Home 2024
Yearly Archives: 2024
நாகர்கோவிலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
சட்டமேதை அம்பேத்கரை அவமதித்த மத்திய மந்திரி அமித்ஷா பதவி விலக கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஆகிய கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நேற்று (டிசம்பர் 30) நடந்தது.
இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஆகியவற்றின் குமரி மாவட்ட கிளை சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு மாநகராட்சி பூங்கா முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட...
நாகர்கோவில் ரயில் நேரம் மாற்றம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு தினசரி காலை 6.15 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்று வருகிறது. இந்த ரயில் நேரம் நாளை முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை ஜன. 1ம் தேதி காலை 6.45 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து இந்த ரயில் புறப்பட்டு வள்ளியூர், நாங்குநேரி, திருநெல்வேலி வழியாக மறுநாள் மாலை 7.05 மணிக்கு மும்பை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருமனை: மாலைக்கோட்டில் மரம் நடும் விழா
அருமனை அருகே மாலைகோட்டில் உள்ள நெய்யாறு இடதுகரை கால்வாய் கரையோரம் நேரயுகேந்திரா மற்றும் ஹார்ட் பீட்ஸ் கிளப், பள்ளி மாணவர்கள் சார்பில் 101 மரம் நடுவிழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தக்கலை அரசு பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் ஜோ பிரகாஷ் கலந்து கொண்டார். கிளப்பின் தலைவர் அனிஷ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளர் தலைமை ஆசிரியை விஜயகுமாரி மரம் வளர்ப்பின் முக்கியத்துவத்தை பற்றி விழிப்புணர்வு கருத்துரை வழங்கினார். விழாவின் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
மார்த்தாண்டம்: இன்று இரவு நற்செய்தி கூட்டம்
மார்த்தாண்டம் அருகே உள்ள நெட்டியான் விளையில் கர்த்தர் அதிசயங்களை செய்கிறார் என்ற தேவாலயம் உள்ளது. இந்த ஆலயம் சார்பில் ஆலய வளாகத்தில் வாக்குத்தத்த ஆசீர்வாத கூட்டம் என்ற தலைப்பில் நற்செய்தி கூட்டம் இன்று 31-ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 9:30 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை நடக்கிறது. கூட்டத்தில் கர்த்தர் அதிசயங்களை செய்கிறார் ஆலய நிறுவனர் பாஸ்டர் கே.என். ராஜன் வாக்குத்தத்த செய்திகளை வழங்குகிறார். பாடல் குழுவினர்கள் பாடல்களை பாடுகிறார்கள். இந்த கூட்டத்தில் சபை பாகுபாடு இன்றி அனைவரும் பங்கேற்க...
கொல்லங்கோடு: தூக்க நேர்ச்சை பெயர் பதிவு ஜனவரி 5 ல் தொடக்கம்
கிள்ளியூர் தொகுதி, கொல்லங்கோட்டில் பிரசித்தி பெற்ற பத்திரகாளி அம்மன் கோவில் தூக்கத் திருவிழா வருகின்ற மார்ச் மாதம் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவில் முக்கிய நிகழ்வான குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை ஏப்ரல் 1ஆம் தேதி நடக்கிறது. தூக்க நேர்ச்சையில் கலந்துகொள்ளும் குழந்தைகளுக்கான பெயர் பதிவு முதல்கோயிலில் உள்ள அலுவலகத்தில் ஜனவரி மாதம் 5ஆம் தேதி காலை முதல் துவங்குகிறது. இந்த தகவலை கோவில் நிர்வாக குழு செயலாளர் மோகன் குமார் தெரிவித்தார்.
நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டி: அரை இறுதியில் தமிழக அணிகள்
சென்னையை அடுத்த கவரைப்பேட்டை ஆர்எம்கே பள்ளியில் 30-வது தேசிய சப் ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் மகளிர் பிரிவில் தமிழக அணி, சத்தீஸ்கரை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் தமிழக அணி 25-22 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அரை இறுதி ஆட்டத்தில் தமிழக மகளிர் அணி, கேரளாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. ஆடவருக்கான கால் இறுதி ஆட்டத்தில் தமிழக அணி 32-29 என்ற கணக்கில் சத்தீஸ்கரை தோற்கடித்தது. அரை இறுதி ஆட்டத்தில் தமிழக அணி, தெலுங்கானாவை...
ஜிம்னாஸ்டிக்ஸில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்
குஜராத் மாநிலம் சூரத்தில் ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சப்-ஜூனியர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த அரியானா ஓபராய், பேலன்ஸ் பீம் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதேவளையில் ஜூனியருக்கான பேலன்ஸ் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த ஓசியானா தாமஸ் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். இவர்களின் செயல் திறனால் இந்த தொடரில் தமிழக அணி பதக்க பட்டியலில் 8-வது இடத்துக்கு முன்னேறியது.
ஐசிசி விருதுக்கு பும்ரா உள்ளிட்ட 4 பேர் பெயர்கள் பரிந்துரை
ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருதுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஜோ ரூட், ஹாரி புரூக் மற்றும் இலங்கையின் குஷால் மெண்டிஸ் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். பும்ரா இந்த காலண்டர் ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 71 விக்கெட்களை வேட்டையாடி உள்ளார்.
ஜோ ரூட் 17 டெஸ்டில் விளையாடி 55.57 சராசரியுடன் 1,556 ரன்கள் குவித்துள்ளார். இதில் 6 சதங்கள், 5 அரை சதங்கள் அடங்கும். ஹாரி புரூக் 12 போட்டிகளில் விளையாடி 4 சதங்கள்,...
ஜெய்ஸ்வால் மோசடி தீர்ப்பு: மவுனம் கலைத்த பிசிசிஐ!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மெல்பர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு பெரிய காரணமாக எழுந்திருப்பது ஜெய்ஸ்வாலுக்கு வங்கதேசத்தைச் சேர்ந்த டிவி அம்பயர் செய்கத் ஷர்ஃபுத்தவ்லா கொடுத்த மோசடி தீர்ப்பே காரணம் என்று கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், ‘காட்சிப்பிழை’யில் ஏற்பட்ட மோசடி என்று கடுமையாகச் சாட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ) கடுமையான கண்டனங்களை எழுப்பியுள்ளது.
உதாரணத்துக்கு சூழ்நிலையை மாற்றி யோசிப்போம், கள நடுவர் அவுட் கொடுக்கிறார்… ஜெய்ஸ்வால் ரிவ்யூ செய்கிறார். அப்போது என்ன...
எல்லை பிரச்சினை காரணமாக பாகிஸ்தான், தலிபான் இடையே கடும் சண்டை
எல்லை பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஆப்கானிஸ்தானின் தலிபான் வீரர்களுக்கு இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 46 பேர் உயிரிழந்தனர். தலிபான் வீரர்களின் தாக்குதலில் 19 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்து உள்ளனர்.
கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டில் ஆப்கானிஸ்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறின. இதைத் தொடர்ந்து அந்த நாட்டில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினர். தலிபான்களின் மூத்த தலைவர் முகமது ஹசன் அகுந்த் புதிய பிரதமராக பதவியேற்று ஆட்சி...














