“எ​திரணி​யைத் துளைக்​கும் பந்து​வீச்சு எங்​களிடம் இல்லை” – மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் ஜெயவர்தனே வருத்​தம்

0
17

மும்பை இந்தியன்ஸ் அணி​யின் ஒட்​டுமொத்​தப் பந்​து​வீச்சு துறை​யின் திறமை​யின்மை குறித்​தும், குறிப்பாக பவர் பிளே ஓவர்​களில் விக்​கெட்​டு​களை எடுக்க முடி​யாமல் திணறு​வது குறித்​தும் தனது கவலையை வெளிப்​படுத்​தி​யுள்​ளார் பயிற்​சி​யாளர் மஹேலா ஜெயவர்தனே.

ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் பஞ்​சாப் கிங்ஸ் அணிக்கு எதி​ராக நடை​பெற்ற ஆட்​டத்​தில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. இந்த ஆட்​டத்​தில் 196 ரன்​கள் இலக்கை துரத்​திய பஞ்​சாப் அணி ஸ்ரேயஸ் ஐயர், பிரப்சிம்​ரன் சிங் ஆகியோ​ராது அதிரடி​யால் 21 பந்​துகளை மீதம் வைத்து வெற்றி கண்​டது.

மும்பை அணி​யின் நட்​சத்​திர பந்​து​வீச்​சாள​ரான ஜஸ்​பிரீத் பும்ரா 4 ஓவர்​களை வீசி 41 ரன்​களை தாரை​வார்த்​தார். இம்முறை​யும் அவர், விக்​கெட் ஏதும் கைப்​பற்​ற​வில்​லை. மும்பை அணிக்கு 5 ஆட்​டங்​களில் 4-வது தோல்​வி​யாக இது அமைந்​தது. போட்​டிக்கு பின்​னர் மும்பை அணி​யின் பயிற்சி​யாள​ரான மஹேலா ஜெய​வர்​தனே கூறிய​தாவது: ஜஸ்​பிரீத் பும்ரா சிறப்​பாகவே பந்​து​வீசுகிறார்.

ஆனால் பவர் பிளே ஓவர்​களில் நாங்​கள் எதிரணிக்​குக் அழுத்​தத்தை கொடுக்​கத் தவறி​விடு​கிறோம். பும்​ரா​விற்கு எதி​ராகப் எதிரணி​யினர் பெரிய அளவில் ரிஸ்க் எடுப்பதில்லை. நாங்​கள் சில புதிய முயற்​சிகளைச் செய்து பார்த்​தோம். பும்​ரா​வும் சில விஷ​யங்​களை முயற்சி செய்து வரு​கிறார். ஆனால் எதிரணி​யினர் மிகச் சிறப்​பாகப் பேட்டிங் செய்​கிறார்​கள். அவர் விக்​கெட் எடுக்​காததற்கு இது​தான் காரணம் என்று என்​னால் எதை​யும் விரலை நீட்டி சொல்ல முடி​யாது.

டி20 உலகக் கோப்​பை​யின் போது ஏற்​பட்ட ஒரு சிறியகாயமே இதற்​குக் காரணம் என்று நான் நினைக்கிறேன். நாங்​கள் அவரது உடல்​நிலையை படிப்படியாக மேம்​படுத்த விரும்​பினோம். கடந்த சில போட்​டிகளாக அவரது பந்​து​வீச்சு வேகம் அதி​கரித்​துள்​ளது. அவர், தற்​போது சவு​கரிய​மாக உணர்​கிறார். சில நேரங்களில் சிறிய அளவில் அதிர்​ஷ்ட​மும் தேவைப்படுகிறது.

பஞ்​சாப் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் தொடக்​கத்​தில் ஸ்ரேயஸ் ஐயருக்கு பும்ரா மிகச்​சிறந்த பந்​துகளை வீசினார், ஆனால் அவருக்கு அதிர்​ஷ்டம் இல்​லை. அவர், ஒரு​முறை விக்​கெட்​டு​களை வீழ்த்​தத் தொடங்​கி​விட்​டால், அதன் பிறகு யாராலும் அவரைத் தடுக்க முடி​யாது. நான் முன்பே கூறியது போல, ஒரு பந்​து​வீச்சு குழு​வாக வெவ்​வேறு வகை​யான ஆடு​களங்​களில் எதிரணி​யைத் துளைக்கும் திறன் எங்​களிடம் குறை​வாகவே உள்​ளது. அதை நாங்​கள் சரிசெய்ய வேண்​டும்.

அதற்கு நாங்​கள் என்ன செய்ய வேண்​டும் என்​ப​தை​யும் ஆராய்ந்து வரு​கிறோம்.ரோஹித் சர்​மாவுக்கு ஏற்பட்டுள்ளது தீவிர​மான காயம் கிடை​யாது. பயிற்​சி​யில் அவர், பேட்​டிங் செய்​தார். நாங்​கள் அவரை அவசரப்​படுத்த விரும்​ப​வில்​லை. இது சீசனின் ஆரம்​பக் கட்​டம்​தான். எனவே ரோஹித் சர்​மா​வின் உடற்தகுதி குறித்து மருத்துவக் குழு​வினர் இறுதி முடிவை எடுப்​பார்​கள்.

ஹர்​திக் பாண்​டி​யா​வுக்கு மட்​டுமே நெருக்​கடி ஏற்பட்டுள்ளது என்று நான் நினைக்​க​வில்​லை. எங்​கள் அனை​வர் மீதும் நெருக்​கடி உள்​ளது. எப்​படி சிறப்​பாகச் செயல்பட வேண்​டும் என்​ப​தையே பார்க்க வேண்​டும். நாங்​கள் நல்ல கிரிக்​கெட்​டைத் தான் விளை​யாடு​கிறோம். நாங்​கள் போட்​டி​யில் இருந்து முற்​றி​லும்​ வெளி​யேற்​றப்​பட​வில்​லை. ஆ​னால்​ அதே நேரத்​தில்​ மற்​ற அணி​கள்​ எங்களை விட மிகச்​ சிறப்​​பாக​வும், துல்​லிய​மாக​வும்​ விளை​யாடு​கின்​றன. இவ்வாறு மஹேலா ஜெயவர்​தனே கூறி​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here