5 மொழிகளில் உரு​வாகும் ‘ஆதி ருத்ரா’

0
8

ஆதி சாய்​குமார் கதாநாயக​னாக நடிக்​கும் படத்​துக்கு ‘ஆதி ருத்ரா’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இதை திரிசூல் என்​டர்​டெயின்​மென்ட்ஸ் சார்​பில் பிரசாந்த் ஜி. ருத்​ரப்பா தயாரிக்​கிறார். நவரசன் எழுதி இயக்​கும் இப்​படத்​தின் கதை, 1960 முதல் 1990 வரையி​லான கால​கட்​டத்​தின் பின்​னணி​யில் மர்​மங்​களை​யும், ஆன்​மிகம் மற்​றும் நம்​பிக்கை சார்ந்த அம்​சங்​களை​யும் மைய​மாகக் கொண்டு அமைக்​கப்​பட்​டுள்​ளது.

பி.அஜனீஷ் லோக்​நாத் இசையமைக்​கிறார். ஏ.ஜெ. ஷெட்டி ஒளிப்பதிவு செய்​கிறார். தெலுங்கு, கன்​னடம், தமிழ், இந்தி, மலையாளம் என 5 மொழிகளில் உரு​வாகும் இதன் படப்​பி​டிப்பு ஜனவரி​யில் தொடங்க இருக்​கிறது. இப்​படத்​தில் நடிக்​கும் மற்ற நடிகர்​கள், தொழில் நுட்​பக் கலைஞர்​கள் குறித்த கூடுதல் தகவல்கள் அடுத்​தடுத்து வெளியாகும் எனவும் மர்​மம், பரபரப்பு, உணர்​வு​ப்​பூர்​வ​மான தருணங்​கள் என ரசிகர்​களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்​கும் வகை​யில் இப்​படம் உரு​வாகவுள்​ளது எனவும் படக்​குழு தெரி​வித்​துள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here