ராமேஸ்​வரம் பின்​னணி​யில் உருவான ‘என்ன விலை’

0
16

கருணாஸ், நிமிஷா சஜயன் நடித்​துள்ள படம் ‘என்ன விலை’. இதில் ஒய்​.ஜி.மகேந்​திரன், பூர்​ணிமா பாக்​ய​ராஜ், மோகன் ராம், சுவாமி​ நாதன், தீபா சங்​கர் உள்பட பலர் நடித்​துள்​ளனர். சஜீவ் பழூர் இயக்கி​யுள்​ளார். குடும்ப த்ரில்​லர் கதை​யாக உரு​வாகி​யுள்ள இதை, கலாமயா பிலிம்ஸ் சார்​பில் கிதேஷ் வி தயாரித்​துள்​ளார்.

இப்​படத்​தின் செய்​தி​யாளர்​கள் சந்​திப்​பில் நடிகர் கருணாஸ் கூறும்​போது, “இது ராமேஸ்​வரம் பின்​னணி​யில் நடக்​கும் படம். மலை​யாள எழுத்​தாள​ரான சஜீவ் பழூர், இந்​தப் படத்​தின் மூலம் இயக்​குந​ராக அறி​முக​மாகிறார். தமிழில்​தான் படம் இயக்க வேண்​டும் என்று இப்​படத்தை இயக்கி இருக்​கிறார். நான் பல இயக்​குநர்​களிடம் பணி​யாற்றி இருந்​தா​லும் இவர் தெளி​வான இயக்​குநர்.

யாரிடம் என்ன ‘எக்​ஸ்​பிரஷனை’ வாங்க வேண்​டும் என்​ப​தைச் சரியாகப் புரிந்து வாங்​கி​னார். சில படங்​களில் நடிக்​கும்​போது நமக்​குப் பெயர் கிடைக்​கும். அதே போல ஒரு நடிக​னாக எனக்கு முக்​கிய​மான படம் இது. இன்​றைய சினிமா வியா​பார நிலை எல்லோருக்​கும் தெரிந்​தது​ தான்.

ஆனால், இந்​தப் படம் வெளி​யாகும் முன்பே டிஜிட்​டல், சாட்​டிலைட் வியா​பாரம் முடிந்​து​விட்​டது. நல்ல படங்​களை மக்​கள் கைவிட்டதில்​லை. இந்​தப் படமும் அப்​படி​யான ஒன்​றாக இருக்கும். இது​வரை யாரும் பேசாத ஒரு விஷ​யத்தை இப்​படம் பேசுகிறது. நிமிஷா சஜயன் வழக்​கறிஞ​ராக நடித்​திருக்​கிறார்” என்​றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here