திண்டுக்கல், தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி வெங்கடாச்சலத்தின் விருப்ப ஓய்வு ஆவணங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடைக்கானலைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல், தேனி மாவட்ட முன்னாள் ஆட்சியர் வெங்கடாச்சலம்.
இவர் 2012 பிப்.29 முதல் 2018 பிப்.24 வரை ஆட்சியராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அனுப்பினேன்.
புகாரின்பேரில்...
கோயில் சொத்துகளை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகள் தவறு இழைக்கக் கூடாது: ஐகோர்ட் நீதிபதி அறிவுரை
admin - 0
கோயில் சொத்துகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் உள்ள அதிகாரிகள் அதில் தவறு இழைக்கக்கூடாது என அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக திருத்தொண்டர் அறக்கட்டளை தலைவரான சேலம் ஏ.ராதாகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் அறுபத்து மூவர் உலா மற்றும் பிரம்மோற்சவம் போன்ற திருவிழாக்களின் வரவு - செலவு கணக்கு விவரங்களை இந்து சமய...
இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேர முயற்சிகளைத் தமிழ்நாடு இப்போதுதான் பார்க்கிறது என திமுக எம்.பி. வில்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “தமிழக அரசியலில் ‘மாற்றம்’ கொண்டு வரப்போவதாக அவர்கள் சொன்னதன் அர்த்தம் இப்போதுதான் எனக்குப் புரிகிறது. இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேர முயற்சிகளைத் தமிழ்நாடு இப்போதுதான் பார்க்கிறது. இத்தனையும் பதவியேற்பதற்கு முன்பே நடக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 108 இடங்களில் வென்றுள்ள தனிப்பெரும்...
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியைக் காண வரும் ரசிகர்களின் வசதிக்காக, போட்டி நடைபெறும் நாளன்று மெட்ரோ ரயில்களில் இலவசமாக பயணிக்கலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நடப்பு ஐபிஎல் தொடரின் 53-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் வரும் மே 10-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளன.
இதையொட்டி, ரசிகர்களுக்கு தடையற்ற பயண...
தமிழகத்தின் நலன் கருதி தமிழக மக்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் அரசியல் செய்து வருகின்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவை அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும் ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் கிடைக்காததால்...
தவெக ஆட்சியமைப்பதை தடுக்க பாஜக முயற்சிக்கிறதா? – கம்யூ., விசிகவுக்கு நாராயணன் திருப்பதி கண்டனம்
admin - 0
தவெக ஆட்சியமைப்பதை தடுக்க பாஜக முயற்சிக்கிறது என காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக கூறிவருவது கண்டிக்கத்தக்கது என பாஜக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் தவெக ஆட்சியமைப்பதை தடுக்க பாஜக முயற்சிக்கிறது என்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கூறிவருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகள் எந்த கட்சிக்கும் பெரும்பான்மையை அளிக்காத நிலையில், ஆளுநர், சட்டப்படி...
நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் உள்ள ஜிஎஸ்டி பவன் கட்டிடத்தின் 5-வது தளத்தின் ஓர் அறையிலிருந்து நேற்றுமுன்தினம் இரவு திடீரென புகை வெளியேறியது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த ஊழியர்கள், உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஊழியர்கள் காளீஸ்வரன் (23), சபரிநாதன் (24) ஆகியோர் புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினர்.
உடனே அவர்கள் மீட்கப்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்த எழும்பூர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு...
தென்கோடி மாவட்டத்தில் மலர் கட்சியின் வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்காக 3 தவணைகளில் ‘தேர்தல் நிதி’ வந்ததாம். அதில் முதலில் வந்த நிதியில் பெரும் பகுதியை அந்த மாவட்டத்தின் ‘கோல்டு’ பிரமுகர் வேறுவிதமாக பை பாஸ் செய்துவிட்டாராம்.
தனது சகோதரியின் பேரனுக்காக பெங்களூருவில் மருத்துவக் கல்லூரி கட்டிக் கொண்டிருக்கிறாராம் ‘மிஸ்டர் கோல்டு’. அதன் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்காக வந்த நிதியில் பெரும் பகுதியை...
அண்மையில் நடந்த முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 28 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் வென்றுள்ளது. இந்த வெற்றி காங்கிரஸ் கட்சியின் சொந்த பலத்தால் கிடைத்துவிடவில்லை. திமுக கூட்டணியால்தான் சாத்தியமானது. நான் எம்.பி.யாக இருந்த மயிலாடுதுறை திமுக கூட்டணிக்கு எஃகு கோட்டையாக இருந்துள்ளது. காரணம் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளில் 5 இடங்களை திமுக கூட்டணி கட்சிகள் வென்றுள்ளன. இரண்டு இடங்கள் திமுகவுக்கும்,...
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அதன்படி மொத்தம் 7.53 லட்சம் மாணவர்கள் (95.20 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 4,06,167 பேர் (97 சதவீதம்). தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 3, 47, 527 பேர் (93.19 சதவீதம்)
இந்த முறையும் வழக்கம்போலவே தேர்ச்சி விகிதத்தில் மாணவிகளே அதிகம் இடம்பெற்றுள்ளனர். மாணவர்களை விட 3.81 சதவீதம் அதிகமாக மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.
இந்த தேர்வில் பங்கெடுத்த...










