அமைந்தகரை பகுதியில் தவெக கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரி வழக்கு: 6 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவு
admin - 0
நடிகர் விஜய்-ன் தமிழக வெற்றிக் கழக கொடிகம்பம் அமைக்க அனுமதி கோரிய விண்ணப்பத்தின் மீது 6 வாரங்களில் முடிவெடுக்க சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அமைந்தகரை திருவீதி அம்மன் கோயில் தெருவில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கம்பம் அமைக்க அனுமதி அளிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடக் கோரி, அக்கட்சியின் வழக்கறிஞர் அணி மாவட்டச் செயலாளரான சரத்குமார், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், திருவீதி அம்மன் கோயில்...
சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுகளை வீசிய விவகாரத்தில், அவர் வேண்டுமென்றே தன் மீது குற்றம்சாட்டுவதாகவும், கழிவுகளை வீசியவர்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் என்றால் நிரூபிக்கட்டும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுகளை வீசிய சம்பவத்தை ஏற்கெனவே தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டித்து இருக்கிறேன். இவ்விவகாரத்தில் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தில் இருந்து...
சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.4.35 கோடியில் பேருந்து நிழற்குடைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் 387 கி.மீ. நீளமுடைய 471 பேருந்து தட சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இவற்றின் வழியாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 31 பணிமனைகளில் இருந்து நாள்தோறும் 3,233 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் நாளொன்றுக்கு 30 லட்சத்து 17 ஆயிரம் பேருக்கு மேல் பயன்பெற்று வருகின்றனர். இந்த வழித்தடங்களில்...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஞானசேகரன் என்பவர் அத்துமீறி நுழைந்து, மாணவர் ஒருவரை அடித்து உதைத்துவிட்டு உடன் இருந்த மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அதை செல்போனிலும் படம் எடுத்துள்ளார்.
அப்போது அவர் செல்போனுக்கு அழைப்பு வந்ததாகவும், அவர் ஒருவரிடம் சார்...
மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை விடுதலை செய்த காவல் துறைக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த மனநலம் குன்றிய கல்லூரி மாணவியை 10-க்கும் மேற்பட்டோர் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய செய்தி அதிர்ச்சிஅளிக்கிறது. இது...
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் உரிமை மீட்பு மாநாடு என்ற பெயரில், தமிழக முதல்வருக்கு பிப்.8-ம் தேதி நன்றி அறிவிப்பு விழா நடைபெறுகிறது.
ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் வெ.சோமசுந்தரம், இரா.தாஸ், எஸ்.ஞானசேகரன் ஆகியோரின் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது.
அரசு ஊழியர்களுக்கு உத்தரவாதப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS) தமிழக முதல்வர் ஜன. 3-ம் தேதி அறிவித்தைத் தொடர்ந்து, சென்னை ஒய்எம்சிஏ விளையாட்டு மைதானத்தில் பிப்.8-ம் தேதி...
தனித்துவமான ஒலி அனுபவத்தை வழங்கும் சென்னையில் மதரசனா திருவிழா – இசை நிகழ்ச்சி: டிச. 26-ம் தேதி வரை நடக்கிறது
admin - 0
தனித்துவமான ஒலி அனுபவத்தை வழங்கும் வகையில், மதரசனா திருவிழா - இசை நிகழ்ச்சி சென்னையில் வரும் டிச.26-ம் தேதி வரை நடைபெறுகிறது. மார்கழி மாதத்தையொட்டி மதரசனா அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் கர்நாடக இசைக் கலைஞர்களின் புகழ்பெற்ற இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் நடப்பாண்டில் ‘மதரசனா திருவிழா 2024’ சென்னை தரமணியில் உள்ள ஆசிய ஊடகவியல் கல்லூரியின் எம்.எஸ்.சுப்புலட்சுமி அரங்கில் நேற்று தொடங்கியது. தனித்துவமான ஒலி இசை...
லண்டனில் சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்துடன் ரூ.11,000 கோடி முதலீடு மற்றும் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் விஜய் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. மேலும் சில நிறுவனங்களுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுகுறித்து முதல்வர் விஜய் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இங்கிலாந்து, லண்டன் நகரில் இன்று (14.09.2026), சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Ltd.,) நிறுவனம் அதன் ஐரோப்பா மற்றும்...
மாநகராட்சி சார்பில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கான சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது. 8 இடங்களில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநகராட்சி சார்பில், திருவிக நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம் ஆகிய செல்லப் பிராணி சிகிச்சை மையங்கள், சோழிங்கநல்லூரில் உள்ள நாய் இனக்கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றில் கடந்த அக்.8-ம் தேதிமுதல் செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி...
வாகன விபத்தை தாக்குதலாக திரித்து வீடியோ வெளியீடு: தென் மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி விளக்கம்
admin - 0
தேனி அருகே நடந்த விபத்து சம்பவத்தை கர்நாடக பக்தர்கள் மீதான தாக்குதலாக திரித்து சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக தென் மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வேன், கார்களில் கடந்த 12-ம் தேதி சபரிமலைக்குச் சென்றனர். தேனி அருகே திண்டுக்கல்-தேனி புறவழிச்சாலையில் சென்றபோது, அவர்களது வேன் மீது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் வேனின் பின்பகுதியில்...






