அருமனை அருகே மாலைகோட்டில் உள்ள நெய்யாறு இடதுகரை கால்வாய் கரையோரம் நேரயுகேந்திரா மற்றும் ஹார்ட் பீட்ஸ் கிளப், பள்ளி மாணவர்கள் சார்பில் 101 மரம் நடுவிழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தக்கலை அரசு பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் ஜோ பிரகாஷ் கலந்து கொண்டார். கிளப்பின் தலைவர் அனிஷ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளர் தலைமை ஆசிரியை விஜயகுமாரி மரம் வளர்ப்பின் முக்கியத்துவத்தை பற்றி விழிப்புணர்வு கருத்துரை வழங்கினார். விழாவின் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் நண்பர்கள் கலந்து கொண்டனர்.