முஸ்​லிம்​களின் புனித நகர​மான மெக்​காவை குறி​வைத்து ஏமனின் ஹவுதி கிளர்ச்​சி​யாளர்​கள் நேற்று முன்​தினம் நடத்​திய ட்ரோன் தாக்​குதல் முறியடிக்​கப்​பட்​ட​தாக சவுதி அரேபியா தெரி​வித்​துள்​ளது. இந்​நிலை​யில் 47 ஆண்​டு​களுக்கு முன்​, 1979 நவம்​பர் 20-ம் தேதி மெக்​கா​விலுள்ள கிராண்ட் மசூ​தியை 600 பேர் கொண்ட ஆயுதக் குழு​வினர் முற்​றுகை​யிட்ட நிகழ்வு தற்​போது வைரலாகி வரு​கிறது. 1979-ல் காபாவைச் சுற்றி அமைந்​துள்ள கிராண்ட் மசூ​தி​யான மஸ்​ஜித் அல் ஹராமில் விடியற்​காலை தொழுகை முடிந்த...
அமெரிக்காவில் வசித்து வந்த இந்தியர் ஒரு​வர் திருமண​மான 17-வது நாளி​லேயே சடல​மாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்​கா​வின் மசாசூசெட்ஸ் மாகாணம் லோவெல் நகரில் வசித்து வந்​தவர் 28 வயதான முகமது ஜாபர் ஹுசைன். இவர் தெலங்​கானா மாநிலம் ஹைத​ரா​பாத்​தி​லுள்ள சந்​தோஷ் நகரைச் சேர்ந்​தவர். 2021-ல் உயர்​கல்விக்​காக அமெரிக்கா சென்ற முகமது ஜாபர், படிப்பை முடித்த பின்​னர் அங்​கேயே சிவில் இன்​ஜினீய​ராக வேலை பார்த்து வந்​தார். இந்​நிலை​யில், கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி இவருக்கு...
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரை கூடுதல் சுங்க வரி விதிக்க வகை செய்யும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. இதற்கு இந்தியா எதிர்வினையாற்றியுள்ளது. ரஷ்யா மற்றும் ஈரான் மீது தடைகளை விதிக்கும் ‘லின்ட்சே ஓ கிரகாம் சட்டம் 2026’ மசோதா, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் 262 - 159 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக ஆகஸ்ட் 7-ம் தேதி இந்த...
கடும் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான் அரசு, நாடு முழுவதும் ஊரடங்கு போன்ற கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை அந்நாட்டு அமைச்சரவைப் பிரிவு வியாழக்கிழமை வெளியிட்டது. உடனடியாக அமலுக்கு வந்துள்ள இந்த விதிகளின்படி, கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இரவு 9 மணிக்குள் மூடப்பட வேண்டும். திருமண மண்டபங்கள் இரவு 10 மணிக்கும், உணவகங்கள் இரவு 11 மணிக்கும் அடைக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது....
இந்தியா உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 93 உறுப்பினர்களும், எதிராக 29 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இந்தியா உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த வாக்கெடுப்பு நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில், ஒப்பந்தத்துக்கு ஆதரவாக 93 உறுப்பினர்கள் வாக்களித்தனர். எதிராக 29 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதன்மூலம், பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை இந்த ஒப்பந்தம் பெற்றுள்ளது. ஆளும் தேசிய கட்சி மட்டுமின்றி, எதிர்க்கட்சியான தொழிலாளர்...
ஈ​ரான் போரால் கடந்த 5 மாதங்​களில் மட்​டும் அமெரிக்க ராணுவத்​துக்கு ரூ.3.65 லட்​சம் கோடி இழப்பு ஏற்​பட்​டிருக்​கிறது. அமெரிக்​கா, ஈரான் இடையி​லான போர் பாதிப்​பு​கள் குறித்து அமெரிக்க நாடாளு​மன்ற பட்​ஜெட் அலு​வல​கம் (சிபிஓ) ஆய்வு நடத்தி அறிக்​கை வெளி​யிட்டு உள்​ளது. அதில் கூறி​யிருப்​ப​தாவது: ஈரானுக்கு எதி​ரான போரில் அமெரிக்க ராணுவம் அதிநவீன ஏவு​கணை​கள், வெடிகுண்​டு​களை பயன்​படுத்தி உள்​ளது. உதா​ரண​மாக ஒரு குறிப்​பிட்ட தாக்​குதலுக்கு மட்​டும் 50-க்​கும் மேற்​பட்ட டோமாஹாக் ஏவு​கணை​கள் பயன்​படுத்​தப்​பட்டு...
சவுதி அரேபி​யா, ஏமனின் ஹவுதி கிளர்ச்​சிப் படை இடையே போர் தீவிரமடைந்து வரு​கிறது. புனித மெக்கா நகரை குறி​வைத்து ஹவுதி கிளர்ச்​சிப் படை நேற்று நடத்​திய ட்ரோன் தாக்​குதல் வெற்​றிகர​மாக முறியடிக்​கப்​பட்​டது. ஏமன் நாட்​டில் ஹவுதி கிளர்ச்​சிப் படை, பிஎல்​சி, எஸ்​டிசி ஆகிய 3 குழுக்​கள் தனித்​தனி​யாக ஆட்சி நடத்தி வரு​கின்​றன. இந்த மூன்று குழுக்​களும் பரஸ்​பரம் மோதலில் ஈடு​பட்டு வரு​கின்​றன. இதில் ஹவுதி கிளர்ச்​சிப் படைக்கு ஈரானும், பிஎல்​சி-க்கு...
சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 60 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்பிரிக்க நாடான சூடானின் மேற்கு கோர் டோபன் மாகாணத்தில் எல்-நஹொட் நகருக்கு அருகே அல்-சாரா என்கிற தங்கச் சுரங்கம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இந்த சுரங்கத்தில் தொழிலாளர்கள் வழக்கம் போல் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சுரங்கத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. சுரங்கத்துக்குள் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் இதன் இடிபாடுகளில்...
ரஷ்யா மற்றும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை கொள்முதல் செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது 100 சதவீதம் வரை கூடுதல் சுங்க வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 'லின்ட்சே ஓ கிரகாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடை சட்டம் 2026' என்று அழைக்கப்படும் இந்த மசோதா பிரதிநிதிகள் சபையில் தாக்கல்...
ஏமனின் தெற்குப் பகுதியில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 13 பொதுமக்கள் காயமடைந்ததை அடுத்து, ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சவுதி அரேபியா எச்சரித்துள்ளது. ஏமனில் உள்நாட்டுப் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபிய ஆதரவு பெற்ற அரசுப் படைகளுடன் மீண்டும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஏமனின் செங்கடல் கடற்கரை மற்றும் பாப் அல்...