கன்னியாகுமரியில் தாது மண் கடத்தல் விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை என்ன? மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி

0
15
Writing கன்னியாகுமரி மாவட்டத்தில் தாதுமண் கடத்தல் தொடர்பாக நடவடிக்கை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் தாதுமண் கடத்தல் புகார் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரியில் தாதுமண் கடத்தல்; நடவடிக்கை எடுக்க கோரி மனு

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்த சுனில்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

கன்னியாகுமரி மாவட்டம் பேரூராட்சி பகுதிகளில் சட்ட விரோதமாக இரும்பு ஆக்சைடு தாதுக்கள் நிறைந்த செம்மண்ணை அள்ளி கடத்தி விற்பனை செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் செயற்கை பேரிடரை உருவாக்கி வருகின்றனர். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும், அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

எடுத்த நடவடிக்கைகள் என்ன? மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி

இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் தெரிவிக்கும் சம்பவத்தில் 1,400 டன் மணல் கடத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ரூ.8 லட்சம் வரை அபராதம் விதித்து உள்ளனர் என்றார். அதற்கு மனுதாரர் வக்கீல் ஆஜராகி, தாது மண் கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு, அதிகாரத்தில் இருப்பவர்கள் சாதகமாக இருக்கிறார்கள் என்று மிரட்டி வருகின்றனர் என தெரிவித்தார். விசாரணை முடிவில், இந்த விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து மாவட்ட கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here