Google search engine
உத்​தர பிரதேச மாநிலத்​தில் பெய்து வரும் கனமழை காரண​மாக, அங்​குள்ள வாராணசி​யில் கங்கை ஆற்​றின் நீர்மட்டம் அபாய எச்​சரிக்கை அளவைத் தாண்​டிச் செல்​கிறது. இதையடுத்​து, மாவட்ட நிர்​வாகம் அனைத்து படகு சேவைகளையும் நிறுத்தி வைத்​ததுடன், வெள்​ளத்​தால் பாதிக்​கப்​பட்ட பகு​தி​களில் கண்​காணிப்​பை​யும் தீவிரப்​படுத்​தி​யது. மேலும், பக்​தர்​கள் மற்​றும் பொது​மக்​கள் படித்​துறை​களுக்​குச் செல்ல வேண்​டாம் என்​றும், நீரோட்​டம் அதி​க​மாக உள்ள பகு​தி​களுக்​குள் செல்ல வேண்​டாம் என்​றும் நிர்​வாகம் அறி​வுறுத்​தி​யது. இந்​நிலை​யில், வாராணசி மக்​கள​வைத் தொகுதி...
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின் போது, நீர்வளத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் சத்யேந்தர் ஜெயின். அப்போது, டெல்லி குடிநீர் வாரியம் சார்பில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துதல் மற்றும் தரம் உயர்த்துதல் தொடர்பான டெண்டர் யூரோடெக் என்விரான்மென்டல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாக ஊழல் தடுப்புப் பிரிவு குற்றம் சாட்டியது. குறிப்பாக, பல்வேறு இடைத்தரகர்கள் மூலம் கமிஷன் தொகைகள் குற்றம்சாட்டப்பட்ட பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதற்கான...
பாகிஸ்தான் எப்​-16 போர் விமானத்தை வீழ்த்​திய குரூப் கேப்​டன் அபிநந்தன் வர்த்​த​மான், இந்​திய விமானப்படையில் இருந்து விலகி கோவாவை சேர்ந்த ‘பிளை 91’ என்ற தனி​யார் விமான நிறு​வனத்​தில் இணைந்​துள்​ளார். 2019 பிப்​ர​வரி 14 புல்​வாமா தாக்​குதலுக்​குப் பதிலடி​யாக, இந்​தியா பாகிஸ்​தானின் பால​கோட் மீது வான்​வழித் தாக்​குதல் நடத்​தி​யது. மறு​நாளே இந்​திய எல்​லைக்​குள் நுழைய முயன்ற பாகிஸ்​தான் போர் விமானங்​களை, அன்​றைய விங் கமாண்​டர் அபினந்​தன் தனது மிக்-21 பைசன்...
திரு​மலை திருப்பதி தேவஸ்​தானத்​தின் இணை நிர்வாக அதி​காரி லோக​நாதத்​தை, வரு​மானத்​திற்கு அதி​க​மாகச் சொத்து சேர்த்​த​தாக திருப்​பதி லஞ்ச ஒழிப்புத் துறை அதி​காரி​கள் நேற்று காலை கைது செய்​தனர். மேலும், இவர் கலப்பட நெய் விவகாரத்​தி​லும் ரகசி​ய​மாகத் தொடர்​பில் இருந்​தார் என்ற குற்றச்சாட்டும் எழுந்​துள்​ளது. திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தில், ஏழு​மலை​யான் கோயில் வளாகத்​திற்​குள் இணை நிர்​வாக அதி​காரி​யாகப் பணி​யாற்றி வருபவர் லோக​நாதம். இவர் கடந்த ஒய்​.எஸ்​.ஆர். காங்​கிரஸ் ஆட்சிக் காலத்​தில் இருந்தே...
வெளி​நாட்டு பங்​களிப்பு (ஒழுங்​கு​முறை) திருத்த மசோதாவை (எப்சிஆர்ஏ) ஆய்வு செய்ய 31 பேர் அடங்​கிய நாடாளு​மன்ற கூட்​டுக் குழு நியமனம் செய்​யப்​பட்டு உள்​ளது. கடந்த 1976-ம் ஆண்​டில் அப்​போதைய பிரதமர் இந்​திரா காந்தி ஆட்​சிக் காலத்​தில் வெளி​நாட்டு பங்​களிப்பு (ஒழுங்​கு​ முறை) சட்டம் கொண்டு வரப்​பட்​டது. கடந்த 2010-ம் ஆண்​டில் அப்​போதைய பிரதமர் மன்​மோகன் சிங் ஆட்​சி​யில் இந்த சட்​டத்​தில் கடுமை​யான விதி​கள் சேர்க்​கப்​பட்​டன. கடந்த 2020-ம் ஆண்​டில் பிரதமர்...
