‘குட் நியூஸ்’ மூலம் தமிழில் அறிமுகமாகிறார் கல்யாணி அனில்

0
22

ஜெயராம், அஸ்​வின் முதன்​மைக் கதாபாத்​திரங்​களில் நடித்​துள்ள திரைப்​படம் ‘குட் நியூஸ்’. இப்​படம் மூலம் மலை​யாள நடிகை​யான கல்​யாணி அனில், தமிழ் சினிமாவில் நாயகி​யாக அறி​முக​மாகிறார்.

இவர்​களு​டன் ஆஷா சரத், முத்​துக்​குமார், ஜாஃபர், குரேஷி, தீபா, வினோதினி, திவ்யா, மணிமேகலை, ஜென்​சன் திவாகர் உள்​ளிட்ட பலர் நடித்​துளனர். அறி​முக இயக்​குநர் நாகேந்​திர முருகன் இயக்​கி​யுள்ள இப்​படத்​துக்கு இயக்​குநர் பாண்​டிராஜ் வசனம் எழுதி​யுள்​ளார்.

மூவிட்​ரோன் புரொடக் ஷன்ஸ் சார்​பில் சாய்​வினோத் ஜெயக்​குமார் தயாரித்​துள்ள இப்​படத்​துக்கு சித்​துக்​குமார் இசையமைக்​கிறார். “குடும்ப உணர்​வு​கள், நம் அன்​றாட வாழ்க்​கையுடன் தொடர்​புடைய மனித உறவு​களை மைய​மாகக் கொண்டு இதன் கதை உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

அனைத்து வயதினரும் ரசிக்​கும் வகை​யில் நகைச்​சுவை, பாசம், உணர்ச்​சிகர​மான தருணங்​கள் என பல அம்​சங்​கள் நிறைந்த பொழுதுபோக்​குத் திரைப்​பட​மாக இது அமையும்” என படக்​குழு தெரி​வித்​துள்​ளது. இதன் படப்​பி​டிப்பு நிறைவடைந்​துள்ள நிலை​யில் படப்​பி​டிப்​பின்​போது உரு​வான மறக்க முடி​யாத நினைவு​களைக் கொண்ட வீடியோவை படக்​குழு வெளி​யிட்​டுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here