Google search engine
ம​திப்​புக் கூட்​டப்​பட்ட பிளாஸ்​டிக்பொருட்​கள் ஏற்றுமதியில் தமிழகம் முன்​னணி மாநில​மாக உரு​வெடுக்​கும் என்று குறு, சிறு, நடுத்தர தொழில் துறை செயலர் பிரதீப் யாதவ் நம்​பிக்கை தெரி​வித்​துள்​ளார். மத்​திய வர்த்​தகம், தொழில் துறை அமைச்​சகத்​தின்​கீழ் செயல்​படும் பிளாஸ்​டிக் ஏற்​றுமதி மேம்​பாட்டு கவுன்​சில், மத்​திய பெட்​ரோகெமிக்​கல்ஸ் பொறி​யியல், தொழில்​நுட்ப நிறு​வனங்​கள் சார்​பில் இந்த ஆண்​டுக்​கான தொழில் துறை மாநாடு சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. தமிழக குறு, சிறு, நடுத்தர தொழில் நிறு​வனங்​கள் துறை செயலர்...
​கா​விரி விவ​காரத்தை அரசி​யல்ரீதி​யாக பார்க்​கக்​கூ​டாது என சுற்​றுலாத்​துறை அமைச்​சர் ராஜேஷ்கு​மார் கூறி​யுள்​ளார். சுற்​றுலா வளர்ச்சிக் கழகம் சார்​பில் நடத்​தப்​படும் படகு குழாம்​கள், வண்​டலூர் உயி​ரியல் பூங்கா உள்​ளிட்ட பல்​வேறு பகு​தி​களில் சிறு உணவு​கள், தின்​பண்​டங்​கள் கிடைக்க செய்​யும் வகை​யில் “கு​யிக் பைட்​ஸ்” என்ற சிற்​றுண்டி துரித உணவகங்​கள் செயல்​பட்டு வரு​கின்றன. இந்​த நிலை​யில் சென்னை தலை​மைச்​ செயல​கத்​தில் பணி​யாற்​றும் பணி​யாளர்​கள், அதி​காரி​கள் மற்​றும் பொது​மக்​கள் பயன்​பாட்​டுக்​காக டீ, காபி, கேக்...
டாஸ்​மாக் நிறு​வனத்​தில் ஒப்​பந்​தப் புள்​ளி, போக்​கு​வரத்து செல​வு, போலி ரசீது, பழைய பாட்​டில்​களுக்கு அதிக விலை நிர்​ண​யம் செய்​தது என பல கோடி ரூபாய்க்கு முறை​கேடு நடந்​துள்​ள​தாக சென்னை லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் பதிவு செய்​துள்ள எஃப்​ஐஆரில் கூறப்​பட்டுள்​ளது. டாஸ்​மாக் முறை​கேடு விவ​காரத்​தில் திமுக முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி, டாஸ்​மாக் முன்​னாள் நிர்​வாக இயக்​குநர் விசாகன் உள்​ளிட்​டோர் மீதான வழக்கு தொடர்​பாக சென்னை லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் பதிவு...
சென்​னை​யில் மெட்ரோ ரயில் திட்​டத்​தின் 2-ம்​கட்ட பணி​களை முதல்​வர் விஜய் நேரில் ஆய்வு செய்​ததுடன், பொதுமக்களு​டன் சக பயணி​யாக ரயி​லில் பயணம் செய்​தார். தமிழக முதல்​வ​ராக விஜய் பொறுப்​பேற்ற பின்பு வார நாட்​களில் தின​மும் தலை​மைச் செயல​கம் வந்து அலு​வல் பணி​களை மேற்​கொண்​டு வரு​கிறார். அதன்​படி பணி​களை முடித்​து​விட்டு மாலை வீடு திரும்​பு​கை​யில் அவ்​வப்​போது ஆய்​வுக்கு செல்​வதை வழக்​க​மாக கொண்​டுள்​ளார். அதன் தொடர்ச்​சி​யாக சென்னை மெட்ரோ ரயில் 2-ம்​ கட்ட...
தமிழக அரசின் 2026-27-ம் நிதி​யாண்​டுக்​கான பட்​ஜெட் ஆகஸ்ட் 5-ம் தேதி தாக்​கல் செய்​யப்பட உள்​ளது. இது தொடர்​பாக துறை​கள் வாரி​யாக முதல்​வர் விஜய் கடந்த ஜூலை 2-ம் தேதி முதல் ஆலோ​சனைக் கூட்​டங்​களை நடத்​திவரு​கிறார். அதன்​படி சட்​டம் மற்​றும் சிறை​கள் சீர்​திருத்​தப் பணி​கள் துறை​யின் செயல்​பாடு​கள் குறித்த ஆலோ​சனைக் கூட்​டம் தலை​மைச் செயல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் முதல்​வர் விஜய், அமைச்​சர்​கள் சி.டி.ஆர்​.நிர்​மகு​மார், நெ.மரிய வில்​சன், தலை​மைச் செயலர் எம்​.​சாய்​கு​மார் மற்​றும்...