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக அங்கு சிக்கித் தவித்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 8 தொழிலாளர்கள் வீடு திரும்பியுள்ளனர், மரணத்தை நேரில் பார்த்தோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். நேபாளத்தில் கடந்த 26-ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உள்நாட்டினர் மட்டுமல்லாது வெளிநாட்டினர் உட்பட ஆயிரக்கணக்கானோர் சிக்கிக் கொண்டனர். அந்த வகையில் மேல் திரிசூலி-1 நீர்மின் திட்டத்தில் பணியாற்றி வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 16 தொழிலாளர்களும் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து, அசாம்...
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமையான இந்து கோயில் இடிக்கப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலத்தைப் பாதுகாப்பதில் பாகிஸ்தான் அரசு முற்றிலும் தோல்வி அடைந்துள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சாடியுள்ளது. லாகூரிலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நரோவால் மாவட்டத்தின் சிராஜ் கிராமத்தில் அமைந்திருந்த இந்த கோயில், மதரஸா கட்டுவதற்காக ஆக்கிரமிக்கப்பட்டு இடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.  இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய...
டெல்லி, சென்னை, போபால், கொல்கத்தா ஆகிய நான்கு நகரங்​களில் பேரி​யம் குறைக்​கப்​பட்ட நவீன பட்டாசுகளை வெடித்து சோதிக்க உச்ச நீதிமன்றம் அனு​மதி வழங்​கி​யுள்​ளது. சோதனை முடிவு​களை மூன்று வாரங்​களில் தாக்கல் செய்​யு​மாறு மத்திய அரசுக்கு உத்​தர​விட்​டது. நாடு முழு​வதும் பட்​டாசுக்கு தடை விதிக்​கக் கோரி அர்​ஜுன் கோபால் என்​பவர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில் விசாரிக்​கப்​பட்டு வரு​கிறது. இந்​நிலையில் பல்​வேறு மாநிலங்களில் பட்​டாசு ஆலை உரிமம், விற்​பனை உரிமம் ரத்து...
கேரள மாநிலம், கொச்​சி​யில் ஹுப்​புல் ரசூல் மாநாட்டில், சன்னி பிரிவு மதகுரு​வும், இந்​தி​யா​வின் கிராண்ட் முஃப்​தி​யு​மான காந்​த​புரம் ஏபி அபூபக்​கர் முஸ்​லி​யார் பேசும்​போது, “பெண்கள் தங்​களது வீடு​களுக்​குள் மட்​டுமே இருக்க வேண்​டும். அவர்​கள் பொது வெளிக்கு வரக்​கூ​டாது” என்​றார். இதுகுறித்து கேரள முதல்​வர் வி.டி.சதீசன் கூறிய​தாவது: பெண்​கள் வீட்​டிலேயே இருக்க வேண்​டும் என்ற அபூபக்​கரின் நிலைப்பாட்டை மாநில அரசு ஏற்​க​வில்​லை. இஸ்​லாம்​கூட, பெண்களை வீட்​டுக்​குள்​ளேயே கட்​டுப்​படுத்தி வைக்க வேண்​டும் என்று...
அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை​யின் முதல் தலைமை நிர்வாக அதி​காரி​யாக விமா​னப்​படை முன்​னாள் அதிகாரி ஜிதேந்திர மிஸ்ரா தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார். அயோத்தி ராமர் கோயி​லில் பக்​தர்​கள் அளித்த நன்​கொடை மற்றும் காணிக்​கைகள் திருடப்​பட்ட விவ​காரம் பெரும் சர்ச்சையை ஏற்​படுத்​தி​யது. இது தொடர்​பாக உத்​தரபிரதேச மாநில அரசு சிறப்பு புல​னாய்வு குழுவை அமைத்து விசா​ரணை நடத்​தி​யது. இதில் முறை​கேடு​கள் நடந்​தது உறுதி செய்​யப்​பட்​டு, அதுதொடர்பாக 8 பேர் கைது செய்​யப்​பட்​டனர். நீதி​மன்​றத்​தில்...