‘சத்தியவான் சாவித்திரி’ டீசர் எப்படி? – உக்கிரமும் குறும்பும்

0
19

மிஷ்கின் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ் விஜய் இயக்கியுள்ள படம் ‘சத்தியவான் சாவித்திரி’. இந்தப் படத்தில் மிஷ்கின், கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன்,பாலசரவணன், ஷில்பா மஞ்சுநாத், மதுசூதனன், ஆர்.சுந்தரராஜன், பிரிகிடா, மாலா பார்வதி மற்றும் ஏ.வெங்கடேஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

சுமார் 1.29 நிமிடங்கள் ஓடும் இந்த டீசரில் தனது சீனியர் மார்கண்டேயன் போல பெரிய வழக்கறிஞராக வர விரும்பும் அவரது ஜூனியர் சாவித்திரி, குறும்புத்தனத்தால் அதில் கோட்டைவிடுகிறார்.

முக்கிய வழக்கு ஒன்றில் தவறான நபர்களுக்கு ஆதரவாக செயல்படும் தனது சீனியர் மார்கண்டேயனை சாவித்திரி சட்ட ரீதியாக எப்படி எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் மையக்கதை என படக்குழு முன்பு தெரிவித்திருந்த நிலையில், இப்போது வெளியாகி இருக்கும் டீசரில் சில உக்கிரமான தருணங்கள் இருந்தாலும், அதிகமாக சாவித்திரியின் குறும்புகளே நிறைந்திருக்கின்றன.

ஜீ ஸ்டுடியோஸுடன் இணைந்து, டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு, சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவையும், ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். இந்தப் படம் நவம்பர் 20-ம் தேதி திரைக்கு வருகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here