ஆன்மீகப் பின்னணியில் ‘தத் த்வம் அஸி’ என்ற பெயரில் உருவான படத்தின் தலைப்பை ‘மணிகண்டா’ என்று மாற்றியுள்ளனர். இதில் வைபவ் கதாநாயகனாக நடித்துள்ளார். மீனாட்சி கோவிந்தராஜன், அரவிந்த் ஆகாஷ், ஆடுகளம் நரேன், ஹரீஷ் பெரேடி, அர்ஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தந்த்ரா ஃபிலிம்ஸ் சார்பில் ஜே.கே. சரவணா மற்றும் எம். ராஜாராம் தயாரிக்கின்றனர். வெங்கட் பிரபு இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசராகப் பணியாற்றுகிறார். ‘மாளிகப்புரம்’ படத்தை இயக்கிய விஷ்ணு சசி சங்கர் இயக்குகிறார். பிரேம் ஜி அமரன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு யுவன் செல்வா ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் முதல் தோற்றத்தை நடிகர் ரவிமோகன் வெளியிட்டுள்ளார்.
“ஐயப்ப பக்தர்களின் ஆன்மீகப் பயணத்தை மையமாகக் கொண்டு இதன் கதை உருவாகியுள்ளது. குடும்ப ரசிகர்களைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், ‘காந்தாரா’, ‘ஹனுமன் அன்ஸ்’, ‘கருப்பு’ போன்ற பக்தி மற்றும் ஆன்மீக அம்சங்கள் கலந்த படங்களின் வரிசையில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும்” என படக்குழு தெரிவித்துள்ளது.














