ஆசிய பாரா விளையாட்டு போட்டி: இந்​தி​யாவின் பதக்க வேட்டை தொடர்​கிறது

0
16

ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் நேற்று ஒரே நாளில் இந்தியா 5 தங்​கம், 11 வெள்ளி, 16 வெண்​கலம் வென்​றது. இதனால் பதக்க பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறியது.

5-வது ஆசிய பாரா விளை​யாட்டு போட்டி ஜப்​பானின் ஐச்சி-நகோயா மாகாணத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதன் 3-வது நாளான நேற்று ஆட​வருக்​கான 100 மீட்​டர் ஓட்​டத்​தில் டி46/47 பிரி​வில் இந்​தி​யாவின் திலீப் காவித் பந்​தய தூரத்தை 10.69 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து தங்​கப் பதக்​கம் வென்​றார். மற்​றொரு இந்​திய வீரரான முகமது மோர்​சிங்​க​னகத் பசில் (10.72) வெள்​ளிப் பதக்​கம் கைப்​பற்​றினார்.

ஆட​வருக்​கான 100 மீட்​டர் டி 64 பிரி​வில் இந்​தி​யாவின் பிரணவ் தேசாய் (11.96) வெள்​ளிப் பதக்​கம் கைப்​பற்​றினார். மகளிருக்​கான 100 மீட்​டர் ஓட்​டத்​தில் டி 12 பிரி​வில் இந்​தி​யாவின் சிம்​ரன் சர்மா பந்​தய தூரத்தை 12.02 விநாடிகளில் கடந்து புதிய சாதனையுடன் தங்​கப் பதக்​கம் வென்​றார். நடப்பு தொடரில் சிம்​ரன் வெல்​லும் 2-வது தங்​கப் பதக்​கம் இது​வாகும். நேற்று முன்​தினம் 200 மீட்​டர் ஓட்​டத்​திலும் அவர், தங்​கம் வென்​றிருந்​தார்.

ஆட​வருக்​கான உயரம் தாண்​டுதலில் டி 44/64 பிரி​வில் இந்​தி​யாவின் பிரவீன் குமார் 2.05 மீட்​டர் உயரம் தாண்டி தங்​கப் பதக்​கம் வென்​றார். மற்​றொரு இந்​திய வீரரான பண்டி (1.92) வெள்​ளிப் பதக்​கம் கைப்​பற்​றினார்.

ஆட​வருக்​கான குண்டு எறிதலில் எஃப் 46 பிரி​வில் இந்​தி​யாவின் சச்​சின் சர்​ஜேராவ் கிலாடி 15.87 மீட்​டர் தூரம் எறிந்து தங்​கப் பதக்​கம் வென்​றார். மற்​றொரு இந்​திய வீரரான முகமது யாசர் (15.06) வெள்​ளிப் பதக்​கம் கைப்​பற்​றினார். ஆட​வருக்​கான குண்டு எறிதலில் எஃப் 53 பிரி​வில் இந்​தி​யாவின் ஆயுஷ் வர்மா 8.16 மீட்​டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து தங்​கப் பதக்​கம் வென்​றார்.

கஸ்தூரி ராஜாமணி

மகளிருக்​கான பவர்லிஃப்​டிங்​கில் 67 கிலோ எடைப் பிரி​வில் இந்​தி​யாவின் கஸ்தூரி ராஜாமணி 108 கிலோ எடையை தூக்கி 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​கம் வென்​றார். உஸ்பெகிஸ்தானின் ருக் ஷோனா உக்​தமோவா (127 கிலோ) தங்​கம் வென்​றார். கஸ்தூரி ராஜாமணி தமிழகத்தை சேர்ந்​தவர் ஆவார்.

பிரீத்ரி பால் (மகளிருக்​கான 100 மீட்​டர் ஓட்​டத்​தில் டி 35 பிரிவு) வெள்​ளிப் பதக்​கம் வென்​றார். மகளிருக்​கான குண்டு எறிதலில் எஃப் 34 பிரி​வில் இந்​தி​யாவின் பாக்ய ஜாதவ் வெள்​ளிப் பதக்​கம் கைப்​பற்​றினார். அனுபவ் சவுத்ரி (ஆட​வர் 100 மீட்​டர் ஓட்​டம் டி 35 பிரிவு), பர்​வீன் (ஆட​வருக்​கான குண்டு எறிதல் எஃப் 46 பிரிவு), ராகேஷ்​பாய் பாத் (ஆட​வருக்​கான 100 மீட்​டர் ஓட்​டம் டி 37 பிரிவு) ஆகியோர் வெண்​கலப் பதக்​கம் கைப்​பற்​றினர்.

பாட்​மிண்​டனில் ஆட​வருக்​கான இரட்​டையர் பிரி​வில் இந்​தி​யாவின் கிருஷ்ணா நாகர், சிவ​ராஜன் சோலைமலை ஜோடி 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​கம் வென்​றது. இதில் சிவ​ராஜன் சோலைமலை தமிழகத்தை சேர்ந்​தவர் ஆவார்.

வில்​வித்​தையில் மகளிருக்​கான காம்​பவுண்ட் அணிகள் பிரி​வில் ஷீத்​தல் தேவி, பாயல் நாக் ஜோடி இறுதிப் போட்​டி​யில் சீன ஜோடி​யிடம் தோல்வி அடைந்து வெள்​ளிப் பதக்​கம் வென்​றது.

ஆட​வருக்​கான நீச்​சலில் 100 மீட்​டர் பேக்ஸ்டிரோக் எஸ் 13 பிரி​வில் இந்​தி​யாவின் ரவி கார்த்​திக் புதி​கினா (1:10.10) வெள்​ளிப் பதக்​கம் வென்​றார். எஸ்பி 13 பிரி​வில் இந்​தி​யாவின் ஹிமான்ஷு நந்​தால் (1:20.72) வெள்​ளிப் பதக்​கம் கைப்​பற்​றினார்.

நேற்று மட்​டும் இந்​தியா 5 தங்​கம், 11 வெள்ளி, 16 வெண்​கலம் வென்​றது. இதன் மூலம் பதக்க பட்​டியலில் இந்​தியா 14 தங்​கம், 22 வெள்ளி, 26 வெண்​கலம் என 62 பதக்​கங்​களை வென்று 5-வது இடத்​துக்கு முன்​னேறியது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here