கபடி என்றாலே தாம்பரத்துக்கு அந்தப் பக்கம் உள்ள கிராமங்களில் மட்டும் ஆடப்படும் விளையாட்டு என்கிற எண்ணம் பலரிடம் இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டின் தலைநகரிலும் கபடியை மூச்சாக நினைக்கிற இடங்கள் பல இருக்கின்றன. ஏன், நம் ராஜரத்தினம் டைகராக பாய அச்சாரம் போட்டதே சென்னைதான்.
“என் கபடி திருத்தப்பட்டு, ஒரு வடிவத்துக்கு வந்ததே சென்னையிலதான். இங்க என் கால் படாத ஏரியாவே இல்ல. பழவேற்காட்டிலிருந்து கல்பாக்கம் வரைக்கும் இருக்கும் மீனவ குப்பங்களோட...
நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டுதலில் வெண்கலம் வென்றார் தமிழகத்தின் கோவையை சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராமராஜ்.
28 வயதான அவர், 400 மீட்டர் தடை தாண்டுதல் இறுதிச் சுற்றில் பந்தய தூரத்தை 54.75 வினாடிகளில் கடந்தார். இதன் மூலம் கடந்த 1984-ல் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் முன்னாள் இந்திய தடகள வீராங்கனை பி.டி.உஷா படைத்த 55.42 வினாடிகள் என்ற தேசிய சாதனையை வித்யா...
ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் வித்யா ராம்ராஜ் பந்தய தூரத்தை 54.75 விநாடிகளில் கடந்து 3-வது இடம் பிடித்து தேசிய சாதனையுடன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் மரியம் கரீம் (54.31) முதலிடம் பிடித்து தங்கப் பதக்கமும், கஜகஸ்தானின் அடலினா ஜெம்ஸ் (54.58) 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
கடந்த 1984-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில்...
20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 10-வது நாளான நேற்று துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் தனிநபர் பிரிவு இறுதிப் போட்டி நடைபெற்றது.
8 பேர் பங்கேற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவின் இஷா சிங் முக்கியமான தருணத்தில் சிறப்பாக செயல்பட்டு பதக்க போட்டிக்குள் நுழைந்தார். இதில் வெள்ளி பதக்கத்துக்கான சுற்றில் இந்தியாவின் இஷா சிங்கும், வட கொரியாவின் கிம் ஹியான்...
வரலாறு படைத்தார் நீரு தண்டா – டிராப் ஷூட்டிங் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண்
admin - 0
ஆசிய விளையாட்டுப் போட்டியில் டிராப் ஷூட்டிங் தனிநபர் பிரிவில் சீன வீராங்கனையை தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை நீரு தண்டா, இப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்துள்ளார்.
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் பெண்களுக்கான தனிநபர் டிராப் ஷூட்டிங், ஐச்சி-நகோயாவில் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்றது.
இதில் இந்தியாவின் நீரு தண்டா, 30க்கு 28 என்ற கணக்கில் மிகச் சிறந்த துல்லியத்துடன்...
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 15,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 15,000 ரன்களைப் பூர்த்தி செய்த உலகின் இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில், விராட் கோலி தனது 303-வது இன்னிங்ஸில்...
பாட்மிண்டன் விளையாட்டுக்கான போட்டி அட்டவணை சரியாக தயாரிக்கப்படவில்லை: பி.வி.சிந்து விமர்சனம்
admin - 0
ஆசிய விளையாட்டில் பாட்மிண்டன் விளையாட்டுக்கான போட்டி அட்டவணை சரியாக தயாரிக்கப்படவில்லை என்று இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து விமர்சனம் செய்துள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பாட்மிண்டன் கால் இறுதிப் போட்டியில் பி.வி. சிந்து தோல்வி கண்டு வெளியேறினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஆசிய விளையாட்டுப் போட்டியின் பாட்மிண்டன் விளையாட்டுக்கான அட்டவணை சரியான முறையில் தயாரிக்கப்படவில்லை. ஒரு போட்டிக்கும் அடுத்த போட்டிக்கும்...
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஓபன் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது.
உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்டில் நடைபெற்ற இப்போட்டியின் ஓபன் பிரிவில் போட்டியை நடத்திய உஸ்பெகிஸ்தான் முதலிடம் பிடித்து தங்கம் வென்றது.
நேற்று நடைபெற்ற கடைசி சுற்றில் இந்தியா 2-2 என்ற கணக்கில் ஹங்கேரியுடன் டிரா செய்து 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளி வென்றது. மகளிர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்திய அணி 2-2 என்ற கணக்கில் ஜார்ஜியாவுடன்...
மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. விராட் கோலி, ஷுப்மன் கில் சதம் விளாசினர்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது ஒருநாள் போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
முதலில் விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 295...
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே நாளில் ஆறு சதங்கள் பதிவாகி உள்ளன. இந்தப் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் பவுமா, டேவிட் மில்லர், இங்கிலாந்தின் பேன்டன், மேற்கு இந்தியத் தீவுகளின் கிரீவ்ஸ், இந்தியாவின் ஷுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இந்த ஆறு சதங்களும் செப்.27, 2026 (நேற்று) நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பதிவு செய்யப்பட்டது. இதற்கு முன்பு ஒருநாள் கிரிக்கெட்டில்...









