Google search engine
Home 2024 May

Monthly Archives: May 2024

“தீவிரவாதத்தை நீண்ட காலமாக கடைபிடித்து வந்தோரின் நிலை…” – ஜெய்சங்கர் கருத்து

தீவிரவாதத்தை நீண்ட காலமாக கடைபிடித்து வந்தவர்களை, அது அழிக்கத் தொடங்கியுள்ளது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்திய தொழிற்கூட்டமைப்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "ஒப்பந்தங்கள் அவமதிக்கப்பட்டதாலும், சட்டத்தின் ஆட்சி புறக்கணிக்கப்பட்டதாலும் நிலத்திலும் கடலிலும் புதிய பதற்றங்களை ஆசியா காண்கிறது. இந்தச் சூழலில், தீவிரவாதத்தை நீண்ட காலமாக கடைபிடித்து வந்தவர்களை, அது அழிக்கத் தொடங்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளார். கிழக்கு லடாக் எல்லையில் சீனாவின் ராணுவம் தொடர்ந்து நிலைகொண்டுள்ள நிலையில், எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும்...

கேஜ்ரிவாலின் உதவியாளரால் ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்ட விவகாரம்: வைரலாகும் புதிய வீடியோ

டெல்லி முதல்வரின் உதவியாளரால் ஆம் ஆத்மி கட்சி பெண் எம்.பி. ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் புதிய வீடியோ ஆதாரம் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, ஸ்வாதி மலிவால் அளித்த புகாரின் அடிப்படையில், டெல்லி முதல்வரின் இல்லத்தில் டெல்லி போலீஸாரும், தடயவியல் துறையும் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பியுமான ஸ்வாதி மலிவால், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இல்லத்தில் அவரது உதவியாளரால் தாக்கப்பட்டதாக போலீஸில் புகார் அளித்துள்ளார். திங்கள்கிழமை (மே 13) காலை டெல்லி காவல்...

“யோகியின் ‘புல்டோசர்’ இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது” – மோடிக்கு பதிலடி கொடுத்த ஜெய்ராம் ரமேஷ்

பிரதமர் மோடியின் கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ‘புல்டோசர்’ தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இண்டியா கூட்டணியினர் புல்டோசரை எங்கு இயக்க வேண்டும் என்பதை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால், யோகியின் 'புல்டோசர்' தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான...

மரக்காணம் திரவுபதி அம்மன் கோயில் திருவிழாவுக்கு மீண்டும் தடை: போலீஸ் குவிப்பு

மரக்காணம் திரவுபதி அம்மன் கோயில் திருவிழாவுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அசம்பாவிதங்களைத் தடுக்க 500-க்கும் மேற்பட்ட போலீஸார் மரக்காணத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். மரக்காணம், தர்மாபுரி வீதியில் அமைந்துள்ளது திரவுபதி அம்மன் கோயில். இக்கோயில் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாத பஞ்சமி திதியன்று கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம். தொடர்ச்சியாக 22 நாட்களுக்கு மகாபாரதம் நிகழ்ச்சிகளை வலியுறுத்தும் வகையில் திருவிழா நடத்தப்படும். இந்த திருவிழா இப்பகுதி பொதுமக்களால் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், கடந்த ஆண்டு கோயிலை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல வேண்டும் என சிலர் நீதிமன்றத்தில் வழக்கு...

தமிழகத்தில் இருந்து 5,800 பேர் ஹஜ் பயணம்: ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் சமது தகவல்

தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு 5,800 பேர் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் சமது தெரிவித்துள்ளார். தங்களின் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாக கருதப்படும் புனித ஹஜ் யாத்திரைக்காக ஆண்டுதோறும் முஸ்லிம்கள் சவுதி அரேபியாவின் மெக்கா மதினாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் நடப்பாண்டில் தமிழகத்தில் இருந்து முதல் குழுவாக சென்னை மாவட்டத்தில் இருந்து 150 பேர் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற அல் மக்கா ஹஜ் சர்வீஸ், எம்.எஸ்.வேர்ல்டு டிராவல் சர்வீசஸ், முஷமில் எண்டர்பிரைசஸ் நிறுவனம் ஆகியவற்றின்...

“பிரச்சாரக் கூட்டங்களில் அமித் ஷா தீவிரவாத பேச்சு” – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

 “தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அமித் ஷாவின் பேச்சு தீவிரவாத பேச்சாக இருக்கிறது. பசு வதை செய்தால், தலைகீழாக தொங்கவிடுவோம் என்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. இந்த பேச்சுகளை தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார். திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் திருப்பூரில் இன்று (மே 17) நடைபெற்றது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: “காங்கிரஸ் கட்சி வலிமையாக்கப்பட்டால் தான் ஜனநாயகம் காப்பாற்றப்படும்....

சிறுமிகள் கடத்தல் வழக்குகளில் தமிழக காவல் துறை நடவடிக்கை திருப்தியாக இல்லை: உயர் நீதிமன்றம்

சிறுமிகள் கடத்தல் வழக்குகளில் போலீஸாரின் நடவடிக்கை திருப்தியாக இல்லை என உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. திருமணமான 32 வயது நபரால் கடத்தப்பட்ட 16 வயது சிறுமியை மீட்கக் கோரி சிறுமியின் பெற்றோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதிகள் வேல்முருகன், ராஜசேகர் ஆகியோர் அமர்வு, “சிறுமிகள் மாயம் தொடர்பான வழக்குகளில் போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. மக்களின் பாதுகாப்புக்காகத் தான் காவல்துறை உருவாக்கப்பட்டது. ஆனால், காவல் துறையின் செயல்பாடுகள் அவ்வாறு இல்லை. தங்களை பலப்படுத்திக் கொள்ளவும் வளப்படுத்திக்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

பொதுமக்களுடன் கஞ்சி குடித்த திமுக வேட்பாளர்

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின், புனித வெள்ளியை முன்னிட்டு நாகர்கோவிலில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட கஞ்சியை அவர்களுடன் வரிசையில் நின்று வாங்கி அருந்தினார். இந்த நிகழ்வில்...

விளவங்கோட்டில் பாஜக சார்பில் களமிறங்கும் விஜயதரணி

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 27 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி நாகர்கோவில் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குளச்சலில் டி.சிவக்குமார், பத்மநாபபுரத்தில்...

குமரி: 3 தொகுதியில் களம் இறங்கும் காங்கிரஸ் வேட்பாளர்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 27 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் இன்று (ஏப்ரல் 3) வெளியாகியுள்ளது. அதன்படி குமரி மாவட்டம்  கிள்ளியூர் தொகுதியில் ராஜேஷ்குமார் போட்டியிடுகிறார். அதே போல்...