யானைக்கவுனி பாலம் அருகே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரி 50 தண்ணீர் லாரிகள் சிறைபிடிப்பு: ரயில்வே குடியிருப்புவாசிகள் போராட்டம்

0
35

யானைக்க​வுனி பாலம் அருகே சேதமடைந்த சாலைகளை சீரமைக்​கக் கோரி, 50-க்​கும் மேற்​பட்ட தண்​ணீர் லாரி​களை சிறைபிடித்​து, மேத்யூ ரயில்வே குடி​யிருப்பு வாசிகள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இதனால், அங்கு பரபரப்பு ஏற்​பட்​டது. சென்னை யானைக் கவுனி பாலத்​தின் கீழே சால்ட் கொட்​டாய் பகு​தி​யில் நீரேற்று நிலை​ய​மும், மேத்யூ ரயில்வே குடி​யிருப்​பும் உள்​ளது. இங்கு ரயில்வே பாது​காப்பு படை​யினர் (ஆர்​பிஎஃப்), ரயில்வே போலீஸ், ரயில்வே தொழில்​நுட்ப பணி​யாளர்​கள் என 100 குடும்​பத்​தினர் வசிக்​கின்​றனர்.

ஒரு நாளைக்கு குறைந்​த​பட்​சம் 200-க்​கும் மேற்​பட்ட தண்​ணீர் லாரி​கள் இப்​பகு​திக்கு வந்து செல்​வ​தால். இந்த​சாலை அடிக்​கடி சேதமடைந்​து வரு​கின்​றன. அந்​தவகை​யில், தற்​போது சாலை சேதமடைந்து குண்​டும் குழி​யு​மாக உள்​ளது.

மழைக்​காலத்​தில், தண்​ணீர் தேங்கி ரயில்வே குடி​யிருப்​பிலிருந்து வெளி​யில் வர முடி​யாத நிலை உள்​ளது. இதுதொடர்​பாக, சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களின் கவனத்​துக்கு பலமுறை கொண்டு சென்​றும் எந்த நடவடிக்​கை​யும் இல்​லை.

இதற்​கிடை​யில், இப்​பகு​தி​யில் நேற்று முன்​தினம் மாலை பெய்த கனமழை​யால், இந்த ​சாலை​யில் ஆங்​காங்கே தண்​ணீர் தேங்​கியது, இதனால், குண்​டும் குழி​யு​மான இந்த ​சாலை​யில் நடந்து செல்​ல​வோ, வாக​னங்​களில் செல்​லவோ முடி​யாத நிலை ஏற்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், அதி​காரி​களின் மெத்​தனப் போக்கை கண்​டித்​து, ரயில்வே குடி​யிருப்​பைச் சேர்ந்​தவர்​கள் 50-க்​கும் மேற்​பட்ட தண்​ணீர் லாரி​களை நேற்று காலை சிறை பிடித்து போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இது குறித்​து, தகவலறிந்த பெரியமேடு போலீ​ஸார் சம்பவ இடத்​துக்கு விரைந்து போராட்​டத்​தில் ஈடு​பட்ட ​மக்​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​தினர்.

லாரி​கள் சிறைபிடிக்​கப்​பட்​டது தொடர்​பாக, சென்னை குடிநீர் வாரிய உயர​தி​காரி​களுக்​கும், மாநக​ராட்சி மற்​றும் காவல் துறை உயர் அதி​காரி​களுக்​கும் பெரியமேடு போலீ​ஸார் தகவல் தெரி​வித்​தனர்.

சாலையை சீரமைக்க போர்க்​கால நடவடிக்கை எடுப்​ப​தாக அதி​காரி​கள் உறுதி அளித்​ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. தண்ணீர் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here