Google search engine
கடந்த 2024-ம் ஆண்டு டிஆர்பி தேர்​வில் அறிவிக்​கப்​பட்ட ஆசிரியர் பயிற்​றுநர் காலி பணி​யிடங்​களை உடனே நிரப்ப வேண்​டும் என்று சான்​றிதழ் சரி​பார்ப்​பில் பங்​கேற்ற ஆசிரியர்​கள் முதல்​வர் விஜய்க்கு வேண்​டு​கோள் விடுத்​துள்​ளனர். பட்​ட​தாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்​றுநர் (பிஆர்​டி) காலி பணி​யிடங்​களை நிரப்ப கடந்த 2024-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரி​யத்​தால் போட்​டித் தேர்வு நடத்​தப்​பட்​டது. அதில் 2,850 பட்​ட​தாரி ஆசிரியர்​கள் தேர்வு செய்​யப்​பட்​டு, பணி​யிலும் சேர்ந்​து​விட்​டனர். ஆனால், இதே தேர்​வில் தேர்ச்சி...
“மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்” என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆனந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் நேற்று திமுக சார்பில், தவெக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, முதல்வர் விஜய் மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், அவரது பேச்சுக்கு மாற்று கட்சியினர் மற்றும் அரசியல் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தச் சூழலில் தவெக பொதுச்...
மாமல்​லபுரத்​தில் சில தினங்​களுக்கு முன்பு நடந்த காங்​கிரஸ் மாவட்ட தலை​வர்​கள் மற்​றும் நிர்​வாகி​கள் பயிற்சி முகாம் நிறைவு விழா​வில், காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல்காந்தி பங்​கேற்​கிறார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், “பாஜக​வின் தொகுதி மறு​வரையறை மசோ​தாவை யார் ஆதரித்​தா​லும், தமிழகத்​துக்கு துரோகம் செய்​கிறவர்​கள்'' என்று தெரி​வித்​திருந்​தார். இந்​நிலை​யில், திமுக மக்​களவை உறுப்​பினர் தயாநி​தி​மாறன் எக்ஸ் வலை​தளப்​ப​தி​வில், “நம்​பிக்​கையை விற்​று, பதவியை வாங்​கும் நச்​சுப்​பாம்​பு​கள். தமிழகத்​துக்கு வந்​து​விட்டு காவிரி உரிமை​கள் குறித்து...
எந்த எதிர்​பார்ப்​பு​களும் இன்றி இளைஞர்​கள் பொது சேவைக்கு வர வேண்​டும் என வீ த லீடர்ஸ் இயக்க முதன்​மைச் சேவகர் அண்​ணா​மலை வலி​யுறுத்தி உள்​ளார். கன்​னி​யாகுமரி முதல் தூத்​துக்​குடி வரை 175 கிலோ மீட்​டர் நீள​முள்ள கடற்​கரையை தூய்​மைப்​படுத்​தும் பணியை வீ த லீடர்ஸ் இயக்​கம் நேற்று தொடங்​கியது. கன்​னி​யாகுமரி​யில் அண்​ணா​மலை தொடங்கி வைத்​து, கடற்​கரை​யில் தூய்​மைப் பணி மேற்​கொண்​டார். பின்​னர் அவர் பேசி​ய​தாவது: தமிழகத்​தின் மொத்த கடற்​கரை நீளம் 1,075...
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவருக்கு புகழஞ்சலி வெளியிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் விஜய் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து, விடுதலை முழக்கமிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன். கிழக்கிந்திய கம்பெனியின் வரி வசூலையும், அந்நிய ஆதிக்கத்தையும் எதிர்த்ததோடு, தாய்நாட்டின் விடுதலைக்காக தனது இன்னுயிரைத்...
‘கர்நாடகாவில் உள்ள அரசாங்கம் அங்குள்ள அரசியல் கட்சிகளையும், விவசாயிகளையும் மதிக்கிறது. இங்கிருக்கும் அரசாங்கம் செயல்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது’ என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமி, ‘விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவரின் தியாகத்தையும், வீரத்தையும் போற்றி வணக்குகின்றேன். காவிரி விவகாரத்தில் இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்றே தெரியவில்லை. காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரத்தில் அனைத்துக்கட்சிகள் மற்றும்...
மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரைப்பாக்கம் கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை எனக் கூறி, கிராம மக்கள் (திங்கள் கிழமை) இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரைப்பாக்கம் கிராமத்தில் சுமார் 300 குடும்பங்களைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கிராமத்தின் 7 தெருக்களுக்கும் வழக்கமாக குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக குடிநீர்...
‘கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்டக்கூடாது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறிவிட்டால் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகத் தயார்’ என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் கர்நாடகா சென்று, கர்நாடக முதல்வரைச் சந்தித்து பேசிவிட்டு மேகேதாட்டு அணை கட்டும் பகுதியைப்பார்வையிட்டால் அது தமிழகத்துக்கு மிகப்பெரிய பாதகமாக அமையும். கர்நாடகா அணையே கட்டக்கூடாது என்று நாம் கூறிக்கொண்டிருக்கும்போது, அங்கு...
சென்​னை​யில் இன்று மாலை நடை​பெறும் விழா​வில் 665 போலீ​ஸாருக்​கும் முதல்வர் விஜய் தனது கைகளாலேயே பதக்​கங்​களை வழங்க வேண்​டும் என்ற கோரிக்கை காவல் துறை​யினரிடம் வலுத்​துள்​ளது. தமிழகத்​தில் சிறப்​பாகப் பணி​யாற்​றும் போலீஸ் அதி​காரி​கள், காவலர்​கள், சீருடைப் பணி​யாளர்​களை கவுர​வித்து ஆண்​டு​தோறும் பதக்​கம் வழங்​கப்​பட்டு வரு​கிறது. அந்த வகை​யில், சென்னை எழும்​பூரில் உள்ள ராஜரத்​தினம் மைதானத்​தில் இன்று மாலை நடை​பெறும் விழா​வில், குடியரசுத் தலை​வர் காவல் பதக்​கம், முதல்​வர் காவல் பதக்​கம், மத்திய...
 தமிழகத்தில் உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உற்பத்தி திட்டம் மற்றும் தமிழகத்தின் முதல் சர்வதேசப் பல்கலைக்கழக வளாகத்தை நிறுவ முன்னணி நிறுவனங்களுடன் முதல்வர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ‘சப்’ நிறுவனம், தனது உலகளாவிய திறன் மையம் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த ‘நார்டெக்ஸ்’ நிறுவனம், தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஆகியவற்றை தமிழகத்தில்...