பிரதமர் மோடியின் தமிழக வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து

0
214

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, சென்னை ராயபுரத்தில் நேற்றுநடைபெற்றது. கட்சியின் அமைப்புச் செயலாளர் ராயபுரம் மனோ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பங்கேற்று, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

யாரையும் நம்பி நாங்கள் இல்லை: பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பிரதமர் மோடி தமிழகத்துக்கு வருவதால் எந்ததாக்கமும் ஏற்படாது. பாஜக வழக்கமாக வாங்கும் வாக்குகளைவிட 1 சதவீதம் வாக்குகள் கூடலாம். அவர்கள் சமூக ஊடகங்களை நம்பியுள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை பாஜக பூஜ்ஜியம்தான். அவர்களின் மிரட்டலுக்கு அஞ்சும் இயக்கம் அதிமுக இல்லை.யாரையும் நம்பி நாங்கள் இல்லை. மக்களின் ஆதரவு அதிமுகவுக்குதான். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here