியும் வேண்டும்’’ என சிறுவன் சாங்கு கூறியதை அவனது தாய் செல்போனில் வீடியோ...










