Google search engine
பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீர் மற்​றும் சீனா எல்லைப் பகு​தி​யில் உள்ள காரகோரம் மலைத்​தொடரில், உல​கின் 12-வது மிக உயர்ந்த சிகர​மான ‘பி​ராட் பீக்’ அமைந்துள்ளது. புகழ்​பெற்ற நேபாள வம்​சாவளி மலை​யேற்ற வீர​ரான நிர்​மல் ‘நிம்ஸ்’ புர்ஜா உள்​ளிட்ட 6 பேர் அடங்​கிய குழு​வினர் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், அவர்கள் சென்று கொண்டிருந்த மேற்​குப் பகுதி பாதை​யில், சுமார் 21,600 முதல் 21,850 அடி உயரத்​தில் கடந்த வெள்​ளிக்​கிழமையன்று திடீரென பனிச்​சரிவு ஏற்​பட்​டது....
பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விலைவாசி உயர்வை கண்டித்து கடந்த ஏப்ரலில் மிகப் பெரிய போராட்டம் வெடித்தது. அப்போது பொதுமக்கள் மீது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு தாக்குதல்களை நடத்தினர். தற்போது ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 53 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஜூலை 27, ஆக.2-ம் தேதிகளில் இரு கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ளன. வரும் 10-ம் தேதி மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற...
வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இருந்து இரு தினங்களில் மட்டும் ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள சியூட்டா தீவுக்கு ஏறக்குறைய 60,000-க்கும் மேற்பட்ட மக்கள் கடல்வழியாக அகதிகளாக புலம்பெயர்ந்துள்ளனர். அவர்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் ஸ்பெயின் அரசு தீவிரத்துடன் செயல்பட்டு வருகிறது. 2021-ம் ஆண்டில் இதேபோன்ற அகதிகள் ஊடுருவலை ஸ்பெயின் அரசு சந்தித்தது. ஆனால், முன் எப்போதும் இல்லாத இந்த அளவு அகதிகளின் சட்டவிரோத வருகையைப் பார்த்து திகைத்து நிற்கிறது. இதனால்,...
ஸ்​பெ​யினுக்​குள் ஊடுரு​விய அகதி​கள் உணவு இல்​லாமல் மீண்​டும் சொந்த நாடான மொராக்​கோவுக்கு திரும்பி உள்​ளனர். ஐரோப்​பிய கண்​டத்​தில் அமைந்​துள்ள ஸ்பெ​யினும், ஆப்​பிரிக்க கண்​டத்​தில் உள்ள மொராக்​கோ​வும் அண்டை நாடு​களாக உள்​ளன. முஸ்​லிம் நாடான மொராக்​கோ​வில் வறுமை, வேலை​வாய்ப்​பின்மை அதி​கரித்து வரு​கிறது. இதன்​காரண​மாக மொராக்கோ மக்​கள், வளமான ஸ்பெ​யின் நாட்​டுக்​குள் ஊடுருவ தொடர்ந்து முயற்சி செய்து வரு​கின்​றனர். கடந்த 2021-ம் ஆண்டு மே, ஆகஸ்ட் மாதங்​களில் மொராக்​கோவை சேர்ந்த சுமார் 9,000...
 பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடைபெற்ற அமைதிப் பேரணியின் போது நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 5 காவலர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஸ்வாத் மாவட்டத்தில் உள்ள கபல் காவல் நிலையம் அருகே ஸ்வாத் அமைதி ஜிர்கா என்ற உள்ளூர் அமைப்பு சார்பில் தீவிரவாதத்திதுக்கு எதிராக அமைதிப் பேரணி நடைபெற்றது. பேரணியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு தீவிரவாதத்திதுக்கு எதிராக முழக்கமிட்டபடி சென்றபோது, காவல் நிலையம்...
மத்​திய கிழக்கு நாடு​களின் கோரிக்​கையை ஏற்று ஈரான் மீதான தாக்​குதல் நிறுத்​தப்​படு​கிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார். அமெரிக்​கா - ஈரான் இடையே கடந்த பிப்​.28-ம் தேதி போர் தொடங்​கியது. கடந்த ஏப்​.8-ம் தேதி இருதரப்பு இடையே போர் நிறுத்​தம் அமலுக்கு வந்​தது. ஜூன் 17-ம் தேதி இரு நாடுகள் இடையே அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. ஆனால், ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் சென்ற சில சரக்கு கப்​பல்​கள் மீது...
