‘ஜெயிலர் 2’ முதல் ‘ரணபலி’ வரை: இந்த வார தியேட்டர் ரிலீஸ் பட்டியல்

0
20

ரஜினியின் ‘ஜெயிலர் 2’ முதல் இந்தியாவின் பஞ்ச காலத்தின் நினைவுகளை சுமந்து வரும் ‘ரணபலி’ வரை இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படங்களின் பட்டியல் இது.

ஜெயிலர் 2: ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் ரஜினியுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, வித்யா பாலன் மிதுன் சக்ரவர்த்தி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிவ ராஜ்குமார், மோகன்லால், ஹ்ரித்திக் ரோஷன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.

கடந்த 2023-ம் வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் தொடர்ச்சியாக வரும் இந்த இரண்டாம் பாகத்தில் தனது ஓய்வுகால வாழ்க்கையை நிம்மதியாக கழிக்கும் முத்துவேல் பாண்டியனின் அமைதியை குலைக்கிறது வர்மாவின் கொலைக்கு பழிவாங்க துடிக்கும் ஒரு கும்பல்.

தனது குடும்பத்தை பாதுகாத்துக் கொண்டே அந்த சிண்டிக்கேட்டை அழிக்கிறார் முத்துவேல் பாண்டியன். இந்த தமிழ் ஆக்‌ஷன் படம் அக்டோபர் 15 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

கரிவிடி லட்சுமி: கவுரி நாயுடு ஜம்மு இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கரிவிடி லட்சுமி’ படத்தில் ஆனந்தி, ராக் மயூர், அங்கித் கொய்யா, விஜய கிருஷ்ண நரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். உத்தர ஆந்திராவைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞர் கரிவிடி லட்சுமி வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட இந்த தெலுங்கு வாழ்க்கை வரலாற்று படம் அக்டோபர் 17 அன்று வெளியாக இருக்கிறது. 

கிரேசி கல்யாணம்: பத்ரப்பா கஜுலா இயக்கத்தில் உருவாகி  இருக்கும் ரொமான்டிக் காமெடி படம் ‘கிரேசி கல்யாணம்’. இந்தப் படத்தில் அனுபமா பரமேஷ்வரன், தருண் பாஸ்கர் தாஸ்யம், விஜய கிருஷ்ண நரேஷ், அகில் ராஜ் உத்தேமாரி, சைதன்ய மடடி, ஹர்ஸ வர்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த தெலுங்கு படம் அக்டோபர் 16 அன்று வெளியாகிறது.

எந்த சித்திரம் கதா: பொட்டிபோகு ராகேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஆக்‌ஷன் படம் ‘எந்த சித்திர கதா’. இந்தப் படத்தில் எடகோட்டி ஜெகதீஸ், ஹரேஷ் மாலினேனி,  ஜலகடுகு சுரேகா, பொடிலி வெங்கடேஷ், மவுனிகா பினால், சூர்யபிரகாஷ் தன்யசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த தெலுங்கு படம் அக்டோபர் 16 அன்று வெளியாகிறது.

ட்ரோன்ஸ்: ஆர்​.​ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ட்ரோன்ஸ்’. இந்தப் படத்தில், சித்தி இட்னானி, அஞ்சலி நாயர், தேவதர்​ஷினி, பரி​தாபங்​கள் டிரா​விட் செல்​வம், குரேஷி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த ஃபேன்டஸி திகில் நகைச்சுவைப் படம் அக்டோபர் 16 அன்று வெளியாகிறது.

தாய்தா (Thaytha): லயா கோகிலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திகில் படம் ‘தாய்தா’. இப்படத்தில் ஷேக் ரியான், ஷேக் ஷாஹிதா, ஹர்ஷிகா பூனாசா, ஷோப்ராஜ், சாது கோகிலா, லயா கோகிலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தக் கன்னடப் படம் அக்டோபர் 16 அன்று வெளியாகிறது.

ஸ்ட்ரீட் ஃபைட்டர்: கிடாவோ சகுராய் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஆக்‌ஷன் நகைச்சுவை படம் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’. இந்தப் படத்தில் நோவா சென்டினியோ, ஆண்ட்ரிவ் கோஜி, கல்லினா லியாங், ரோமன் ரெய்ன்ஸ், டேவிட் டாஸ்ட்மால்சியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த அமெரிக்கத் திரைப்படம் அக்டோபர் 16 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

ரணபலி: ராகுல் சங்​கிருத்​யன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ரணபலி’. இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இணை நடித்துள்ளனர். இவர்களுடன் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வோஸ்​லூ, ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியின்கீழ் இருந்த போது ஏற்பட்ட பெரும் பஞ்சம் பற்றியும், அவர்களின் மக்கள் மீதான அடக்குமுறை பற்றியும் பேசும் இந்த படம் அக்டோபர் 16 அன்று  திரைக்கு வருகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here