400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் வெண்கலம் வென்றார் வித்யா ராம்ராஜ் @ ஆசிய விளையாட்டு

0
37

ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் மகளிருக்​கான 400 மீட்​டர் தடை தாண்​டும் ஓட்​டத்​தில் இந்​தி​யா​வின் வித்யா ராம்​ராஜ் பந்தய தூரத்தை 54.75 விநாடிகளில் கடந்து 3-வது இடம் பிடித்து தேசிய சாதனை​யுடன் வெண்​கலப் பதக்​கம் வென்​றார்.

ஐக்​கிய அரபு அமீரகத்​தின் மரி​யம் கரீம் (54.31) முதலிடம் பிடித்து தங்​கப் பதக்​க​மும், கஜகஸ்​தானின் அடலினா ஜெம்ஸ் (54.58) 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​க​மும் வென்​றனர்.

கடந்த 1984-ம் ஆண்டு லாஸ் ஏஞ்​சல்ஸ் ஒலிம்​பிக்​கில் இந்​தி​யா​வின் பி.டி. உஷா 400 மீட்​டர் தடை தாண்​டும் ஓட்​டத்​தில் இலக்கை 55.42 விநாடிகளில் எட்​டி​யிருந்​தார். இதுவே இந்​திய வீராங்​கனை ஒரு​வரின் சிறந்த செயல் திற​னாக இருந்​தது. இதை 42 வருடங்​களுக்கு பின்​னர் முறியடித்து புதிய சாதனை படைத்​துள்​ளார் வித்யா ராம்​ராஜ். 28 வயதான வித்யா ராம்​ராஜ் தமிழகத்​தின் கோவை பகு​தியை சேர்ந்​தவர் ஆவார்.

நடப்பு ஆசிய விளை​யாட்​டு போட்​டி​யில் வித்யா ராம்​ராஜுக்கு இது 2-வது பதக்​க​மாக அமைந்​தது. அவர், 4×400 மீட்​டர் கலப்பு அணி​கள் பிரி​வில் வெள்​ளிப் பதக்​கம் வென்ற இந்​திய அணி​யிலும் இடம் பெற்​றிருந்​தார்.

ரூ.30 லட்சம் ஊக்கத் தொகை

தமிழக முதல்​வர் ஜோசப் விஜய் வெளி​யிட்​டுள்ள சமூக வலைதள பதி​வில், “ஜப்​பானில் நடை​பெற்​று​வரும் ஆசிய விளை​யாட்​டுப் போட்​டி​யில், மகளிர் 400 மீட்​டர் தடை ஓட்​டத்​தில் வெண்​கலப் பதக்​கம் வென்று தமிழ்​நாட்​டுக்​கும், இந்​தி​யா​வுக்கும் பெருமை சேர்த்​துள்ள தடகள வீராங்​கனை வித்யா ராம்​ராஜுக்கு எனது மனமார்ந்த பாராட்​டு​களை​யும், வாழ்த்​துகளை​யும் தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

இந்​தி​யா​வின் புகழ்​பெற்ற தடகள வீராங்​க​னை​யான பி.டி.உஷா 1984-ம் ஆண்டு படைத்த தேசிய சாதனையை 42 ஆண்​டு​களுக்​குப் பின்​னர் வித்யா ராம்​ராஜ் முறியடித்​து, தற்​போது புதிய தேசிய சாதனையை படைத்​திருப்​பது மேலும் சிறப்​புக்​குரிய​தாகும். அவரது சிறப்​பான சாதனையை பாராட்​டும் வகை​யில், தமிழ்​நாடு அரசு சார்​பில் ரூ.30 லட்​சம் உயரிய ஊக்​கத்​தொகை வழங்​கப்​படும்​” எனத்​ தெரி​வித்​துள்​ளார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here