Google search engine
உத்​தர பிரதேசத்​தில் மோசடி கும்​பலிடம் சிக்​கி​யிருந்த 453 நேபாள குடிமக்​கள் மீட்​கப்​பட்​டுள்​ளனர். இந்​திய எல்​லைப் பகு​தி​களில் நேபாள நாட்​டினரின் உழைப்பு சுரண்​டப்​படு​வ​தாக​வும் அந்​நாட்​டினர் மோசடி செயலில் ஈடுபடுத்தப்​படு​வ​தாக​வும் உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்​தது. இதன் அடிப்​படை​யில், உத்தர பிரதேச மாநிலம் குஷி நகரின் பல இடங்​களில் காவல் துறை​யினர் கடந்த வாரம் சோதனை நடத்தினர். இதில் மோசடி கும்​பலின் பிடி​யில் இருந்த 115 பெண்​கள் மற்​றும் 338 ஆண்​கள் உட்பட...
இந்​தி​யா​வில் 180 நாட்​களுக்கு மேல் தங்கி வசிக்க விரும்​பும் வெளி​நாட்​டுப் பிரஜைகளுக்​கான பதிவு விதி​களில் மத்திய அரசு மாற்​றம் செய்​துள்​ளது. இதன்​படி, 180 நாட்​கள் தங்​கும் காலம் முடிவடைந்த பிறகு பதிவு செய்​வதற்கு பதிலாக, அவர்​கள் அதற்கு முன்பே தங்​களை பதிவு செய்து கொள்​வது இனி கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது. மாற்​றப்​பட்ட விதி​களின்​படி, 180 நாட்​கள் அல்​லது அதற்​கும் குறை​வான கால அவகாசம் கொண்ட விசாக்​களில் இந்திய வரு​வோர், அனு​மதி காலத்தை நீட்​டிக்க விரும்​பி​னால்,...
வரும் 2028ல் நடை​பெறும் தேர்​தலில் தெலங்கானா​வில் ஜனசேனா போட்​டி​யிடும் என்று அக்​கட்​சி​யின் தலை​வர் பவன் கல்​யாண் கூறி​னார். தெலங்​கானா மாநிலத்​தின் 13-வது உதய தினம் நேற்று வெகு விமரிசை​யாக கொண்​டாடப்​பட்​டது. தெலங்​கானா உதய​மான நாளை கொண்​டாட ஜனசேனா கட்சி ஹைத​ரா​பாத்​தில் பொதுக்கூட்​டத்​துக்கு ஏற்​பாடு செய்​தது. ஆனால் சட்​டம் ஒழுங்கு பிரச்​சினையை காரணம் காட்டி தெலங்கானா போலீ​ஸார் இதற்கு அனு​மதி தர மறுத்துவிட்​டனர். இதற்கு எதி​ராக தாக்​கல் செய்​யப்​பட்ட மனுவை அவசர மனு​வாக...
மகா​ராஷ்டி​ரா​வின் துலே நகரில் இருந்து மாநில அரசுப் பேருந்து ஒன்று நேற்று குஜராத் மாநிலம் சூரத் நோக்கி வந்து கொண்​டிருந்​தது. இந்​தப் பேருந்து சூரத் மாவட்​டத்​தின் பர்​டோலி தாலுகா உவா-​ மானேக்​பூர் கிராமத்​துக்கு அரு​கில் கட்​டுப்​பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்​டிருந்த டிராக்​டர் மீது மோதி​யது. மோதிய வேகத்​தில் அந்​தப் பேருந்து சாலை​யின் நடுவே இருந்த தடுப்​பைத் தாண்டி எதிர்​திசை​யில் வந்து கொண்​டிருந்த மற்றொரு மகா​ராஷ்டிர அரசுப் பேருந்து மீது...
ஒன்​றரை வயது ஆண் குழந்​தையை, வளர்ப்பு தந்தை அடித்து கொலை செய்து உள்​ளார். அந்த குழந்​தை​யின் உடலில் 51 இடங்​களில் பலத்த காயங்​கள் இருந்​தன. இது தொடர்பாக குழந்​தை​யின் தாயும், வளர்ப்பு தந்​தை​யும் கைது செய்​யப்​பட்டு உள்​ளனர். கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்​டம், நெடுமங்​காடு அருகே​யுள்ள பனவூரைச் சேர்ந்​தவர் அகிலா (24). இவரது கணவர் அகில் இரு ஆண்​டு​களுக்கு முன்பு தற்​கொலை செய்து கொண்டார். கணவரை இழந்த அகிலா ஒன்​றரை...
இந்​தியா - அமெரிக்கா இடையி​லான வர்த்தக ஒப்பந்தப் பேச்​சு​வார்த்தை 99% நிறைவடைந்​துள்​ள​தாக மத்​திய அமைச்​சர் பியூஷ் கோயல் கூறி​னார். இந்​தியா - அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்​பந்​தம் தொடர்​பான பேச்​சு​வார்த்தை பல மாதங்​களாக நடை​பெற்று வருகிறது. இதில் முதல்​கட்​ட​மாக ஒரு இடைக்​கால ஏற்​பா​டாக இரு தரப்​புக்​கும் இடையே தற்​காலிக வர்த்தக ஒப்​பந்​தம் ஏற்படுத்தப்படும் என்​றும் பிறகு நிரந்தர வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும் என்​றும் இரு நாடு​களும் அறி​வித்​தன. இந்​நிலை​யில் இந்​தியா...
திரிண​மூல் காங்​கிரஸ் தலை​வர் மம்தா பானர்ஜி தலை​மை​யில் நேற்று நடந்த கூட்​டத்தை அந்த கட்​சி​யின் 60 எம்எல்​ஏக்​கள் புறக்​கணித்​தனர். மேற்​கு ​வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்​துள்​ளது. திரிண​மூல் காங்​கிரஸுக்கு 80 இடங்​கள் மட்​டுமே கிடைத்​தன. இந்த சூழலில் திரிண​மூல் எம்பிக்கள் அபிஷேக் பானர்​ஜி, கல்​யாண் பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்​பாக கட்சி எம்​எல்​ஏக்​கள் கூட்டத்துக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்​தார். இதன்​படி கொல்​கத்​தா​வில்...
தமிழகத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனா உட்பட 5 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்துள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான கொலீஜியம் கூட்டம் கடந்த மே 22, 27-ம் தேதிகளில் நடைபெற்றது. இதில், பஞ்சாப் -ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசேகர்,...
 நீட் மறுதேர்வை கணினி வழி முறையில் நடத்தக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தற்போதைய சூழலில் தேர்வு முறையை மாற்றுவது நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்று கூறி நிராகரித்தது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மாதம் 3-ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 22.05 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வுக்கு முன்னதாக ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஹரியானா, பிஹார், கேரளம்,...
இந்தியா வந்துள்ள மியான்மர் அதிபர் யு மின் ஆங் ஹ்லைங் பிரதமர் மோடியைச் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் அதிக ஒத்துழைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா வந்துள்ள மியான்மர் அதிபர் யு மின் ஆங் ஹ்லைங், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று செய்தியாளர்களிடம்...