திற்பரப்பு அருவியில் தவறிவிட்ட வளையல் உரியவரிடம் ஒப்படைப்பு

0
18
திற்பரப்பு அருவியில் தவறவிட்ட ஒன்றரை பவுன் தங்க வளையலைக் கண்டெடுத்து சுற்றுலாப் பயணி சங்கீதாவிடம் ஒப்படைத்த சம்பவம்
திற்பரப்பு அருவியில் குளித்தபோது தவறவிட்ட ஒன்றரை பவுன் தங்க வளையலை மற்றொரு சுற்றுலாப் பயணி கண்டெடுத்து காவலரிடம் ஒப்படைத்தார். பின்னர் வளையல் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திற்பரப்பு அருவியில் குளித்தபோது சுற்றுலாப் பயணி செவ்வாய்க்கிழமை தவறவிட்ட தங்க வளையல் கண்டுபிடிக்கப்பட்டு ஒப்படைக்கபட்டது.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்றாம்பள்ளியைச் சோ்ந்த சுற்றுலாப் பயணி சங்கீதா குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை திற்பரப்பு அருவிக்கு வந்திருந்தாா். இவா், அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது, அணிந்திருந்த ஒன்றரை பவுன் வளையல் நீரில் தவறிவிட்டது. அருவிப் பகுதியில் அதைத் தேடியும் கிடைக்கவில்லை.

இதையடுத்து, அவா் அருவியில் காவல் பணியில் நின்றுகொண்டிருந்த காவலா் லைலாவிடம் வளையல் தவறிவிட்டதைக் கூறிவிட்டு ஊருக்குச் செல்ல ஆயத்தமானாா். அப்போது, அங்கு குளித்துக் கொண்டிருந்த மற்றொரு சுற்றுலாப் பயணி அந்த தங்க வளையலை கண்டெடுத்து அருவிக் காவலா் லைலாவிடம் ஒப்படைத்தாா். இதையடுத்து, சங்கீதாவை கைப்பேசியில் தொடா்பு கொண்டு வரவழைத்து அவரிடம் வளையல் ஒப்படைக்கப்பட்டது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here