ஆந்​தி​ரா​வில் மீண்​டும் கரோனா பரவு​கிறது: 2 பேர் உயி​ரிழப்பு; 8 பேருக்கு வைரஸ் தொற்று

0
17

ஆந்​தி​ரா​வில் மீண்​டும் கரோனா வைரஸ் பரவு​கிறது. இந்த வைரஸ் தொற்​றால் 2 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். 8 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்​யப்​பட்டு உள்​ளது.

கடந்த 2019ம் ஆண்டு இறு​தி​யில் சீனா​வின் வூஹான் பகு​தி​யில் கரோனா வைரஸ் பரவுவது கண்​டறியப்​பட்​டது. அங்​கிருந்து கடந்த 2020ம் ஆண்டு தொடக்​கத்​தில் உலகம் முழு​வதும் வைரஸ் பரவியது. கடந்த 2020 முதல் 2021 தொடக்​கம் வரை இந்​தி​யா​வில் முதல் கரோனா அலை ஏற்​பட்​டது. கடந்த 2021ம் ஆண்​டில் இரண்​டாம் கரோனா அலை​யும், கடந்த 2022ம் ஆண்டு தொடக்​கத்​தில் மூன்​றாம் கரோனா அலை​யும் ஏற்​பட்​டன.

மூன்று கரோனா அலைகளின்​போது இந்​தி​யா​வில் 4.50 கோடி பேர் வைரஸ் தொற்​றால் பாதிக்​கப்​பட்​டனர். இதில் 5.33 லட்​சம் பேர் உயி​ரிழந்​தனர். கடந்த 2022 ஆண்டு மே மாதத்​துக்​குப் பிறகு உலகம் முழு​வதும் கரோனா வைரஸ் பரவல் குறைந்து இயல்பு நிலை திரும்​பியது.

இந்த சூழலில் கடந்த சில வாரங்​களாக ஆந்​தி​ரா​வின் ஒய்​எஸ்​ஆர் கடப்பா மாவட்​டத்​தில் திடீரென கரோனா வைரஸ் பரவி வருகிறது. கடப்பா மாவட்​டத்​தின் ராஜம்​பேட்டை பகு​தியை சேர்ந்த 52 வயது நபருக்கு சில நாட்​களுக்கு முன்பு கடுமை​யான காய்ச்​சல் ஏற்​பட்​டிருக்​கிறது. மேல்​ சிகிச்​சைக்​காக அவர் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்கப்​பட்​டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார். கரோ​னா​வின் ஒமைக்​ரான் வைரஸ் பாதிப்​பால் அவர் உயி​ரிழந்​திருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது.

கடப்​பாவை சேர்ந்த 43 வயது நபர் அண்​மை​யில் கடுமை​யான காய்ச்​சல் ஏற்​பட்​டது. அங்​குள்ள அரசு மருத்​து​வ​மனை​யின் கரோனா தீவிர சிகிச்சை பிரி​வில் அவர் சிகிச்சை பெற்று வந்​தார். அவரும் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்து உள்​ளார்.

இந்தச் சூழலில் கடப்பா மருத்​து​வக் கல்​லூரியை சேர்ந்த 25 வயது மருத்​துவ மாணவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்​பட்டு உள்​ளது. அவர் தனிமைப்​படுத்​தப்​பட்டு உள்​ளார். அவரை​யும் சேர்த்து கடப்பா பகு​தி​யில் இது​வரை 8 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்​யப்​பட்டு உள்​ளது. அவர்கள் அனை​வரும் தனிமைப்​படுத்​தப்​பட்டு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது

அவர்​களோடு தொடர்​பில் இருந்த 40 பேரின் சளி மாதிரி​கள் பெறப்​பட்டு ஆய்வக பரிசோதனைக்கு அனுப்​பப்​பட்டு உள்​ளன. இதில் 18 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்​பது உறுதி செய்யப்​பட்டு உள்​ளது. மீத​முள்​ளோரின் ஆய்வக பரிசோதனை அறிக்கை விரை​வில் கிடைக்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. ஆந்​தி​ரா​வில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க அதிதீ​விர நடவடிக்​கைகளை எடுக்க மாநில அரசு உத்​தர​விட்டுள்​ளது.

இதுதொடர்​பாக கடப்பா மாவட்ட பொறுப்பு அமைச்​சர் சவி​தா, மாவட்ட ஆட்​சியர் ஸ்ரீதர், மாவட்ட சுகா​தா​ரத் துறை அதி​காரி ரவி பாபு ஆகியோரிடம் முக்​கிய ஆலோ​சனை நடத்தி உள்​ளார். கடப்பா மட்​டுமன்றி ஆந்​திரா முழு​வதும் முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள் தீவிரப்​படுத்​தப்​பட்டு உள்​ளன. குறிப்​பாக அரசு மருத்​து​வ​மனை​களில் தனி வார்​டு​கள், ஆக்​ஸிஜன் சிலிண்​டர்​கள், வென்​டிலேடர்​கள், ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here