ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருதுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஜோ ரூட், ஹாரி புரூக் மற்றும் இலங்கையின் குஷால் மெண்டிஸ் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். பும்ரா இந்த காலண்டர் ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 71 விக்கெட்களை வேட்டையாடி உள்ளார்.
ஜோ ரூட் 17 டெஸ்டில் விளையாடி 55.57 சராசரியுடன் 1,556 ரன்கள் குவித்துள்ளார். இதில் 6 சதங்கள், 5 அரை சதங்கள் அடங்கும். ஹாரி புரூக் 12 போட்டிகளில் விளையாடி 4 சதங்கள், 3 அரை சதங்களுடன் 55 சராசரியுடன் 1,100 ரன்கள் குவித்துள்ளார். குஷால் மெண்டிஸ் 9 போட்டிகளில் விளையாடி 74.92 சராசரியுடன் 1,049 ரன்கள் சேர்த்துள்ளார்.