‘ஃபேமிலி பாய்’ – 5 ஆண்டுகளுக்குப் பிறகு..!

0
19

காணாமல் போன உழவு மாடுகளைத் தேடி அலையும் ஒரு விவசாயத் தொழிலாளியின் குடும்பத்தை மையமாக வைத்து உருவான ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ கடந்த 2021-இல் வெளியானது.

நடிகர் சூர்யா தயாரித்த அந்தப் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் மித்துன் மாணிக்கம். 5 ஆண்டுகளுக்குப் பின், தற்போது அவர் எழுதி இயக்கி நடித்துள்ள படம் ‘ஃபேமிலி பாய்’.

அவருடன் எம்.சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார், நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், சிவம், அருள் தாஸ், பி. எல். தேனப்பன் உள்படப் பலர் நடித்திருக்கிறார்கள்.

காணாமல் போன ஒரு பொருளை நாயகன் தேடி அலையும் ஒரு நாளில் நடக்கும் சம்பவங்கள்தான் இந்தப் படத்தின் கதை. டிசம்பர் 11 அன்று படம் ரிலீஸ் ஆகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here