சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் தொடர் வரும் நவம்பர் 2 முதல் 8 வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்தத் தொடரில் பிரதான சுற்றில் நேரடியாக கலந்து கொண்டு விளையாடுவதற்காக 4 வைல்டு கார்டு வீராங்கனைகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த வகையில் இந்தியாவின் வைஷ்ணவி அட்கர், சஹஜா யாமலபள்ளி, மாயா ராஜேஷ்வரன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த கேத்தரின் ஹுய் ஆகியோருக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது.