கோவை மருத்​துவ தம்​ப​தி​களான சகுபர் சாதிக் - ஹஸ்​மத் பர்​சா​னா, தங்​கள் மருத்​து​வ​மனையை அடமான​மாக வைத்து எல்​ஐசி வீட்டு வசதி நிதி நிறு​வனத்​தில் கடன் பெற்​னர். கரோனா கால​கட்​டத்​தில் நிதி நெருக்​கடி​யால் கடனை திருப்பி செலுத்த முடி​யாமல் ஒரே தவணை​யாக ரூ.4 கோடி செலுத்​து​வ​தாக பேசி முடிவு செய்​தனர். அந்த தொகையை எல்​ஐசி நிதி நிறு​வனத்​தில் செலுத்தி பத்​திரத்தை மீட்டு ரெப்கோ வங்​கி​யில் கூடு​தல் கடன் பெறும் நோக்​கில், தனி​யார் நிதி...
வடகிழக்கு பரு​வமழை​யின் போது ஏற்​படும் வெள்ள பாதிப்பை குறைக்​கும் வகை​யில், நாராயணபுரம், வேளச்​சேரி ஏரி​களில் தூர்​வாரும் பணியை அமைச்​சர் என்​.ஆனந்த் தொடங்கி வைத்து ஆய்வு மேற்​கொண்​டார். தமிழகத்​தில் வடகிழக்கு பரு​வ​மழை தொடங்க உள்ள நிலை​யில், முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக மாநிலம் முழு​வதும் ஆறு, ஏரி மற்​றும் குளங்​களைத் தூர்​வாரி சீரமைக்​கும் பணி​கள் போர்க்​கால அடிப்​படை​யில் நடை​பெற்று வரு​கின்​றன. குறிப்​பாக, சென்​னை​யில் உள்ள முக்​கிய நீர்​நிலைகளைச் சீரமைக்​கும் பணி​களை நீர்​வளத் துறை அமைச்​சர் என்​.ஆனந்த்...
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களில் இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான ராமேஷ்வரப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை 7 மணியில் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிகிறது. அதேபோல், செந்தில் பாலாஜியின் உதவியாளர்...
மேற்கூரை சூரியமின் திட்​டங்​களை விரைவுபடுத்த ஒருங்​கிணைந்த செயலி அறி​முகப்​படுத்​தப்​படும் என, அமைச்​சர் சி.டி.ஆர்​.நிர்​மல்​கு​மார் தெரி​வித்​தார். தமிழ்​நாடு மின்​சாரவாரி​யம் மற்​றும் சென்னை ஐஐடி இடையே தொழில்​நுட்ப ஒத்​துழைப்​புக்​காக மேற்​கொள்​ளப்​பட்ட புரிந்​துணர்வு ஒப்​பந்​தத்​தின் தொடர்ச்​சி​யாக, மின்துறை அமைச்​சர் சி.டி.ஆர்​.நிர்​மல்​கு​மார் சென்னை ஐஐடி வளாகத்​துக்கு நேற்று சென்று பல்​வேறு நவீன மின்​சார தொழில்​நுட்​பங்​களை ஆய்​வு செய்​தார். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் கூறிய​தாவது: தமிழகத்தை இந்​தி​யா​வின் முன்​னணி பசுமை எரிசக்தி மாநில​மாக மாற்​றும் நோக்​கில் பல்​வேறு முக்​கிய...
அவதூறு வழக்​கு​களில் பாரபட்​ச​மான நடவடிக்​கையை வேடிக்கை பார்க்​க​மாட்​டோம் என உயர் நீதி​மன்​றம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. மதுரையைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்​வாகி தீரன் திரு​முரு​கன் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: யூ டியூபரும், சினிமா விமர்​சகரு​மான பிஸ்​மி, தனி​யார் யூடியூப்​ சேனலுக்கு ஜூலை 3-ல் அளித்த பேட்​டி​யில் நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான், திமுக தலை​வர் ஸ்டா​லினிடம் ரூ.100 கோடி பெற்​ற​தாக ஆதா​ரமற்ற குற்​றச்​சாட்டை...