டெல்லி உயர் நீதிமன்றத்தில் கீர்த்தி சனோன் வழக்கு

0
20

செயற்கை நுண்​ணறிவு மற்​றும் பிற டிஜிட்​டல் தொழில்​நுட்​பங்​கள் மூலம் பிரபலங்​களின் முகம், குரல், புகைப்​படம் மற்​றும் வீடியோக்​களை அவர்​களின் அனு​ம​தி​யின்றி வணிக ரீதி​யாகப் பயன்​படுத்​து​வது அதி​கரித்து வரு​கிறது. இதிலிருந்து தனது அடை​யாளத்​தைப் பாது​காத்​துக் கொள்​ளக் கோரி அவர்​கள் நீதி​மன்​றத்தை நாடி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில் நடிகை கீர்த்தி சனோனும் டெல்லி உயர் நீதி​மன்​றத்​தில் தனது ஆளுமை உரிமை​களைப் பாது​காக்​கக் கோரி வழக்​குத் தொடர்ந்​துள்​ளார். இது​போன்ற விவ​காரங்​கள் அடிக்​கடி வரு​வதைக் குறிப்​பிட்ட நீதி​மன்​றம், தற்​போதைய வழக்​கின் உண்​மை​களைத் தாண்டி பரந்த அளவில் இதுகுறித்த சட்​டப்​பூர்​வச் சிக்​கல்​கள் ஆராயப்பட வேண்​டும் என்​றார்.

ஆளுமை உரிமை​களின் எல்​லைகள், சட்​டப் பாது​காப்​பைப் பெறக்​கூடிய ஒரு நபரின் தனிப்​பட்ட கூறுகள் மற்​றும் இத்​தகைய சர்ச்​சைகள் அறி​வு​சார் சொத்​துரிமைப் பிரி​வின் அதி​கார வரம்​புக்​குள் வருமா என்​பதை விளக்​கு​மாறு கீர்த்தி சனோனின் வழக்​கறிஞரிடம் நீதி​மன்​றம் கேட்​டுக் கொண்​டது.

ஆளுமை உரிமை​கள் என்​பது ஒரு நபரின் பெயர், குரல், முகம், உரு​வம், புகைப்​படங்​கள் மற்​றும் காணொலிகள் வரை நீட்​டிக்​கப்​படலாம் என்று அவரது வழக்​கறிஞர் ஆனந்த் வாதிட்​டார். அனு​ம​தி​ அல்​லது ஒப்​புதலின்றி ஒரு​வரின் அடை​யாள வணிக ரீதி​யாகப் பயன்​படுத்​தப்​படு​வதை​யும் அவர் சுட்​டிக்​காட்​டி​னார்.

இந்த விவ​காரத்​தில் உதவி கோரிய நீதி​மன்​றம், தொடர்​புடைய நீதித்​துறை முன்​னு​தா​ரணங்​களை​யும் ஆய்​வு​களை​யும் நீதி​மன்​றத்​தில் சமர்ப்​பிக்​கு​மாறு வழக்​கறிஞரிடம் கேட்​டுக் கொண்​டார். இவ்​வழக்​கின் மீதான அடுத்​தகட்ட விசா​ரணையை அக்​.29-ம் தேதிக்கு ஒத்​தி​வைத்​தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here