தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதல்வர் விஜய் 2 நாட்கள் பிரச்சாரம் செய்கிறார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் அக்.6-ம் தேதி நடக்கிறது. திமுக, அதிமுக, தவெக, நாதக, இந்திய கம்யூனிஸ்ட் உள்பட 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பிரதான கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள் பிரச்சாரம் செய்யும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின்,...
மின் பரிமாற்றம் மற்றும் விநியோக கட்டமைப்பை ஒருங்கிணைத்து தமிழகத்தை மின்துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்ற வேண்டும்’ என அமைச்சர், அதிகாரிகளுக்கு முதல் வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, அண்ணா சாலையிலுள்ள தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமையகத்துக்கு முதல்வர் விஜய் நேற்று திடீரென வருகை தந்தார். அப்போது மின் விநியோகம் மற்றும் மின் கட்டுப்பாடு தொடர்பான முக்கிய மையங்களை ஆய்வு செய்தார்.
மாநிலத்துக்கு தேவையான மின்சார வளர்ச்சி மற்றும் உற்பத்தி நிலவரம்...
மின்வெட்டுக்கு ஊழியர் பற்றாக்குறையே காரணம்: மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் திட்டவட்டம்
admin - 0
தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்சனைக்கு ஊழியர்கள் பற்றாக்குறை தான் காரணம் என தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் பின்புற வாயிலில் தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது.
இதில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கண்டன...
திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவு: சென்னை, தேனி, தருமபுரி, திருப்பூர், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளின் உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு மிகவும் அடிப்படைத் தேவையான உயிர்காக்கும் மருந்துகளை வழங்க முடியாமல் என்ன செய்துக்கொண்டிருக்கிறது சுகாதாரத்துறை? இளம்பிஞ்சுகளின் விரலில் மோதிரம்...
சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு, மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 9-ம் தேதி இரவு அமைந்தக்கரையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், முன்னேற்றம் ஏற்படுவதாகவும் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், முதல்வர் விஜய் நேற்று மருத்துவமனைக்கு சென்று வி.எஸ். பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும், உடல்நிலை முன்னேற்றம்...
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கில், அன்பில் மகேஸின் நண்பர் வாளாடி கார்த்திக்கிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
கடந்த திமுக ஆட்சியின்போது, தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தரம் உயர்வு, டிடிசிபி உள்ளிட்ட பல்வேறு அரசு அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி மோசடி வழக்கில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் தலைவராக இருந்த திமுக பிரமுகரான பி.டி.அரசகுமார், கடந்த...
அரசு கட்டிடங்களின் தரத்தை குறிக்க 3 வண்ணங்களில் ஸ்டிக்கர் குறியீடுகள்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு
admin - 0
அரசு கட்டிடங்கள் எந்த தரத்தில் உள்ளன என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள 3 வண்ணங்களில் ஸ்டிக்கர் குறியீடுகள் அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டு துறையின் புதிய திட்டங்கள் மற்றும் சீரமைப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.
கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: தற்போதைய தலைமைச்...
தொடர் வேலைநிறுத்த போராட்ட முடிவை வங்கி ஊழியர்கள் கைவிட வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பொதுத்துறை வங்கி தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த அமைப்பு மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகளின் தொழிற்சங்கங்கள் இணைந்து, இரண்டு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தப் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தன.
வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கிச் செயல்பாடுகளை மேற்கொள்ளுதல், செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தை திரும்பப் பெறுதல் ஆகிய கோரிக்கைகளை சங்கங்கள் முன்வைக்கின்றன.
விரிவான...
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அரசு ஊழியர் மீது வழக்கு பதிவதற்கு முன்பு நிர்வாக ரீதியான விசாரணை கட்டாயம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
admin - 0
எஸ்சி, எஸ்டி வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் அரசு ஊழியர் மீது வழக்கு பதிவதற்கு முன் நிர்வாக ரீதியாக கட்டாயம் விசாரணை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் பகுதியில் நில ஆக்கிரமிப்பு புகார் தொடர்பான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், காவல் அதிகாரிகள் கடமை தவறியதாகக் கூறி எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் பிரிவு 4-ன் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்ய...
60 வயது நிறைந்த அனைத்து விவசாயிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
admin - 0
அறுபது வயது நிறைந்த அனைத்து விவசாயிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை: 60 வயது நிரம்பிய விவசாயிகளுக்கு மாதம் ரூ.3ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் பிரதான் மந்திரி கிசான் மாந்தன் யோஜனா என்கிற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
2 ஹெக்டர் நிலத்துக்கு கீழ் உள்ள விவசாயிகள் மட்டுமே இதில் இணையலாம் என வரன்முறை உள்ளதால் இதர விவசாயிகள்...









