22 மணி நேர இடைநில்லா விமான சேவை: ஏர்பஸ் நிறுவனத்தின் சோதனை ஓட்டம் வெற்றி

0
18

நெடுந்​தூரம் நிற்​காமல் செல்​லக்​கூடிய வான்​வழிப் பயண வரலாற்​றில், ஒரு புதிய புரட்​சியை ஏற்​படுத்​தக்​கூடிய ஆஸ்திரேலியா​வின் குவாண்​டாஸ் நிறு​வனத்​தின் ‘புரொஜெக்ட் சன்​ரைஸ்’ திட்​டத்​தின் சோதனை ஓட்​டத்தை ஏர்பஸ் வெற்றிகரமாக செயல்​படுத்​தி​யுள்​ளது. இந்த நீண்ட பயணத்துக்கான விமானங்​களை குவாண்​டாஸ் நிறு​வனத்​துக்கு ஏர்​பஸ் நிறு​வனம் தயாரித்து வழங்க உள்​ளது.

அந்த வகை​யில், கடந்த பத்​தாண்​டு​களாகத் திட்​ட​மிடப்​பட்டு வந்த இந்த திட்​டம் இப்​போது முக்​கிய இலக்கை எட்​டி​யுள்​ள​தாக கூறப்படு​கிறது. கனவிலிருந்து நனவாக மாறத் தொடங்​கி​யுள்ள இந்த விமான சேவை திட்​டத்​தின் மூலம் ஆஸ்​திரேலி​யா​வின் கிழக்குக் கடற்​கரைப் பகு​தியி​லிருந்து லண்​டன், நியூ​யார்க் போன்ற நகரங்​களுக்​குப் பயணி​கள் இனி இடை​யில் எங்​கும் நிற்காமல் நேரடி​யாகப் பயணம் செய்ய முடி​யும்.

இந்​தக் கனவு நனவாவதற்​காக ஏர்​பஸ் நிறு​வனம், இதற்​கென பிரத்​யேக​மாக வடிவ​மைத்த ‘ஏ350-1000​யுஎல்​ஆர்’ ரக விமானம் தனது முதல் சோதனை ஓட்​டத்தை வெற்​றிகர​மாக நிறைவு செய்துள்​ளது. தற்​போது நியூ​யார்க்​கின் ஜே.எஃப்​.கே விமான நிலையத்​திலிருந்து சீனா​வின் ஃபுஸோவ் நகருக்கு ஜியாமென் ஏர் நிறு​வனம், 19 மணி நேரம் 20 நிமிட இடை நில்லா விமான சேவையை வழங்கி வரு​கிறது. இந்த உலக சாதனையை முறியடிக்​கும் வகை​யில் தற்​போது ஆஸ்​திரேலி​யா​வின் குவாண்டாஸ் விமான சேவை (22 மணி நேர இடை நில்லா விமான பயணம்) அமைய உள்​ளது.

நெடுந்​தூர வான்​வழிப் பயணத்​தில் புதிய மைல்​கல்​லாக அமையவுள்ள சோதனை பிரான்ஸ் நாட்​டின் டூலூஸ்​-பிளாக்​னாக் விமான நிலை​யத்​திலிருந்து புறப்​பட்ட முதல் ‘ஏ350-1000​யுஎல்​ஆர்’ விமானம் தனது முதல் பயணத்தை வெற்​றிகர​மாக முடித்துள்ளதாக ஏர்​பஸ் நிறு​வனம் அறி​வித்​துள்​ளது. ஏர்​பஸ் நிறு​வனத்​தின் பிரத்​யேகப் பரிசோதனைக் குழு​வின​ரால் இயக்கப்பட்ட இந்த வி​மானம், வான்​வெளி​யில் 3 மணி நேரம் 43 நிமிடங்​கள்​ பறந்​து, 41,000 அடி உயரத்​தை எட்​டியது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here