அமெரிக்கா​வில் வசித்து வந்த இந்தியர் திருமணமான 17-வது நாளில் உயிரிழப்பு

0
12

அமெரிக்காவில் வசித்து வந்த இந்தியர் ஒரு​வர் திருமண​மான 17-வது நாளி​லேயே சடல​மாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்​கா​வின் மசாசூசெட்ஸ் மாகாணம் லோவெல் நகரில் வசித்து வந்​தவர் 28 வயதான முகமது ஜாபர் ஹுசைன். இவர் தெலங்​கானா மாநிலம் ஹைத​ரா​பாத்​தி​லுள்ள சந்​தோஷ் நகரைச் சேர்ந்​தவர். 2021-ல் உயர்​கல்விக்​காக அமெரிக்கா சென்ற முகமது ஜாபர், படிப்பை முடித்த பின்​னர் அங்​கேயே சிவில் இன்​ஜினீய​ராக வேலை பார்த்து வந்​தார்.

இந்​நிலை​யில், கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி இவருக்கு டெக்சாஸ் மாகாணத்​தில் திரு​மணம் நடை​பெற்​றது. திரு​மணம் முடிந்த நிலை​யில் முகமது ஜாபர் லோவெல் நகருக்​குத் திரும்பினார்.

இந்​நிலை​யில், 2 நாட்​களுக்கு முன்பு அவர் வீட்​டிலுள்ள படுக்கை அறை​யில் இறந்த நிலை​யில் கிடந்​தார். அவருக்கு எப்​படி மரணம் ஏற்​பட்​டது என்ற காரணம் தெரிய​வில்​லை. இந்​நிலை​யில் முகமது ஜாபரின் உடலை இந்​தி​யா​வுக்​குக் கொண்டு வரு​வதற்கு மத்​திய வெளி​யுறவுத்​துறை அமைச்​சகம் உதவ வேண்​டும் என்று மஜ்லிஸ் பச்​சாவோ தஹ்ரீக் (எம்​பிடி) அமைப்​பின் நிர்​வாகி அமானுல்லா கான் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here