கர்நாடகாவில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பெங்களூரு ஆசிரியர் தொகுதி எம்எல்சி புட்டண்ணா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஆனால் அவருக்கு காங்கிரஸ் சார்பாக சீட் வழங்கப்படவில்லை. இதனால் கடந்த வாரம் நடந்த பெங்களூரு ஆசிரியர் தொகுதி சட்டமேலவை இடைத்தேர்தலில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக – மஜத கூட்டணி சார்பில் ஏ.பி.ரங்கநாத் போட்டியிட்டார்.
இந்த தேர்தலில் 16,063 வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் வேட்பாளர் புட்டண்ணா 8,260 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். பாஜக-மஜத கூட்டணி வேட்பாளர் ஏ.பி. ரங்கநாத் 6,753 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.