முதல்வரின் அனுமதி பெற்று ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிப்பேன்: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி
admin - 0
முதல்வரின் அனுமதி பெற்று ஆசிரியர்களின் என்னென்ன கோரிக்கைகளை நிறைவேற்ற முடியுமோ அந்த கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்ற போராடுவேன் என்று ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளிடம் பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் உறுதி அளித்தார்.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் அனைத்து ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் நேற்று கலந்துரையாடினார்.
முன்னதாக அமைச்சர் பேசியதாவது: உலகில் பேசி தீர்க்க முடியாத பிரச்சினைகள் எதுவும் கிடையாது....
ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி, அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமையகம் அருகே தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான தொழிலாளர்கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, கூட்டமைப்பின் மாநில தலைவர் மகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறோம். புயல், மழை, கரோனா, போன்ற அனைத்து பேரிடர் காலங்களிலும் உயிரை பொருட்படுத்தாமல் பாடுபட்டோம்.
எங்கள் நீண்ட நாள் கோரிக்கையான தினக்கூலி அடிப்படையில், ரூ.965-ஐ அரசே...
திமுக எம்எல்ஏக்களை கைது செய்வதையும், அதிமுக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதையும் தவெக அரசு முழுநேரபணியாகச் செய்து வருகிறது என்று, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி விமர்சித்துள்ளார்.
தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டும் தொனியிலும் பேசியதாக கைது செய்யப்பட்ட விளாத்திக்குளம் தொகுதி எம்எல்ஏ .வி.மார்க்கண்டேயன், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு வாரமாக சிறையில் உள்ள அவரை, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி...
திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக இன்று (ஜூலை 28) நடைபெற உள்ளது, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ள தவெகவின் முதல் பொது பட்ஜெட் ஆகஸ்ட் 5-ம் தேதியும், வேளாண் பட்ஜெட் மே 6-ம் தேதியும் வெளியிடப்பட உள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பது தொடர்பான திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று...
தவெகவின் முதல் பட்ஜெட், கட்சி வளர்ச்சி குறித்து விவாதிக்க அடுத்த மாதம் அதிமுக செயற்குழு: பழனிசாமி திட்டம்
admin - 0
அதிமுக செயற்குழுக் கூட்டத்தை அடுத்த மாதம் கூட்ட கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வென்றது. தவெக 108 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது.
ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள அதிமுகவின் ஆதரவை தவெக நாடியது. தொடர்ந்து பழனிசாமியின் எதிர்ப்பை மீறி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவளித்தனர்.
பொதுக்குழுவைக் கூட்டி, அதிமுகவின் தோல்விக்கான காரணத்தை விவாதிக்க...
விதிகளை மீறி கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை வெளியிட்ட விவகாரம்: யூடியூபர் இர்ஃபானிடம் சுகாதாரத்துறை மீண்டும் விசாரணை
admin - 0
யூடியூபர் இர்ஃபான் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, தனது கர்ப்பிணி மனைவியை துபாய்க்கு அழைத்து சென்று, மருத்துவப் பரிசோதனை செய்து, கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை அறிந்து கொண்டார்.
அதனை, தனது யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டு அறிவித்தார். அப்போது பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததால், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகம், இர்ஃபானிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதுதொடர்பாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, தனது செயலுக்கு...
அடையாளம் தெரியாத நபர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக, சென்னை காவல் ஆணையரிடம், மேயர் பிரியா புகார் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சென்னை காவல் ஆணையரிடம் ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத் தளங்களில் தன்னை குறித்து அவதூறான தகவல்கள் மற்றும் தவறான பதிவுகள் பரப்பப்படுகிறது.
இதன் மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடைபெறுகிறது. மேலும், சென்னை மாநகராட்சி...
தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சுங்கச்சாவடிகளில் மாதாந்திர பாஸ் கட்டணம் ஏப்ரல் முதல் 3-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 77 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. சுங்கச்சாவடிகளில் ஒவ்வோர் ஆண்டும், 5 சதவீதம் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
ஆண்டு தோறும் ஏப்.1-ம் தேதி கட்டணம் மாற்றப்படுகின்றது. இந்நிலையில் சுங்கச்சாவடிகளுக்கு அருகே 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவர்களுக்கான மாதாந்திர சுங்கச்சாவடி பாஸுக்கான கட்டணத்தை...
வந்தேபாரத் விரைவு ரயிலில் பயணிக்கு வழங்கிய மசால் வடையில் `ஃபெவி க்விக்' (உடனடியாக ஒட்டும் பசை) இருந்ததால், அந்த பயணி கடும் அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து உணவை வழங்கிய கேட்டரிங் ஒப்பந்த நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க பயணிகள் போர்க்கொடி தூக்கினர். சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் சேகர். இவர் லயன்ஸ் கிளப்பை சேர்ந்த 150 பேருடன் மைசூரு சென்றுவிட்டு நேற்று மதியம் சென்னைக்கு வந்தே பாரத் விரைவு ரயிலில் புறப்பட்டார்....
கோயில்களில் கட்டண தரிசனத்தை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
admin - 0
கோயில்களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைமுறையில் உள்ள கட்டண தரிசன முறையை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
தமிழகம் முழுவதும் சுமார் 65 முக்கிய இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில், சிவானந்தா சாலையில்...










