கிள்ளியூர் தொகுதி, கொல்லங்கோட்டில் பிரசித்தி பெற்ற பத்திரகாளி அம்மன் கோவில் தூக்கத் திருவிழா வருகின்ற மார்ச் மாதம் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவில் முக்கிய நிகழ்வான குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை ஏப்ரல் 1ஆம் தேதி நடக்கிறது. தூக்க நேர்ச்சையில் கலந்துகொள்ளும் குழந்தைகளுக்கான பெயர் பதிவு முதல்கோயிலில் உள்ள அலுவலகத்தில் ஜனவரி மாதம் 5ஆம் தேதி காலை முதல் துவங்குகிறது. இந்த தகவலை கோவில் நிர்வாக குழு செயலாளர் மோகன் குமார் தெரிவித்தார்.