 சீனா​வின் பல துறை​களி​லும் இந்தியர்கள் கனிச​மாக பணி​யாற்​றுகின்​றனர். இவர்​கள் சந்​திக்​கும் பிரச்​சினை​கள் குறித்து கருத்து கேட்க, தலைநகர் பெய்​ஜிங்​கில் உள்ள இந்​திய தூதரகம் சார்​பில் முதல் முறை​யாக ‘திறந்த வெளி’ ஆலோ​சனைக் கூட்​டம் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இதில் இந்​தி​யத் தூதர் விக்ரம் துரைசாமி, ஆலோ​சகர்​கள் நிதின் ஜீத் சிங் மற்​றும் ரமேஷ் சிங் ஆகியோர் கலந்து கொண்டு இந்தியர்​களிடம் கருத்து கேட்​டனர். இதில் பங்​கேற்ற இந்​தி​யர்​கள் கூறிய​தாவது: சீன...
ஈ​ரானில் பல இடங்​களை குறி​வைத்து அமெரிக்கா நேற்று முன்​தினம் இரவு மிகப் பெரிய தாக்​குதலை நடத்​தி​யது. இதில் ஈரானின் பல இடங்​களில் உள்ள ஏவு​கணை மற்​றும் டரோன் மையங்​கள், கண்​காணிப்பு மையங்​கள், ராணுவ தளங்​கள் அழிக்கப்​பட்​டன. ஈரான் மீது தொடர்ந்து 2 வாரங்​களாக தாக்​குதல் நடத்தி வந்த அமெரிக்​கா, ஆயுதக் கையிருப்பு குறைந்​த​தால் ஈரான் மீதான தாக்​குதலை நிறுத்தி வைத்​திருந்​தது. ஈரானுக்கு ஆதர​வாக ஈராக்கில் செயல்​படும் ஹவுதி தீவிர​வாத அமைப்​பு​கள்,...
 நேபாளத்​தின் கோஷி மாகாணம், சுன்​சரி மாவட்டம் இந்​திய எல்​லையை ஒட்​டி​ அமைந்​துள்​ளது. அங்கு இரு மதத்​தினரின் பண்​டிகை கொண்​டாட்​டங்​களின் போது திடீரென தகராறு ஏற்​பட்​டது. இது வன்​முறை​யாக மாறியது.நில​வரத்​தைக் கட்​டுப்​படுத்த காவல்​ துறை​யினர் துப்​பாக்​கிச்​சூடு நடத்​தினர். இதில் ஒரு​வர் உயிரிழந்​தார். மேலும், பாது​காப்​புப் படை​யினர் உட்பட 10-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இதைத் தொடர்ந்​து, கடந்த திங்​கள்​கிழமை அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்​பிக்​கப்​பட்​டது. நேற்று 4-வது நாளாக இந்த ஊரடங்கு தொடர்ந்து அமலில்...
பாகிஸ்தானில் பதற்​றம் நிறைந்த கைபர் பக்துன்கவா மாகாணத்​தின் ஹங்கு மாவட்​டத்​தில் உள்ள ஒருகாவல் சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் நேற்று முன்தினம் தாக்​குதல் நடத்​தினர். இதையடுத்து அங்கு கூடு​தல் போலீ​ஸார் அனுப்பி வைக்கப்பட்டனர். கூடு​தல் போலீ​ஸார் சென்ற வாக​னம் மீதும் தீவிரவாதிகள் துப்​பாக்​கிச்​சூடு நடத்​தினர். இதற்கு பதிலடி கொடுக்​கும் நடவடிக்​கை​யில் போலீ​ஸார் நேற்று ஈடு​பட்​டனர். அப்போது தீவிர​வா​தி​களும் எதிர் தாக்​குதல் நடத்​தினர். இதுகுறித்து போலீஸ் செய்​தித் தொடர்​பாளர் நேற்று கூறுகை​யில், “ஹங்கு...