Google search engine
திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று (ஜூலை 4) இந்தியாவுக்கான முக்கிய செய்தியை வெளியிட்டுள்ள சீன வெளியுறவு அமைச்சகம், “உள்நாட்டு விவகாரங்களில் தலையிட திபெத் பிரச்சினையைப் பயன்படுத்துவதை இந்தியா நிறுத்தும் என்று சீனா நம்புகிறது. மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துவதை இந்தியா தவிர்க்கும் என்றும் நம்புகிறது.” என்று தெரிவித்துள்ளது. திபெத்திய புத்த மதத் தலைவரான...
நேபாளத்தில் இடைக்கால அரசின் பரிந்துரையை ஏற்று, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. மேலும், அடுத்த ஆண்டு மார்ச் 5-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அதிபர் ராம் சந்திரா பவுதெல் அறிவித்துள்ளார். நேபாளத்தில் அரசியல்வாதிகளின் பிள்ளைகள், தொழிலதிபர்கள், பணக்காரர்களின் வாரிசுகள் பணத்தை தண்ணீர்போல செலவழிப்பது, ஆடம்பர வாழ்க்கை வாழ்வது, அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு சந்தோஷமாக இருப்பது பொதுமக்களை எரிச்சலடைய செய்தது. இந்த செயல்பாடுகளை சமூக வலைதளங்களில் இளைஞர்கள் கடுமையாக விமர்சனம்...
சீன கடற்படையில் 234 போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள் உட்பட 370 கப்பல்கள் உள்ளன. அந்த நாட்டு கடற்படையில் மொத்தம் 60 நீர்மூழ்கிகள் உள்ளன. இதில்12 நீர்மூழ்கிகள் அணு சக்தியில் இயங்கக்கூடியவை. இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீன கடற்படையின் நீர்மூழ்கி கடலுக்கு அடியில் பாறையில் மோதியது. இதில் மொத்தம்55 பேர் உயிரிழந்தனர். இந்தவிபத்து, உயிரிழப்பு குறித்து சீனஅரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த சூழலில் சீனாவின் புதியஅணு சக்தி நீர்மூழ்கி...
ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வைரம் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக போட்ஸ்வானா விளங்குகிறது. உலகின் மொத்த வைர உற்பத்தியில் சுமார் 20 சதவீதம் இங்கு உற்பத்தியாகிறது. இந்நிலையில் இங்கு கனடாவின் லூகாரா டைமண்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு சுரங்கத்தில்இருந்து சுமார் 2,492 காரட் வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது உலகின் இரண்டாவது மிகப் பெரிய வைரமாக கருதப்படுகிறது.1905-ல் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட 3,106 காரட்கல்லினன்...
வங்கதேச நாடாளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டது. அந்த நாட்டில் புதிய இடைக்கால அரசு அமைக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக ஆலோசிக்க மாணவர் சங்கங்களுக்கு ராணுவம் அழைப்பு விடுத்துள்ளது. வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகளின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து பல்வேறு மாணவர் சங்கங்கள் கடந்த ஜூனில் போராட்டம் தொடங்கினர். இது நாடுமுழுவதும் பெரும் கலவரமாக மாறியது.கடந்த 2 மாதங்களில் மட்டும் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.இந்த சூழலில் தலைநகர் டாக்காவில் நேற்று முன்தினம் 4...
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லாரன்ஸ் வான் என்ற பெண் கடந்த1993-ம் ஆண்டு டெலிகாம் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.பகுதி பக்கவாதம் மற்றும் வலிப்புநோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு ஏற்ற பணி தொடக்கத்தில் வழங்கப்பட்டது. கடந்த 2002-ம் ஆண்டு, வேறுபகுதிக்கு பணியிடம் மாற்றம் பெற்று சென்றார். அங்கு அவருக்குஏற்ப வேலை வழங்கவில்லை. இதனிடையே 2013-ல் இந்நிறுவனம் ஆரஞ்ச் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. லாரன்ஸ்வானுக்கு எந்த பணியையும் வழங்கவில்லை. இது தொடர்பாக வாசன்ஹோவ் நீதிமன்றத்தில்...
வங்கதேசத்தில் கல்வி, அரசுவேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீடு 7 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 93 சதவீதம் தகுதியின் அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும் என்று அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. கடந்த 1971-ம் ஆண்டில் வங்கதேசம் உதயமானது. அப்போதுபாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான போரில் உயிர்த்தியாகம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு 40 சதவீதம், பெண்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 80 சதவீத...
ரூ.700 கோடி செலவில் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். 2 நாள் பயணமாக பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) வந்துள்ளார். நேற்று முன்தினம் துபாய் வந்த பிரதமர் மோடி, அந்த நாட்டு அதிபர் முகமதுபின் சையது அல் நஹ்யானை சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் இடையே துறைமுகம், முதலீடு, எரிசக்தி, வர்த்தகம், டிஜிட்டல் பணப்...
மத்திய நேபாளத்தில் மதன்-ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பயணிகள் பேருந்துகள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த பேருந்துகளில் 63 பயணிகள் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, திரிசூலி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக, மதன் - ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில், சாலையில் சென்றுகொண்டிருந்த இரண்டுப் பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. இரண்டு பேருந்துகளிலும் 63...
இலங்கையில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையின் மலைப்பகுதிகள் நிறைந்த ஆன்மிக நகரமான கதரகாமாவிலிருந்து நேற்று புறப்பட்ட அரசுப் பேருந்து, குருநேகலா நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 70 பேர் பயணித்துள்ளனர். மலைப்பாங்கான கோட்மலி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு...