சாலையில் தீப்பற்றி எரிந்த காரில் போலி ரூ.2000 நோட்டு கட்டுகள்: நாட்றாம்பள்ளி போலீஸார் தீவிர விசாரணை
admin - 0
நாட்றாம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில், காரில் இருந்த போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தீயில் கருகின.
சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்தவர் அபி நரசிம்மன் (58). இவர், மேட்டூரில் இருந்து சென்னைக்கு நேற்று காரில் பயணித்தார். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அடுத்தபையனப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்தபோது கார்திடீரென தீப்பற்றியது. உடனடியாக சாலையோரம் காரை நிறுத்தினார். சிறிது நேரத்தில்...
1984-ல் கடத்தப்பட்ட விமானத்தில் என் தந்தையும் இருந்தார்: மத்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தகவல்
admin - 0
1984-ல் நடந்த ஏர் இந்தியா விமானக் கடத்தலின்போது எனதுதந்தையும் விமானத்தில் சிக்கியிருந்தார் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
கடந்த 1999-ம் ஆண்டு டிசம்பர்24-ம் தேதி ‘ஐசி 814' என்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம்154 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் நேபாள தலைநகர் காத்மாண்டுவிலிருந்து புறப்பட்ட 40 நிமிடங்களில் 5 தீவிரவாதிகளால் ஆப்கானிஸ்தானுக்கு கடத்தப்பட்டது. பின்னர். மசூத் அசார், உமர்ஷேக் மற்றும் முஷ்டாக்அகமது சர்கார் ஆகிய மூன்று தீவிரவாதிகள் சிறையிலிருந்து...
டெல்லியில் மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து, டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவால் பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் 21-ம்தேதி கைது செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து கடந்த ஜூன் 26-ம் தேதி சிபிஐ-யும் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தது. இந்த கைதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், தனக்கு...
ஹரியானாவில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. மீதமுள்ள 1 தொகுதி சிபிஐ (எம்) கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஹரியானாவில் வரும் அக்டோபர் 5-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நேற்றோடு முடிவடைய இருந்த நிலையில், காங்கிரஸ் தனது வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட்டது. கடந்த சில...
உத்தர பிரதேசம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ஹில்டன் பப்ளிக் பள்ளியில் மதியம் சாப்பிட இறைச்சி பிரியாணி கொண்டுவந்த மாணவனை அந்த பள்ளி வெளியேற்றியுள்ளது.
பள்ளியில் இறைச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மதிய உணவு சாப்பிட 7 வயது மகனுக்கு இறைச்சி பிரியாணி கொடுத்திருக்கிறார் தாய். இதையடுத்து, அந்த மாணவன் பள்ளியில் இருந்து வெளியேற்றப்படுவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது. உடனடியாக பள்ளிக்கு வந்த மாணவனின் தாய்க்கும் பள்ளி முதல்வருக்கும் இடையில் வாக்குவாதம்...
உத்தர பிரதேச மதரஸா கல்வி வாரியம் அரசமைப்புக்கு எதிரானது என்று கூறி அங்குள்ள மதரஸாக்களில் பயிலும் மாணவர்களை வழக்கமான பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல்மாதம் தடை விதித்தது. இந்நிலையில் இந்த வழக்குத் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அதில்,...
திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் வெளி மாநில கலைஞர்கள் பங்கேற்பார்கள்: திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்
admin - 0
திருப்பதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் வரும் அக்டோபர் 4-ம் தேதி தொடங்க உள்ளது. 12-ம்தேதி வரை நடைபெறும் இவ்விழாவின் முதல்நாளில் ஆந்திர அரசு சார்பில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரங்களை சுவாமிக்கு காணிக்கையாக வழங்கஉள்ளார். அன்று இரவு முதல், வாகன சேவைகள் தொடங்குகின்றன.
பிரம்மோற்சவ விழாவில் தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளில் உற்சவரான மலையப்பர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அப்போது தினமும் 2 வாகனங்களில்...
குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலையில் விரிசல் என சமூக ஊடகத்தில் வதந்தி பரப்பியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட சிவாஜி மகராஜ் சிலை சமீபத்தில் உடைந்து விழுந்தது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியால் குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் கெவாடியா நகரில் கடந்த 2018-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் சிலையில் (ஒற்றுமை சிலை) விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும்,...
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, இந்தியாவில் மத சுதந்திரம் இல்லை. குறிப்பாக சீக்கியர்கள் தலைப்பாகை அணிவதற்கே போராட வேண்டி உள்ளது என கூறியிருந்தார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறும்போது, “ராகுல் கருத்து மோசமானது. வெளிநாட்டில் இந்தியாவை பற்றி ஆபத்தான கதைகளை பரப்பி வருகிறார்” என்றார். இந்நிலையில்,...
ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை புல்டோசர் மூலம் அழிக்க விடாமல் பாட்டில்களை அள்ளிய பொதுமக்கள்: வீடியோ வைரல்
admin - 0
பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்களை சாலையில் கொட்டி, புல்டோசர் மூலம் அழிக்க முயன்றபோது பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து, பாட்டில்களை அள்ளிச் சென்றனர். இதுதொடர்பான வீடியோ தற்போது ஆந்திராவில் வைரல் ஆகி வருகிறது.
ஆந்திர மாநிலத்தில் கடந்த மே மாதம் சட்டப்பேரவை, மக்களவைக்கு ஒரே சமயத்தில் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நேரத்தில் சட்டவிரோதமாக கொண்டு சென்ற மதுபான பாட்டில்கள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோன்று, சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட மதுபானபாட்டில்களையும்...









