எஸ்சிஓ உச்சி மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பிரதமர் மோடியை கத்தரித்து (Crop) விட்டு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் அதை பகிர்ந்திருந்தார். இது சர்ச்சையாகி உள்ளது. இந்தியா அதே படத்தை முழுவதுமாக பகிர்ந்துள்ளது.
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு திங்கட்கிழமை தொடங்கியது. இதில் பெலாரஸ், இந்தியா, கஜகஸ்தான், ஈரான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனா, கிர்கிஸ்தான் ஆகிய...
ஹார்முஸ் ஜலசந்தி அருகே அமைந்துள்ள ஈரானின் ராணுவ இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் செவ்வாய்க்கிழமை மீண்டும் வான்வழித் தாக்குதல்களை நடத்தின. இரண்டு நாட்களில் அமெரிக்கா நடத்திய இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.
ஈரானின் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, ஈரான் மீண்டும் சண்டைக்கு வந்தால் அதைவிட கொடூரமான அழிவைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் கடலோரப் பகுதிகளான கெஷ்ம்...
நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000-ஐ தாண்டி உள்ளது. 4,400 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. நேபாளத்தில் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் இரவு, பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அங்கு நேற்று 7-வது நாளாக மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்றது. இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. 4,400-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. இதில் 583 பேர் வெளிநாட்டினர் ஆவர். அவர்களில் பெரும்பாலானோர்...
நேபாளத்தின் முதல் பெண் ஹெலிகாப்டர் கேப்டனான பிரியா அதிகாரி, 6 நாட்களுக்குள் சுமார் 100 மீட்புப் பணிகளில் ஈடுபட்டு ஏராளமானோரை காப்பாற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இதுகுறித்து, நேபாளத்தின் முதல் பெண் ஹெலிகாப்டர் கேப்டனான பிரியா அதிகாரி கூறியதாவது: வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ரசுவா பகுதியில் இன்னும் ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர். திடீர் வெள்ளத்துக்குப் பிறகு திமுரே பகுதியில் இருந்து முதல் இரண்டு நாட்களில் மட்டும் 200-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.
ராணுவத்தின்...
நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போன நிலையில், அவர்களைத் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ஆயிரக்கணக்கானோர் சிக்கிய நிலையில், கண்டெடுக்கப்பட்ட உடல்களின் அடிப்படையில் உயிரிழப்புகள் குறித்த எண்ணிக்கை தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.
இந்த எண்ணிக்கை நாள்தோறும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அதேநேரத்தில், உடல்கள் கிடைக்காததால் பல உயிரிழப்புகள் குறித்த தகவல்கள்...
‘4 முதல் 5 வாரங்களில் போர் முடிந்துவிடும்’ என அமெரிக்க அரசால் கணிக்கப்பட்டு, ஈரான் மீது தொடங்கப்பட்ட போர் 6 மாதங்களைக் கடந்தும் முடியவில்லை. துப்பாக்கிச் சத்தம் ஓயாத மத்திய கிழக்கில், ‘யார் ஜெயித்தார்?’ என்ற கேள்வியை விட ‘யார் எதை இழந்தார்?’ என்ற கேள்விதான் பூதாகரமாக எழுந்துள்ளது.
வான்வழித் தாக்குதல்களும், பொருளாதாரத் தடைகளும் ஒரு தேசத்தைச் சாய்த்துவிடும் என்ற கணிப்பு தவிடுபொடியாகி, உலகப் பொருளாதார நெருக்கடியின் வாசலில் மத்திய...
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்றனர்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கூட்டமைப்பில் சீனா, ரஷ்யா, இந்தியா, உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், ஈரான், பெலாரஸ், கஜகஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த கூட்டமைப்பின் உச்சி மாநாடு கிர்கிஸ்தான் தலைநகர்...
கிர்கிஸ்தானில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் நேற்று நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அமெரிக்கா, ஈரான் இடையே தொடர்ந்து போர் பதற்றம் நீடிக்கிறது. ஈரானின் நெருங்கிய வர்த்தக கூட்டாளியாக விளங்கும் இந்தியா போரை நிறுத்தவும், அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணவும் இருதரப்பையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதேநேரத்தில் இந்தியா ஈரானுடன் வர்த்தகம் செய்வதை கடுமையாக எதிர்த்து வரும்...
திரிசூலி வங்கி லாக்கரில் இருந்து ரூ.51 கோடி தங்கம், ரொக்கம் மீட்பு: நேபாள காவல் துறை துணிச்சலான நடவடிக்கை
admin - 0
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் திரிசூலி பகுதியில் உள்ள விவசாய மேம்பாட்டு வங்கி பாதிக்கப்பட்டது. அங்குள்ள லாக்கரில் இருந்த ரூ.1.5 கோடி ரொக்கம், ரூ.50 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்களை காவல் துறையினர் மீட்டுள்ளனர்.
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தின் திரிசூலி பகுதியில் கடந்த புதன்கிழமை திடீரென கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள விவசாய மேம்பாட்டு வங்கியின் திரிசூலி துங்கே கிளை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதையடுத்து ஆபத்தான சூழ்நிலையிலும் உடனடியாகக்...
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் அங்கு பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான தகவல் கிடைத்ததும், கடந்த புதன்கிழமை இரவு சுமார் 8.35 மணியளவில், இந்திய விமானப் படையின் சி-130ஜே ரக விமானம், நேபாளத்துக்கு 10 டன் மனிதாபிமான மற்றும் பேரிடர் நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்தியாவில் இருந்து புறப்பட்டது.
சுற்றுச்சூழல் ரீதியாக மிகவும் பாதிக்கப்படக் கூடிய இமயமலை நாடான நேபாளத்தை உயிரிழப்புகளை ஏற்படுத்திய திடீர் வெள்ளம் தாக்கிய 12 மணி நேரத்துக்குள்...









