ஓவல் மைதானத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி

0
17

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறு​திப் போட்டி வரும் 2027-ம் ஆண்டு ஜூன் 9 முதல் 13 வரை லண்​டனில் உள்ள தி ஓவல் மைதானத்​தில் நடை​பெறும் என ஐசிசி அறிவித்துள்​ளது.

அடுத்த மூன்று உலக டெஸ்ட் சாம்​பியன்​ஷிப் இறுதி போட்​டிகளை நடத்​தும் உரிமையை இங்​கிலாந்து கடந்த ஆண்டு கைப்​பற்​றி​யிருந்​தது. இதில் ஒவ்​வொரு போட்​டிக்​கு​மான மைதானத்​தைத் தேர்ந்​தெடுக்​கும் பொறுப்​பு, இங்​கிலாந்து வாரி​யத்​திடமே உள்​ளது. இது​வரை நடை​பெற்ற 3 உலக டெஸ்ட் சாம்​பியன்​ஷிப் இறு​திப் போட்​டிகளும் இங்​கிலாந்​திலேயே நடை​பெற்று இருந்​தது.

தற்​போதைய உலக டெஸ்ட் சாம்​பியன்​ஷிப் சுழற்சியின் புள்​ளி​கள் பட்​டியலில் ஆஸ்​திரேலியா (87.50%) முதலிடத்​தில் உள்​ளது. தென் ஆப்​பிரிக்கா (75%), நியூஸிலாந்து (72.22%), வங்​கதேசம் (58.33%), இந்​தியா (48.15%), இலங்கை (41.67%), இங்​கிலாந்து (24.36%), மேற்கு இந்​தி​யத் தீவு​கள் (15%), பாகிஸ்​தான் (8.33%) ஆகிய அணி​கள் முறையே 2 முதல் 9-வது இடங்​களில்​ உள்​ளன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here