நாகர்கோவில் ரயிலில் பெண் தவறவிட்ட ஐந்தரை பவுன் நகை மீட்பு: வடமாநில பெண்ணிடம் விசாரணை

0
13
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் மாயமான ஐந்தரை பவுன் நகையுடன் கைப்பை மீட்பு நகலெடுக்க
ரயிலில் மாயமான ஐந்தரை பவுன் நகையுடன் கைப்பை மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைப்பு.

ஈரோடு சூரியம்பாளையத்தைச் சேர்ந்த இருதயமேரி (57), கடந்த 20ஆம் தேதி கோவையில் இருந்து ரயிலில் நாகர்கோவில் வந்தார். அப்போது ஐந்தரை பவுன் நகையுடன் அவரது கைப்பை மாயமானது.

புகாரையடுத்து ரயில்வே பாதுகாப்புப் படையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், கைப்பையை வடமாநில இளம்பெண் எடுத்தது தெரியவந்தது. ரயில் மீண்டும் கோவை புறப்பட்டதால், விருதுநகர் போலீசாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

அங்கு பெண்ணிடம் விசாரித்தபோது, கேட்பாரற்றுக் கிடந்த பையை எடுத்ததாகத் தெரிவித்தார். கைப்பையும் நகையும் மீட்கப்பட்டு இருதயமேரியிடம் ஒப்படைக்கப்பட்டன.

அவர் புகார் அளிக்காததால் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here