சர்வதேச அரசியல் களத்தில் யாருக்கும் அடிபணியாத ஒரு சுயசார்பு சக்தியாக ‘இந்தியா’ உருவெடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் கணிக்க முடியாத வணிகக் கட்டுப்பாடுகளும், வரி கெடுபிடிகளும் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. உலக வர்த்தகத்தில் அமெரிக்காவின் இந்தத் தன்னிச்சையான வரி கெடுபிடிகள், இந்திய ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. இந்த நிதி நிலையற்ற தன்மையைக் குறைக்க, இந்தியப் பொருளாதாரம் தனது ஏற்றுமதிச் சந்தைகளைப் பன்முகப்படுத்தத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, அதிபர் ட்ரம்ப்பின் ‘அமெரிக்க...
செங்கடலின் முக்கிய வர்த்தகப் பாதையில் அமைந்துள்ள ஏமனின் மோச்சா துறைமுகத்தை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். இதனால் செங்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2023 அக்டோபர் 7-ல் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்தியத் தாக்குதலுக்குப் பிறகு நடைபெற்ற போரில், ஈரானின் ஆதரவு பெற்ற ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா உள்ளிட்ட அமைப்புகள் கடுமையாகப் பலவீனமடைந்தன. இதனால், மத்திய கிழக்கில் தன் செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ளவும், அமெரிக்கா...
89 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட புகழ்பெற்ற ஓவியம் ஒன்றில், நபர் ஒருவர் ஸ்மார்ட்போன் போன்ற ஒரு பொருளைக் கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இத்தாலிய-அமெரிக்க ஓவியரான உம்பர்ட்டோ ரொமானோ (Umberto Romano) என்பவரால் 1937-ஆம் ஆண்டு வரையப்பட்ட 'மிஸ்டர் பின்சன் அண்ட் தி செட்லிங் ஆஃப் ஸ்பிரிங்ஃபீல்ட்' (Mr Pynchon and the Settling of Springfield) என்ற ம்யூரல் பாணி ஓவியம் தான்...
அமெரிக்க நாடாளு​மன்​ற இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றிபெற்றால், ஒவ்​வொரு அமெரிக்​கருக்​கும் தலா 5,000 டாலர்​கள் வழங்​கப்​படும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் வாக்குறுதி அளித்​துள்​ளார். டல்​லாஸ் நகரில் புதனன்று நடை​பெற்ற குடியரசுக் கட்​சி​யின் மாநாட்​டில் அதிபர் ட்ரம்ப் பேசுகை​யில், “வரும் நவம்​பர் மாதம் நடை​பெறவுள்ள இடைத்​தேர்​தலில் ஆளும் குடியரசுக் கட்சி வெற்றி பெற்​றால், உங்​களுக்​கும் வெற்றி நிச்​ச​யம். ஒவ்​வொரு அமெரிக்​கருக்​கும் 5,000 டாலர் (ரூ.4.8 லட்சம்) கிடைக்​கும். இது ட்ரம்ப்...
இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தங்கள் நாட்டின் நிலம் பயன்படுத்தப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று ராஜ்நாத் சிங்கிடம் இலங்கை அதிபர் அதிபர் அநுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றுள்ளார். தலைநகர் கொழும்புவில் அவர் இன்று அதிபர் அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு பேச்சுவார்த்தையின் முடிவில்...
 அமெரிக்கா​​வில் வசிக்​கும் இந்துக்கள் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்​டாட வேண்​டாம். அவர​வர் வீடு​களில் விநாயகர் சதுர்த்தியை கொண்​டாடுங்​கள் என்று பல்​வேறு இந்து அமைப்​பு​கள் அறி​வுறுத்தி உள்​ளன. அமெரிக்கா​வில் சுமார் 55 லட்​சம் இந்​தி​யர்​கள் வசிக்​கின்​றனர். கலி​போர்​னி​யா, டெக்​சாஸ், நியூஜெர்​ஸி, நியூ​யார்க், புளோரிடா உள்​ளிட்ட பல்​வேறு மாகாணங்​களில் இந்​தி​யர்​கள் மீதான இனவெறி தாக்​குதல் அதி​கரித்து வரு​கிறது. ஒவ்​வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்​தி​யின்​போது அமெரிக்காவில் வசிக்​கும் இந்​துக்​கள் பொது இடங்​களில் ஒன்றுகூடி பிரம்மாண்​ட​மாக...
