நடப்பு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியாவின் திலீப் காவித், பாரா 100 மீட்டர் (டி47 பிரிவு) ஓட்டத்தில் தங்கம் வென்றுள்ளார். இதே பிரிவில் இந்தியாவின் முகமது பாசில் வெள்ளி வென்றார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 3 தங்கம், 9 வெள்ளி, 3 வெண்கலம் என இந்தியா இதுவரை 15 பதக்கங்கள் வென்றுள்ளது. இதன் மூலம் பதக்கப்பட்டியில் தற்போது 8-வது இடத்தில் உள்ளது இந்தியா.
இந்திய நேரப்படி இன்று...
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டிரினிடாட்டில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மேற்கு இந்தியத் தீவுகள் 311 ரன்களும், பாகிஸ்தான் 282 ரன்களும் எடுத்தன. 29 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஷமர் ஜோசப் 38, டேக்நரைன்...
ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்திய அணியின் கேப்டனான ஷுப்மன் கில் ஓர் இடம் முன்னேறி நியூஸிலாந்தின் டேரில் மிட்செல்லை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.
டி20 தரவரிசையில் 15 வயதாகும் இந்திய அணியின் தொடக்க வீரரான வைபவ் சூர்யவன்ஷி 230 இடங்கள் முன்னேறி 536 புள்ளிகளுடன் 48-வது இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஜிம்பாப்வே தொடரில்...
அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள், டிவிஎஸ் ரேஸிங் சாம்பியன்களின் வழிகாட்டுதலின் கீழ், இளைஞர்கள் ரேஸிங் திறன்களை அதிகரிக்க டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பயிற்சி அளிக்கிறது.
இதுகுறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் (பிரீமியம் பிஸினஸ்) விமல் சும்ப்ளி செய்தியாளர்களிடம் கூறியதாவது: டிவிஎஸ் அபாச்சி ஜூனியர் திட்டத்தின் கீழ் 10 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இளம் வயதிலேயே மோட்டார் சைக்கிள் ரேஸிங் திறனைக் கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இத்திட்டம்,...
10,000 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் குல்வீர் சிங் வெள்ளி வென்று சாதனை; பளுதூக்குதலில் ஹர்ஜிந்தர் கவுர் அசத்தல்
admin - 0
கிளாஸ்கோ 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிருக்கான பளுதூக்குதலில் 69 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ஹர்ஜிந்தர் கவுர் 227 கிலோ எடையை (ஸ்னாட்ச் 101 + கிளீன் அன்ட் ஜெர்க் 126) தூக்கி புதிய சாதனையுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
கனடாவைச் சேர்ந்த சார்லோட் சிமோனோ 240 கிலோ எடையை (ஸ்னாட்ச் 108 + கிளீன் அன்ட் ஜெர்க்...
விவசாயக் கழிவுகளும் சோளத் தட்டைகளும் மட்டுமே குஷன் மெத்தைகளாக இருந்த ஒரு கிராமத்துக் களத்திலிருந்து புறப்பட்டு, இன்று சர்வதேசத் தடகள அரங்கில் இந்தியாவின் கொடியை உயரப் பறக்கச் செய்திருக்கிறார் சர்வேஷ் குஷாரே.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டில் ஆடவருக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று தேசத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார் 31 வயதாகும் சர்வேஷ் குஷாரே.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள தேவர்காவ் என்ற...
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் பவுலரான முகமது ஷமியின் சர்வதேச கிரிக்கெட் பயணம் நிறைவுற்றதா?’ என்ற கேள்வி எழுந்துள்ளது. அது குறித்து பார்ப்போம்.
அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் முகமது ஷமி இடம்பெறவில்லை.
35 வயதான அவர், கடந்த 2013 முதல் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். 64...
சீனாவின் ஹங்சோ நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் சோனம் உத்தம் மஸ்கர், ஹிமான்ஷு தில்லான் ஜோடி 441.2 புள்ளிகள் சேர்த்து 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றது. சீன ஜோடிகள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை வென்றன.
நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டரான ஜவோகிர் சிந்தரோவ் ஆகியோர் மோதும் ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா நகரில் வரும் நவம்பர் 25 முதல் டிசம்பர் 15 வரை நடைபெறும் என ஃபிடே அறிவித்துள்ளது.
இந்தப் போட்டித் தொடங்கும் போது குகேஷ், ஜவோகிர் சிந்தரோவ் ஆகிய இருவருக்குமே 20 வயது மட்டுமே நிரம்பியிருக்கும். உலக சாம்பியன்ஷிப் வரலாற்றிலேயே மிகக் குறைந்த...
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் போட்டி ஆகஸ்ட் 15 முதல் 19 வரை காலே நகரிலும், 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 23 முதல் 27 வரை கொழும்பு நகரிலும் நடைபெறுகிறது.
இந்தத் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் அங்கமாக உள்ளது. இந்த போட்டிகளுக்கு முன்னதாக...










