பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லாரன்ஸ் வான் என்ற பெண் கடந்த1993-ம் ஆண்டு டெலிகாம் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.பகுதி பக்கவாதம் மற்றும் வலிப்புநோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு ஏற்ற பணி தொடக்கத்தில் வழங்கப்பட்டது.
கடந்த 2002-ம் ஆண்டு, வேறுபகுதிக்கு பணியிடம் மாற்றம் பெற்று சென்றார். அங்கு அவருக்குஏற்ப வேலை வழங்கவில்லை. இதனிடையே 2013-ல் இந்நிறுவனம் ஆரஞ்ச் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. லாரன்ஸ்வானுக்கு எந்த பணியையும் வழங்கவில்லை. இது தொடர்பாக வாசன்ஹோவ் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், கடந்த 20 ஆண்டுகளாக வேலை கொடுக்காமல் முழுசம்பளத்தையும் வழங்கும் ஆரஞ்ச் நிறுவனம், தனக்கு தார்மீக துன்புறுத்தலை தருவதாக குற்றம்சாட்டி உள்ளார். இதனால் தொழில்முறை அனுபவத்தை இழக்க நேரிடும் எனவும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டை மறுத்த ஆரஞ்ச் நிறுவனம், “லாரன்ஸ்வானின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, அவருக்கு ஏற்றபணிச் சூழலை உருவாக்குவது குறித்து பரிசீலித்தோம். எனினும்,அவருடைய மருத்துவ விடுப்பு இந்த செயல் முறையை கடின மாக்கிவிட்டது” என்றது.