ஹார்​முஸ் ஜலசந்தி அருகே அமெரிக்​கா​வின் ஆளில்லா நீர்​மூழ்​கிக் கப்​பலை கைப்​பற்​றிய​தாக ஈரான் அறி​வித்​துள்​ளது. ஆனால், அது செயல் இழந்​து விட்​ட​தாக அமெரிக்கா தெரி​வித்​துள்​ளது. ஈரான் -அமெரிக்கா இடையே மீண்​டும் போர் தீவிரமடைந்​துள்​ளது. கடந்த வாரம் ஈரானின் கார்க் தீவு மீது அமெரிக்கா தாக்​குதல் நடத்​தி​யது. அதற்கு பதிலடி​யாக ஜோர்​டான் நாட்​டில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்​கள் மீது ஈரான் தாக்​குதல் நடத்​தி​யது. இந்நிலையில் ஹார்​முஸ் ஜலசந்​தி​யின் நுழைவு பகு​தி​யில் அமெரிக்​கா​வின் ஆளில்லா...
உல​கிலேயே அதிக சம்​பளம் வாங்​கும் சிங்​கப்​பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்​கின் ஆண்டு ஊதி​யம் ரூ.16.05 கோடி​யில் இருந்து ரூ.27 கோடி உயர்த்​தப்பட உள்​ளது. சிங்​கப்​பூர் அரசு, திறமை​யானவர்​களை அரசி​யலுக்​குக் கொண்டு வரவும், நல்ல நிர்​வாகத்தை உறுதி செய்​யும் வகை​யிலும் அரசி​யல் தலை​வர்​களுக்கு ஊதிய உயர்வை அறி​வித்​துள்​ளது. இதன்​படி, பிரதமர் லாரன்ஸ் வோங்​கின் நிர்​ண​யிக்​கப்​பட்ட ஆண்டு ஊதி​யம் ரூ.16.05 கோடியில் இருந்து ரூ.27 கோடியாக அதி​கரிக்க உள்​ளது. ஏற்​கெனவே உலகின் அதிக சம்​பளம்...
அமெரிக்​கப் போர்க்​கப்​பல் மீது தாக்​குதல் முயற்​சிக்கு பதிலடி கொடுக்​கும் வித​மாக கார்க் தீவு அருகே ஈரானின் 5 கச்சா எண்​ணெய் கப்​பல்​கள் மீது அமெரிக்கா தாக்​குதல் நடத்தியுள்​ளது. அமெரிக்க போர்க்​கப்​பல் மீது ஈரான் நாட்​டின் இஸ்​லாமிய புரட்​சிகர காவல் படை (ஐஆர்​ஜிசி) அடுத்​தடுத்து இரண்டு முறை பாலிஸ்​டிக் ஏவு​கணை​களை வீசி தாக்​குதல் நடத்​தி​யது. இந்த தாக்​குதல் முயற்​சிக்கு சரி​யான பதிலடி கொடுக்​கும்​படி அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் உத்​தர​விட்​டார். அதன்​பேரில், ஓமன்...
மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கைச் சென்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு தலைநகர் கொழும்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, இலங்கை துணை ராணுவ அமைச்சர் மேஜர் ஜெனரல் அருணா ஜெயசேகரா கொழும்பு விமான நிலையத்தில் வரவேற்றார். மேலும், இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா உள்ளிட்டோரும் ராஜ்நாத் சிங்கை வரவேற்றனர். கொழும்பு புறப்படுவதற்கு முன்பாக ராஜ்நாத் சிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “மூன்றுநாள் அரசு...