Monthly Archives: May 2024
மும்பை ஓட்டல் அதிபர் கொலை வழக்கில் பிரபல தாதா சோட்டா ராஜனுக்கு ஆயுள் சிறை: மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
மும்பை ஓட்டல் அதிபர் ஜெயா ஷெட்டி கொலை வழக்கில் பிரபல தாதா சோட்டா ராஜனுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் நேற்று ஆயுள் தண்டனை விதித்தது.
மும்பை திலக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திர சதாசிவ நிகல்ஜி. சிறு வயதில் சினிமா தியேட்டர்களில் டிக்கெட்டை பிளாக்கில் விற்று வந்த இவர் போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் சிறை சென்றார். சிறை தண்டனைக்குப் பின் இவர் படா ராஜன் தாதா கும்பலில் இணைந்தார். படா ராஜன் மறைவுக்குப் பின் அவரது கும்பலுக்கு ராஜேந்திர சதாசிவ நிகல்ஜி தலைமை தாங்கியதால்...
கனடா கல்லூரியில் சீட்டு வாங்கித் தருவதாக இந்திய மாணவர்களை ஏமாற்றிய முகவருக்கு 3 ஆண்டுகள் சிறை
கனடா நாட்டில் உயர்கல்வி படிக்க போலி அனுமதிச் சீட்டு விநியோகித்து இந்திய மாணவர்களை ஏமாற்றி வந்த இந்திய முகவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்து கனடா நீதிமன்றம் உத்தரவிட்டது.
ப்ரிஜேஷ் மிஸ்ரா (37) என்பவர் தன்னை குடியேற்றப்பிரிவு முகவர் என கூறிக்கொண்டு பஞ்சாப் மாநிலத்தில் அலுவலகம் நடத்தி வந்தார். கனடா நாட்டின் முன்னணி கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் படிக்கும் கனவோடுஇருக்கக்கூடிய எளிய குடும்பப்பின்னணி கொண்ட மாணவர்கள்தான் இவரது இலக்கு. பள்ளிப்படிப்பை முடித்துவிட்டுகனடா சென்று பட்டப்படிப்பு படிக்க துடிக்கும் மாணவர்களின் குடும்பத்தினர் இவரை நம்பி அணுகினர். அப்படி...
ஒடிசாவில் புரி ஜெகந்நாதர் கோயில் விழாவில் பட்டாசு வெடி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு: 32 பேர் படுகாயம்
ஒடிசாவில் புரி ஜெகந்நாதர் கோயில் விழாவில் நிகழ்ந்த பட்டாசு வெடி விபத்தில் சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 32 பேர் காயம் அடைந்தனர்.
ஒடிசாவின் புரி நகரில் உள்ள புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயிலில் 42 நாள் சந்தன் ஜாத்ரா திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் புதன்கிழமை இரவு நரேந்திர புஷ்கரணியில் நடைபெறும் விழாவை காண அதன் கரையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். இங்கு பக்தர்களில் ஒரு குழுவினர் பட்டாசு வெடித்து விழாவை கொண்டாடினர். அப்போது அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த பட்டாசு குவியல்...
வீட்டு உரிமையாளரை அடித்த வழக்கில் சமாஜ்வாதி எம்பி ஆசம் கானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
உத்தர பிரதேசம் துங்கர்பூர் பகுதியில் வசித்து வந்த வீட்டு உரிமையாளர் அப்ரார், கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி போலீஸில் ஒரு புகார் அளித்தார்.
அலே ஹாசன் மற்றும் ஒப்பந்ததாரர் பர்கத் அலி ஆகிய இருவர் தனது வீட்டுக்குள் புகுந்து தன்னை தாக்கிவிட்டு, வீட்டைக் கொள்ளையடித்ததாக அந்தப் புகாரில் கூறியிருந்தார். மேலும் தன்னை கொலை செய்யவும், தனது வீட்டை முற்றிலுமாக இடித்து தரைமட்டமாக்கவும் அவர்கள் முயன்றதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவத்துக்குப் பின்னால் சமாஜ்வாதி கட்சி எம்.பி. முகமது ஆசம் கான் சதித்திட்டம் தீட்டியதாகக்...
தங்க கடத்தல் வழக்கில் காங். மூத்த தலைவர் சசி தரூரின் முன்னாள் செயலாளர் கைது
திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி எம்.பி.யாக சசி தரூர் உள்ளார். தற்போதைய தேர்தலில் அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அவர் போட்டியிடுகிறார். அவரது தனிச் செயலாளராக சிவகுமார் பிரசாத் (72) என்பவர் பணியாற்றினார். வயது மூப்பு காரணமாக அவர் பணியில் இருந்து விலகிக் கொண்டார்.
