குவான்ட் பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: பிரான்ஸின் அலிரேசா ஃபிரோஜா சாம்பியன்

0
19

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி​யின் 4-வது பதிப்பு வேளச்​சேரி​யில் நடை​பெற்​றது. இதன் கடைசி மற்​றும் 7-வது சுற்று நேற்று நடை​பெற்​றது.

உலக சாம்​பிய​னான இந்​தி​யா​வின் டி.கு​கேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்​ட​ரான ஹான்ஸ் நீமனுடன் மோதி​னார். இந்த ஆட்டம் 19-வது நகர்த்​தலின் போது டிரா​வில் முடிவடைந்​தது. மற்றொரு ஆட்​டத்​தில் இந்​திய கிராண்ட் மாஸ்​டர்​களான நிஹால் சரின், எம்​.பிரனேஷுடன் மோதி​னார். இந்த ஆட்​டம் 48-வது நகர்த்தலின் போது டிரா ஆனது.

3.5 புள்​ளி​களு​டன் 2-வது இடத்​தில் இருந்த உஸ்​பெகிஸ்​தான் கிராண்ட் மாஸ்​ட​ரான நோதிர்​பெக் அப்​துசத்​தோரோவ், ரஷ்​யா​வின் டிமிட்ரி ஆண்ட்​ரெய்​கினை எதிர்​கொண்​டார். இதில் வெற்றி பெறும் நோக்​கில் விளை​யாடிய வி நோதிர்​பெக் அப்​துசத்​தோரோவ் 37-வது நகர்​தலின் போது தோல்வி அடைந்​தார்.

6 சுற்​றுகள் வரை 4 புள்​ளி​களு​டன் முதலிடத்​தில் இருந்த பிரான்ஸ் கிராண்ட் மாஸ்​ட​ரான அலிரேசா ஃபிரோஜா, 3.5 புள்​ளி​களு​டன் 3-வது இடத்​தில் இருந்த இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான அர்​ஜூன் எரிகை​யுடன் மோதி​னார். அலிரேசா ஃபிரோஜா வெள்ளை காய்களு​ட​னும், அர்​ஜூன் எரி​கைசி கருப்பு காய்​களு​ட​னும் களமிறங்​கினர்.

இந்த மோதல் 41-வது நகர்த்​தலின் போது டிரா​வில் முடிவடைந்​தது. இதன் மூலம் 4.5 புள்​ளி​களு​டன் முதலிடம் பிடித்து அலிரேசா ஃபிரோஜா சாம்​பியன் பட்​டம் வென்​றார். அவருக்கு ரூ.25 லட்​சம் பரிசுத் தொகை வழங்​கப்​பட்​டது. இந்​தத் தொடரில் அலிரேசா ஃபிரோஜா தொடர்ச்​சி​யாக 2 வெற்​றிகளை​யும், அதன் பின்​னர் 5 டிராவை​யும் பதிவு செய்​திருந்​தார்.

அலிரேசா ஃபிரோஜாவை தவிர்த்​து, இந்த தொடரில் தோல்வியே சந்​திக்​காத ஒரே வீர​ரான டிமிட்ரி ஆண்ட்​ரெய்​கின், அர்​ஜூன் எரி​கைசி​யுடன் இணைந்து 4 புள்​ளி​களு​டன் போட்​டியை நிறைவு செய்​தார். அப்​துசத்​தோரோவ், நிஹால் சரின், எம்​.பிரனேஷ் ஆகியோர் தலா 3.5 புள்​ளி​களு​டன் முறையே 4, 5 மற்​றும் 6-வது இடத்தை பிடித்​தனர். அமெரிக்​கா​வின் ஹான்ஸ் நீமன் 3 புள்ளிகளு​டன் 7-வது இடம் பிடித்​தார். உலகச் சாம்​பிய​னான குகேஷின் சரிவு தொடர்ந்​தது. அவர் தனது ஏழு போட்​டிகளில் மூன்​றில் தோல்வியடைந்​து, 2 புள்​ளி​களு​டன்​ கடைசி இடத்​தைப்​ பிடித்​தார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here