அமெரிக்காவிடம் இருந்து பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை அமைப்பை இந்தியா வாங்க உள்ளது. இந்தியா-அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் விதமாக அமெரிக்காவிடம் இருந்து ஏவுகணைகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும், ராணுவ தளவாடங்களையும் இந்தியா கொள்முதல் செய்து வருகிறது.
அந்த வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஜாவலின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை அமைப்பை இந்தியா வாங்க திட்டமிட்டுள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,”போர்க்களத்தில்...
போதைப் பொருளற்ற பாரதத்தை உருவாக்குவதே எனது கனவு என ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது 137-வது மனதின் குரல் (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்சியில், தொழில்நுட்பம், சமூக நடவடிக்கை, தொழில்முனைவு மற்றும் மக்கள் பங்கேற்பு மூலம் நாட்டின் அடித்தட்டு அளவில் மாற்றங்களை உருவாக்கி வரும் மனிதர்களையும் அவர்களின் முயற்சிகளையும் பாராட்டிப் பேசினார்.
மும்பையைச் சேர்ந்த கிருஷ்ணா சேஷாத்ரி என்பவர்...
கடந்த 13 ஆண்டுகளாக இந்தி மொழியையும் இந்திய கலாச்சாரத்தையும் கற்றுவந்த ஜப்பானிய இணையதள பெண் பிரபலம், ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் தனது முதல் புனித நீராடலை மேற்கொண்டு நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
இந்தியக் கலாச்சாரத்தையும் ஆன்மிகத்தையும் அறிந்துகொள்வதில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு எப்போதும் தனி ஆர்வம் உண்டு. குறிப்பாக வாராணசி, ரிஷிகேஷ் மற்றும் ஹரித்வார் போன்ற புனிதத் தலங்களை நோக்கி அவர்கள் பெருமளவில் படையெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த 13 ஆண்டுகளாக இந்தி...
ஜார்க்கண்டில் கைதிகள் சிறைக்கு வெளியே சென்று வேலை செய்ய அம்மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதேநேரம் அவர்கள் மாலை 6 மணிக்குள் சிறைக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கைதிகள், தங்கள் குடும்பத்தினரின் வாழ்வாதரத்துக்காக பகல் நேரத்தில் சிறைக்கு வெளியே சென்று வேலை செய்துவிட்டு, மாலையில் சிறைக்கு திரும்ப அம்மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. விரைவில் இந்த திட்டம் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.
ராஞ்சியில்...
மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள பான்பூர் எல்லைப் பகுதியில் தங்கம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், எல்லைப் பாதுகாப்புப் படையின் 32-வது பட்டாலியன் வீரர்கள் தீவிர ரோந்து, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரக் கண்காணிப்புக்குப் பிறகு, அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த பெண் ஒருவரைப் பிடித்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் சோதனை செய்தனர். அப்போது அவரிடமிருந்து 15...
கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காகச் சென்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் நேபாளத்தில் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில், மீட்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன் விவரம்: சிவரஞ்சனி முத்துநாதன், கர்பகம் ராஜமோகன், மாறன் கோவிந்தசாமி, சாந்தி மாறன், முத்துகுமரேசன் ராமலிங்கம் ஆகியோர் மீட்கப்பட்டுள்ளனர்.
நவு கபீர்தாஸ், விஜயபுவனேஸ்வரி விஸ்வநாதன், மைதிலி முத்துகுமரேசன், தியாகராஜன்...
நேபாள வெள்ளத்தில் 288 இந்தியர்கள் மாயமானதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘‘நேபாளத்துக்கு சென்ற 288 இந்தியர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை.
இவர்களில், திரிசூலி ஒன் பவர் திட்டத்தில் பணிபுரியும் 73 இந்தியர்களும் அடங்குவர். இவர்களைப் பற்றிய கூடுதல் விவரங்களைப் பெறுவதற்காக, காத்மாண்டுவில் உள்ள நமது தூதரகம் திட்டத் தலைவருடன் தொடர்பில் உள்ளது....
ஆகஸ்ட் 31-ம் தேதி கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெறும் எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அவர் சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி நாளை உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட் செல்கிறார். அங்கு அந்த நாட்டு அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவை அவர் சந்தித்துப் பேசுகிறார். அப்போது வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, டிஜிட்டல்...
இண்டியா டுடே- சி வோட்டர் கருத்துக் கணிப்பில் பிரதமர் பதவிக்கு யார் பொருத்தமானவர் என்று மக்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது 48.7% பேர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக வாக்களித்தனர். ராகுல் காந்திக்கு ஆதரவாக 27.1% பேர் வாக்களித்தனர். அவர்களுக்கு அடுத்து தமிழக முதல்வர் விஜய், பிரதமராக 9.2% பேர் ஆதரவு அளித்தனர்.
திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தாவுக்கு 2% பேர், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு 1.7% பேர்,...
தலைமை நீதிபதி, பார் கவுன்சில் தலைவர் வருகைக்கு எதிர்ப்பு: பெங்களூரு தேசிய சட்டப் பல்கலை. 34-வது பட்டமளிப்பு விழா ரத்து
admin - 0
வரும் செப்டம்பர் 12-ம் தேதி 34-வது பட்டமளிப்பு விழா நடைபெறும் என பெங்களூரு தேசிய தேசிய சட்டப் பல்கலைக்கழகம் கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி அறிவித்திருந்தது.
இவ்விழாவுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா ஆகியோரை அழைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. பல்கலைக்கழகத்தின் இந்த முடிவுக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக பட்டமளிப்பு...