இந்த சூழலில் டெல்லி விமான நிலையத்தில் கடந்த புதன்கிழமை தங்க கடத்தல் கும்பலை சுங்கத் துறை அதிகாரிகள் பிடித்தனர். அவர்களில் சிவகுமார் பிரசாத்தும் ஒருவர். அவரிடம் இருந்து ரூ.35 லட்சம் மதிப்புள்ள 500 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்...
சிறுவர்கள் வாகனம் ஓட்டி விபத்தானால் பெற்றோருக்கு 3 மாதம் சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம்: புதிய விதிகள் நாளை முதல் அமல்
18 வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பதோடு, 3 மாதங்கள் சிறை தண்டனைக்கு வழிவகுக்கும் விதிகள் நாளை (ஜூன் 1) முதல் அமலுக்கு வருகிறது.
இதுதொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது: மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் புதிய ஓட்டுநர் உரிம விதிகள் ஜூன் 1-ம் தேதி முதல்அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் எளிமைப்படுத்தப்படும். மேலும், புகை வெளியீடு விதிகளை கடுமையாக்கி, அதிக புகையை வெளியிடும் 9 லட்சம்...
கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் அமர்ந்து தியானம் தொடங்கினார் பிரதமர் மோடி
கன்னியாகுமரி பகவதியம்மனை தரிசித்து, விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானத்தை பிரதமர் மோடி நேற்று இரவு தொடங்கினார். வான்வழி, கடல்வழி, தரைவழி என முப்படை பாதுகாப்பு கன்னியாகுமரியில் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மக்களவைக்கான இறுதி கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில், 132 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரியில் கடல்நடுவே சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த பாறையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி 45 மணிநேரத்துக்கு தியானம் மேற்கொள்கிறார்.
இதற்காக, பிரதமர் மோடி டெல்லியில் இருந்து...
3-டி பிரின்டிங் முறையில் உருவான இன்ஜின்: அக்னிபான் ராக்கெட் சோதனை வெற்றி
உலகிலேயே முதல்முறையாக முப்பரிமாண பிரின்டிங் முறையில் உருவாக்கப்பட்ட செமி கிரையோஜெனிக் இன்ஜினுடன் கூடிய அக்னிபான் தனியார் ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் நேற்று வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.
சென்னை ஐஐடியுடன் இணைந்து ஏராளமான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அந்த வகையில், அக்னிகுல் காஸ்மோஸ் என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் தனியார் பயன்பாட்டுக்கு தேவைப்படும் சிறிய ரக ராக்கெட்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, அதிகபட்சம் 300கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களை ஏவும் திறன் கொண்ட ‘அக்னிபான்’ என்ற சிறிய ரக ராக்கெட்டை உருவாக்கியது. முப்பரிமாண (3-டி) பிரின்டிங்...
பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலர் ஆலோசனை: ஜூன் 11 முதல் 19 வரை நடைபெற உள்ளது
மக்களவைத் தேர்தல் விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பின், ஜூன் 11 முதல் 19-ம் தேதி வரை 4 நாட்கள் மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்துகிறார்.
மக்களவை பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது. தற்போது தேர்தல் நடத்தை விதிகள்அமலில் இருப்பதால், அரசு தொடர்பான எந்த நிகழ்வுகளையும் நடத்த முடியாத நிலை உள்ளது.
சட்டப்பேரவை கூட்டம்: தேர்தல் முடிவுகள் வெளியான பின், வரும் ஜூன் 6-ம் தேதியுடன் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படும் என தெரி கிறது....
அனைத்து மெமு வகை ரயில்களிலும் ஜூன் முதல் தலா 4 கழிப்பறை: ரயில்வே அதிகாரிகள் தகவல்
அனைத்து மெமு வகை ரயில்களிலும் ஜூன் முதல் தலா 4 கழிப்பறைகள் வசதி ஏற்படுத்தப்படும் என்று தெற்கு ரயில்வேஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை ரயில்வே கோட்டத்தின் கீழ், சென்னை கடற்கரை - தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு மார்க்கம், சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மற்றும் திருவள்ளூர் மார்க்கம் உட்பட பல்வேறு மார்க்கங்களில் தினசரி 450-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர காட்பாடி– அரக்கோணம், சென்னை கடற்கரை – மேல்மருவத்துார், திருத்தணி – சென்ட்ரல், பித்ரகுண்டா – சென்ட்ரல் உட்பட பல்வேறு தடங்களில் 12-க்கும் மேற்பட்ட மெமு...














