நாகர்கோவில் பெண் பயணிகளிடம் அலட்சியமாக நடந்து கொண்ட அரசு பஸ் டிரைவர் கண்டக்டர்

0
24
நாகர்கோவிலில் அரசுப் பேருந்தின் தானியங்கி கதவில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்ட பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
நாகர்கோவிலில் அரசுப் பேருந்தின் தானியங்கி கதவில் சிக்கி மூச்சுத்திணறலுக்கு ஆளான பெண், மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

நாகர்கோவில் கீழப்பெருவிளை கோயிலடி தெருவைச் சேர்ந்தவர். பாப்பா பார்வதிபுரம் பஸ் ஸ்டாப்பில் இருந்து WCC சந்திப்பு வரை செல்வதற்காக அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார்.

பயணி முழுமையாக உள்ளே செல்வதற்கு முன்பே, அலட்சியமாக தானியங்கி கதவை மூடியதில், பாப்பா கதவுகளுக்கு இடையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்குப் போராடியுள்ளார்.

பயணிகள் கூச்சலுக்குப் பிறகு கதவு திறக்கப்பட்ட போதிலும், கதவில் சிக்கியதால் பெரும் அதிர்ச்சிக்கும் மூச்சுத் திணறலுக்கும் ஆளான பயணிக்கு எவ்வித அடிப்படை முதலுதவி சிகிச்சையும் அளிக்காமல் பேருந்தை இயக்கியுள்ளனர்.

அதோடு நிறுத்தாமல், அதே பேருந்து ஆட்சியர் அலுவலகத்தை அடைந்தபோதும், மற்றொரு பெண் பயணி இறங்குவதற்கு முன்பாகவே கதவை மூடி அவரையும் கதவில் சிக்க வைத்துள்ளனர். ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் இந்தத் தொடர் கவனக்குறைவும் அலட்சியமும் பயணிகள் உயிருடன் விளையாடும் சட்டவிரோத செயலாகும்.

இதனிடையே தானியங்கி கதவில் சிக்கிய அதிர்ச்சியினாலும், அவர் ஏற்கனவே இதய நோயாளி என்பதனாலும், WCC சந்திப்பில் இறக்கிவிடப்பட்ட பாப்பா அவர்களுக்கு உடனடியாக கடுமையான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்து, தற்போது அவர் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகமும், கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகமும் உடனடியாக இந்தச் சம்பவத்தில் தலையிட வேண்டும்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here